sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

15

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 961

குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு; யு.ஜி.சி., அறிவுறுத்தல்

கல்விமலர் செய்திகள்

1 minute ago

துலாம்: சித்திரை 3, 4 ம் பாதம்..: எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதமாகும். தைரிய, வீரிய, பராக்கிரம காரகன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முடியாது என மற்றவர்கள் கைவிட்ட வேலைகளை எடுத்து அதில் வெற்றி காண்பீர்கள். உங்கள் லாபாதிபதி சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். செய்யும் தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். பணியாளர்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். ராசி நாதனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவர்.  வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு விளைச்சலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும்.சந்திராஷ்டமம்: டிச. 31அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 24, 27. ஜன. 6, 9பரிகாரம் அபிராமியை வழிபட அல்லல் நீங்கும். நன்மை நடக்கும்.சுவாதி: வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் எனத் தெரிந்து வாழும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். யோகக்காரகன் ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் கர்ம காரகனுடன் இணைந்து சஞ்சரிப்பதால் மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றும். உறவினர்களுக்கும் உங்களுக்கும்  இடைவெளி உண்டாகும். பிள்ளைகளின் வழியாக நெருக்கடிகளை சந்திக்கும் நிலை சிலருக்கு ஏற்படும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். பூர்வீகச் சொத்து விவகாரத்தில் சங்கடம் தோன்றும் என்றாலும், சகாய ஸ்தானத்தில் உங்கள் லாபாதிபதியும், தன குடும்பாதிபதியும் சஞ்சரிப்பதால் எந்தவிதமான நெருக்கடி வந்தாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபமாக மாறும். எப்போதும் தேவையான அளவிற்கு பணம் கையில் இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். இளைய சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். தடைபட்ட வேலைகள் ஒவ்வொன்றாக முடிவிற்கு வரும். டிச 25 க்குள் நீங்கள் எதிர்ப்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். ஜன. 11 முதல் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவர். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். வயதானவர்கள் நிலையில் இருந்த சங்கடம் விலகும். பெண்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: டிச. 31. ஜன. 1அதிர்ஷ்ட நாள்: டிச. 22, 24. ஜன. 4, 6, 13பரிகாரம் பிரத்தியங்கிராவை வழிபட சங்கடம் விலகும். வாழ்வில் வளம் உண்டாகும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்: எந்த ஒன்றையும் முன்னதாக அறிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி காணும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். ஞானக் காரகன் குரு டிச. 21 வரை கடகத்திலும், அதன் பின் மிதுனத்திலும் வக்கிரமாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். குழப்பத்திற்கு ஆட்படுவீர்கள் என்றாலும், வக்கிரமடையும் குரு முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கக் கூடியவர் என்பதால் டிச.21 வரை பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் உங்கள் முயற்சி வெற்றியாகும். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வர வேண்டிய பணம் வரும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். டிச. 22 முதல் திடீர் வாய்ப்பு தேடிவரும். உடல் நிலையிலும், மன நிலையிலும் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். மாதம் முழுவதும் உங்கள் லாபாதிபதி சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்து முயற்சிகளை வெற்றியாக்குவதுடன் பாக்ய ஸ்தானத்தையும் பார்ப்பதால் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். தைரிய வீரிய காரகனும் உங்கள் தன குடும்பாதிபதியுமான செவ்வாய் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரித்து முன்னேற்றங்களை வழங்குவதுடன் உங்கள் சத்ரு ஜெய ஸ்தானத்தையும், ஜீவன ஸ்தானத்தையும் பார்ப்பதால் உடல் பாதிப்பு விலகும். தொழில் ரீதியாக தோன்றிய எதிர்ப்பு மறையும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். வியாபாரம் முன்னேற்றம் பெறும்.  எதிர்பார்த்த லாபம் வரும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஞான மோட்சக் காரகன் கேதுவால் சேமிப்பு உயரும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேரும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் கூடும்.சந்திராஷ்டமம்: ஜன. 1, 2அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 24, 30. ஜன. 3, 6, 12பரிகாரம் மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்.. பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் தன குடும்பாதிபதி குரு வக்ரமடைந்து இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையை உண்டாக்கும். கொடுக்கல், வாங்கலில் நிதானமாக இருப்பது இந்த நேரத்தில் அவசியம். சுக ஸ்தானாதிபதி ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி ராசியை பார்ப்பதால் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்வதும், தாயாரின் உடல்நிலையில் கவனமாக இருப்பதும் அவசியம். உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் நிலையில், கர்ம காரகன் சனியின் பார்வையும் ஜீவன ஸ்தானத்திற்கு உண்டாவதால் தொழிலில் அதிகபட்ச கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலைகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தும். பணியாளர்கள் இந்த நேரத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். இந்த நேரத்தில் மாதம் முழுவதும் உங்கள் ஜீவனாதிபதி சூரியன் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்த நிலை வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உங்களுக்கு உண்டாகும். வேகமாகவும் துணிச்சலாகவும் செயல்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். சில நேரங்களில் மனதில் குழப்பமும், செய்யும் வேலையில் தடை ஏற்பட்டாலும் அதையெல்லாம் தாண்டி நினைத்ததை சாதிப்பீர்கள். இந்த நேரத்தில் யாரை நம்புவது? யாரை நம்பக் கூடாது என்ற தெளிவு உங்களுக்கு உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை இருக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். புதிய வாகனம், சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். வம்பு வழக்குகள் என்ற நிலை முடிவிற்கு வரும். எதிர்ப்பு விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜன. 2அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 21, 27, 30. ஜன. 3, 9, 12பரிகாரம் வீரபத்திரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். மனம் தெளிவு பெறும். அனுஷம்: பொறுமையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதமாகும். சகாய, சுக ஸ்தானாதிபதி சனி சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் மனதில் இருந்த குழப்பம் விலகும். ஆரோக்யம் சீராகும். வாகன யோகம் உண்டாகும். சத்ரு ஜெய ஸ்தானம், ஜீவன ஸ்தானத்தையும் சனி பார்ப்பதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பணியிடத்தில், தொழிலில் ஏற்பட்ட தொந்தரவுகள், மறைமுகத் தொல்லை நீங்கும். எந்த நிலை வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். வம்பு, வழக்கு விவகாரம் சாதகமாகும்.  தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதியதாக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியளிக்கும். நெருக்கடி விலகும் என்றாலும், ஜென்ம ராசியையும் சனி பார்ப்பதால் இந்த நேரத்தில் நேர்மையாக செயல்படுவது அவசியம். தவறான வழியில் செல்வோர் சங்கடம், பிரச்னை, நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் எடுப்பது நன்மை தரும். மாதம் முழுவதும் உங்கள் சப்தமாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் கணவன், மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் ராசிநாதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். உங்கள் அறிவாற்றலால் நீங்கள் நினைத்ததை சாதிக்க முடியும். எதிர்பார்த்த பணம் வரும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதி முதல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஜன. 2, 3அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 18, 26, 27. ஜன. 8, 9பரிகாரம் நடராஜரை வழிபட வாழ்வில் இருந்த சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.கேட்டை: செயல்களில் நிதானமும் சாதிப்பதில் உறுதியும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி முன்னேற்றமான மாதமாகும். உங்கள் லாபாதிபதி புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். டிச.25 முதல் புத ஆதித்ய யோகம் உண்டாவதால் பொருளாதார நெருக்கடி விலகும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். வர வேண்டிய பணம் வரும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். நிதி நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு குழப்பம் விலகும். ஷேர் மார்க்கெட்டில் ஆதாயம் கிடைக்கும். நீண்டநாள் முயற்சி சாதகமாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். நீண்ட நாள் கனவு நனவாகும். சப்தம காரகனான சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேரும். மனதில் தெளிவும் முகத்தில் பொலிவும் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும் என்றாலும், ஜீவன ஸ்தானத்திற்கு சனியின் பார்வை உண்டாவதுடன் அங்கு கேதுவும் சஞ்சரிப்பதால் தொழில் மீதும், வேலையின் மீதும் கவனமாக இருப்பது அவசியம். பணியாளர்கள் இந்த நேரத்தில் வேறு சிந்தனைக்கு இடம் கொடுக்க வேண்டாம். பிறருடைய வற்புறுத்தலுக்காக உங்கள் வேலைகளில் மாற்றம் செய்ய வேண்டாம். அது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பேசும் வார்த்தையில் இந்த நேரத்தில் நிதானம் காப்பதுடன், குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். கொடுக்கல், வாங்கலிலும் கவனம் தேவை. யாரையும் நம்பி புதிய முயற்சியில் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். எதுவாக இருப்பினும் வாழ்க்கைத் துணையிடமும் குடும்பத்தினரிடமும் ஆலோசித்து முடிவிற்கு வருவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது உயர் கல்விக்கு வழிவகுக்கும்.சந்திராஷ்டமம்: ஜன. 3, 4அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 23, 27. ஜன. 5, 9, 14பரிகாரம் லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

தனுசு: மூலம்..: அனுபவ பாடத்தை மறக்காமல் வாழ்வில் முன்னேற்றம் காணும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி யோகமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்க பாக்யாதிபதி சூரியன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவு உண்டாகும். பூர்வீக சொத்து உங்கள் வசமாகும். நல்லது எது, கெட்டது எது என்று புரிந்து செயல்படும் நிலை ஏற்படும். உங்கள் திறமையால் திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். உங்கள் அந்தஸ்து உயரும். எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு பிரச்னை என்பதெல்லாம் மாறும். வம்பு, வழக்குகள் என சங்கடப்பட்டு வந்த நிலையில் மாற்றம் உண்டாகும். அதிகாரத்திலும், அரசியலிலும் இருப்பவர்களுக்கு செல்வாக்கு கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். டிச. 25 முதல் உங்கள் செயல்பாடுகளில் விவேகம் இருக்கும். முடியாத வேலைகளையும் முடித்திடக் கூடிய அளவிற்கு உங்களிடம் ஆற்றல் உண்டாகும். வர வேண்டிய பணம் வரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகி எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜன. 4, 5.அதிர்ஷ்ட நாள்: டிச. 16, 21, 25, 30. ஜன. 3, 7, 12.பரிகாரம் காமாட்சி அம்மனை வழிபட உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.பூராடம்: எதற்காகவும் காத்திருக்காமல் எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் லாபாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். விவாகரத்து வரை சென்றவர்களும் மனம் மாறுவர். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். தொழிலில் லாபம் இல்லை வியாபாரத்தில் நஷ்டம் என்றிருந்த நிலை மாறும். மனதில் இருந்த சங்கடம் நீங்கும். உங்களை நம்பி வருவோருக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்கள் நிலை உயரும். செல்வாக்கு உயரும். புதிய முயற்சி வெற்றி பெறும். பொன் பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவர்.  எடுத்த வேலைகளை நடத்தி முடிக்கக் கூடிய அளவிற்கு சூழ்நிலை உங்களுக்கு சாதகமாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எடுக்கும் முயற்சி வெற்றியாகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பம், பிள்ளைகள் என்று உங்களை நீங்கள் அர்ப்பணித்துக் கொள்வீர்கள். பிறரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். பட்ட அவமானம் மாறும். செல்வாக்கு உயரும். சரியாக திட்டமிட்டு செயல்படுவீர்கள். வீண் அலைச்சல், நெருக்கடி, சோதனை என்றிருந்த நிலை மாறும். நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். அரசுவழி முயற்சி சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். சொந்த வீடு, மனை என்ற நீண்டநாள் கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: ஜன. 5, 6அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 24, 30. ஜன. 3, 12பரிகாரம் காளிகாம்பாளை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.உத்திராடம் 1 ம் பாதம்: சரியான புரிதலும் திட்டமிட்டு செயல்படக்கூடிய ஆற்றலும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் மார்கழி மாதம் முன்னேற்றமான மாதமாகும். உங்கள் பாக்யாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியும் ராசிக்குள் சஞ்சரிக்கும் நிலையில் இதுவரை இருந்த நெருக்கடி, பிரச்னைகள் எல்லாம் உங்களை விட்டு விலகும். செல்வாக்கு உயரும். நடக்கவே நடக்காது என கைவிட்ட வேலைகளும் இந்த நேரத்தில் நடந்தேறும். எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் கனவு நனவாகும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சகாய ஸ்தானாதிபதி சனி ஆட்சியாக சஞ்சரிப்பதுடன், யோகக் காரகன் ராகுவும் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் பலம் அதிகரிக்கும். மனவலிமை உண்டாகும். எடுக்கும் முயற்சி எல்லாம் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் நிறுவனம் நடத்துபவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் பலம் கூடும். குடும்பத்தில் இருந்த சங்கடம், பிரச்னை விலகும். லாபாதிபதி சுக்கிரன் வருமானத்திற்கு வழிவகுப்பார். வேலையின் காரணமாக வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்த தம்பதியர் இந்த நேரத்தில் ஒரே வீட்டில் வாழும் நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய சொத்து சேரும். சகோதரர்களுடைய ஆதரவு கிடைக்கும். டிச. 25 முதல் வருமானம் உயரும். சுயசம்பாத்தியம் அதிகரிக்கும். திடீர் வாய்ப்பு தேடிவரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: ஜன. 6அதிர்ஷ்ட நாள்: டிச. 19, 21, 28, 30. ஜன. 1, 3, 10, 12பரிகாரம் அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்..: அமைதியாக இருந்து நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் மார்கழி, கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியான சூரியன் விரய ஸ்தானமான 12ம் இடத்தில் மறைவு பெறுவதால், செலவு அதிகரிக்கும். அவசர செலவுக்காகவும் கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய நிலை உருவாகும். அரசு வழி முயற்சிகள் இழுபறியாகும். அரசியல்வாதிகள் தலைமையின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். நீங்கள் நேர்மையாக செயல்பட்டாலும் உங்கள் எதிரிகள் உங்கள் மீது அவதுாறை ஏற்படுத்திக் கொண்டிருப்பர். எடுக்கும் வேலையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காமல் போகும். பணியாளர்கள் நிதானமாக செயல்பட வேண்டும். யாருடைய அழுத்தத்திற்கும் இந்த நேரத்தில் இடம் கொடுக்க வேண்டாம். சுயதொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சுகாதிபதியும், லாபாதிபதியுமான செவ்வாயும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்று லாபம் காண்பீர்கள். தாய்வழி உறவுகள் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது இந்த நேரத்தில் நன்மையை அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்கள் முதலீடு செய்வதற்கு முன் நன்றாக யோசிப்பது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜன. 6, 7அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 19, 26, 28. ஜன. 1, 8, 10பரிகாரம் சொக்கநாதரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடந்தேறும்.திருவோணம்: நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு பிறக்கும் மார்கழி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். கடந்த மாதம் வரை எளிதாக நடந்த வேலைகளிலும் இப்போது நெருக்கடி உண்டாகும். உங்கள் ராசிநாதனும் உங்கள் குடும்பாதிபதியுமான சனி வக்கிர நிவர்த்தி அடைந்து தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினர் ஒத்துழைப்பர். அவசரத் தேவைக்கு சேமிப்பு கை கொடுக்கும் என்றாலும் வார்த்தையில் கவனம் தேவை. பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். புதிய முயற்சியில் இறங்கும் முன் அது பற்றி நன்றாக தெரிந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வது நல்லது. விரய ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் செலவு பல வகையிலும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத நெருக்கடி ஏற்படும்.  அரசு வழியிலும் சங்கடம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பது அவசியம். உங்களால் முடித்திடக் கூடிய வேலைகளைத் தவிர வேறு எந்த வேலைகளிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். அடுத்தவரை நம்பி எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். சிலர் தங்கள் பெயரில் உள்ள சொத்துகளை விற்று நிலைமைகளை சமாளிக்க வேண்டியதாகவும் இருக்கும். நீண்டநாள் பிரச்னைகள் இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும். கேட்ட நேரத்தில் உங்களுக்கு உதவி புரிந்து வந்தவர்களும் உதவி செய்ய முடியாத நிலையில் இருப்பர். பாக்கியாதிபதி புதன் டிச. 25 வரை உங்களுக்கு நன்மைகளை வழங்குவார்.  அதன் பிறகு ஒப்பந்த விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒன்றிலும் கையெழுத்திடுவதற்கு முன் நன்கு படித்துப் பார்ப்பது நல்லது.  மாணவர்களுக்கும் இந்த நேரத்தில் படிப்பில் கவனம் குறையும். எதிர்காலத்தை நினைத்து தங்களை மாற்றிக் கொள்வது அவசியம். வெளியூர் பயணத்தின் போது நிதானம் தேவை. புதியவர்களிடம்  விலகி இருப்பது நல்லது.  உடல் நிலையில் கவனம் தேவை. பெண்கள் கணவர் மீதும், குடும்பத்தின் மீதும் அக்கறை கொள்வது நல்லது. சந்திராஷ்டமம்: ஜன. 7, 8அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 20, 26, 29. ஜன. 2, 11பரிகாரம் சிவசக்தியை வழிபட தடைகள் விலகும். வேண்டுதல் நிறைவேறும். அவிட்டம் 1, 2 ம் பாதம்:தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டு வாழ்ந்து வரும்  உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் லாபாதிபதியும், சுகாதிபதியுமான செவ்வாய் விரய ஸ்தானத்தில் மறைவு பெறுவதால், ஒவ்வொரு வேலையிலும் கவனமாக இருப்பது அவசியம்.  சிலருக்கு அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும் என்றாலும் அதற்குரிய ஆதாயம் கிடைக்காமல் போகும். புதிய முயற்சியில் இறங்கினால் அதுவும் இழுபறியாகும். இடம், வீடு, சொத்து சம்பந்தமாக ஏதேனும் பிரச்னை உருவெடுக்கும். பொன் பொருளை விற்று நிலைமையை சமாளிக்க வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும். கணவன், மனைவிக்குள் சரியான புரிதல் இல்லாமல் போகும் என்றாலும், உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும் ஜீவனாதிபதியுமான சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத பணம் வரும். அவசிய செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும். மனதில் ஏற்பட்ட நெருக்கடி, குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் கவனமாக இருப்பது அவசியம். அஷ்டம கேது உங்கள் இஷ்டத்திற்கு தடை போடுவார் என்பதால் இந்த நேரத்தில் நிதானம் காப்பது நன்மை தரும். சிலருக்கு உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றாலாம். ஆனாலும் உங்கள் சமயோஜித புத்தியால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். செய்து வரும் தொழில் மீதும், பார்த்து வரும் வேலையின் மீதும் கவனமாக இருப்பவர்களுக்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படாது. விவசாயிகள் கவனமாக செயல்படுவது நன்மையாகும். மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜன. 8அதிர்ஷ்ட நாள்: 17, 18, 26, 27. ஜன. 9.பரிகாரம் லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.

கும்பம்: அவிட்டம் 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிக்கும் வரை தொடர்ந்து முயற்சிக்கும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் நீங்கள் எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். வர வேண்டிய பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நீண்ட நாளாக விற்க முடியாத இடத்தை விற்று  லாபம் காண்பீர்கள். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சி சாதகமாகும். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வை சந்தித்து வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். நெருக்கடி விலகும். பணப்பழக்கம் அதிகரிக்கும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு உங்கள் திறமையை அதிகரிப்பார். பணம், லாபம், செல்வாக்கு என்ற நோக்கத்தோடு உங்கள் செயல்கள் ஒவ்வொன்றும் இருக்கும். தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய வாய்ப்பு உருவாகும். இந்த நேரத்தில் நல்லவர் யார், கெட்டவர் யார் என புரிந்து கொண்டு உங்களால் செயல்பட முடியும். பெண்களுக்கு எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும். மாணவர்களுக்கு ஜன.11 வரை படிப்பில் சிறப்பான நிலை இருக்கும் அதன் பிறகு கவனம் தேவைப்படும்.சந்திராஷ்டமம்: ஜன.9அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 18, 26, 27. ஜன. 8.பரிகாரம் அங்காள பரமேஸ்வரியை வழிபட சங்கடங்கள் விலகும்.சதயம்: திட்டமிட்டு செயல்பட்டு எடுத்த வேலைகளில் ஆதாயம் அடையும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதமாகும். உங்களுக்கென்று தனி செல்வாக்கு உண்டாகும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்களும் தேடி வரக் கூடிய நிலை ஏற்படும். ராசியாதிபதி ஆட்சியாக சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மனதில் குழப்பம் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். தடைபட்ட வேலைகளை முடிக்கும் நிலை உண்டாகும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். குடும்பத்திற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். எப்படியாவது  நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற மனநிலை உருவாகும். அதற்காக உங்களுக்குத் தெரிந்த அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். பணியாளர்களுக்கு கடந்த கால நெருக்கடி விலகும். பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்படும். வியாபாரிகளுக்கு சிறிய முதலீட்டிலும், பெரிய அளவில் லாபம் காணக் கூடிய நிலை உண்டாகும். அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். தலைமையின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.சந்திராஷ்டமம்: ஜன. 9, 10அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 22, 26, 31. ஜன. 4, 8, 13பரிகாரம் அனுமனை வழிபட அல்லல் போகும். நன்மை உண்டாகும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: பிறருக்கு உதவும் குணம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி  நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ஞானக்காரகன் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் கவனம் தேவை. ஒவ்வொன்றிலும் பின் விளைவு பற்றி யோசித்து செயல்படுவது நன்மை தரும். ஆனலும் ஜீவனாதிபதியும், சப்தமாதிபதியும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சி வெற்றியாகும். எந்த ஒன்றிலும் உறுதியாக இருப்பீர்கள். முடியாத வேலைகளையும் முடித்து ஆதாயம் காண்பீர்கள். பல வழியிலும் வருமானம் வர ஆரம்பிக்கும். சகோதரர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். விஐபிகள் உங்களுக்கு உதவி புரிவார்கள். கடந்த கால நெருக்கடி விலகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி மறையும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் கூடும். பழைய முதலீட்டில் இருந்து வர வேண்டிய லாபம் வரும். ஜென்ம ராகுவும், சனியும் உங்கள் நிலையை உயர்த்துவர். தடை, தாமதம் என்பதையெல்லாம் தாண்டி நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். குடும்பத்தினரும் இந்த நேரத்தில் உங்களுக்கு உதவியாக இருப்பர். நீண்ட நாளாக சந்தித்த நெருக்கடி, பிரச்னை, நோய் விலக ஆரம்பிக்கும். தெய்வ அனுகூலமும், பெரியோரின் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: ஜன. 10, 11அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 21, 26, 30. ஜன. 3, 8, 12பரிகாரம் சண்முகரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம்..: பிறரை வழிநடத்தும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிநாதன் வக்கிரம் அடைந்திருப்பதால் உங்கள் செயல்களில் தடை, தாமதம் ஏற்படும். திட்டமிடாமல் சில வேலைகளில் இறங்கி நெருக்கடிக்கு ஆளாவீர்கள். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்னைகள் ஏற்படும். பிறரை நம்பி மேற்கொண்ட வேலைகள் இழுபறியாகும். இந்த நேரத்தில் உங்கள் தனாதிபதியும் பாக்யாதிபதியுமான செவ்வாய் கேந்திர பலம் பெறுவதால் இடம், வீடு போன்ற வசதிகள் உண்டாகும். செல்வாக்கு உயரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். டிச. 21 வரை பிறருக்கு உதவி செய்யக் கூடிய அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும். வியாபாரம், தொழிலில் ஆதாயம் கூடும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்வீர்கள். பெரியோரால் பாராட்டும்படி  செல்வாக்கு இருக்கும். மாணவர்களுக்கு டிச. 25 முதல் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை மறையும். குடும்ப நலனில் அக்கறை ஏற்படும். வேலைக்காக செய்த முயற்சியில் வெற்றி உண்டாகும். அரசு, சட்ட விஷயத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது மிக அவசியம். தினக்கூலிகள், சிறிய முதலீட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜன. 11அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 30. ஜன. 3, 12பரிகாரம் ராமநாதரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.உத்திரட்டாதி: நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம்.  சனி விரய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சியில் கையிருப்பு கரையும். வசிக்கும் வீட்டை உங்கள் வசதிக்கேற்ப மாற்றுவதற்காக செலவு செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். உங்கள் தகுதியை வெளிக்காட்டும் வகையில் வீட்டிற்காக நவீன பொருட்கள் வாங்குவீர்கள். வசதி, வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் இந்த நேரத்தில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க பணத்தை வாரி இறைப்பர். உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையும், பணியாளர்களுக்கு மேலதிகாரியும் ஆதரவாக இருப்பர். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவரும் உங்களிடம் ஆதரவு கேட்கும் நிலை உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் தோன்றிய எதிர்ப்பு விலகும். அந்நியரால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பொன், பொருள் சேரும். பெண்கள் ஆடை ஆபரணத்தில் கவனம் செலுத்துவர். டிச. 21 வரை கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். டிச. 25 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைக்கும். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் பணியாளர்களின் நிலை உயரும். எதிர்பார்த்த இடமாற்றம் இந்த நேரத்தில் வந்து சேரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமான உயர்வின் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.சந்திராஷ்டமம்: டிச. 16. ஜன. 11, 12அதிர்ஷ்ட நாள்: டிச. 16, 21, 26, 30. ஜன. 3, 8பரிகாரம் நடராஜரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். சங்கடம் விலகும்.ரேவதி: நேர்மையாக செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் ராசிக்கு சுகாதிபதியும், சப்தமாதிபதியுமான புதன் டிச. 25 முதல் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். சிலருடைய வாழ்க்கைத் துணைக்கும் இந்த நேரத்தில் வேலை கிடைக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சி வெற்றியாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பரம்பரை சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு, விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். அதிகாரிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜன்சி முன்னேற்றம் அடையும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்க்கும்  நிலை ஏற்படும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சத்ரு ஜெய ஸ்தான அதிபதியும் யோகத்தை உண்டாக்குவர். இந்த நேரத்தில் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும்.  தொழிலிலும் முன்னேற்றம் ஏற்படும். கையில் பணம் இல்லை என்ற நிலை மாறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அந்நியரால் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிறருக்கு உதவும் அளவிற்கு பொருளாதார நிலை இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: டிச. 16, 17. ஜன. 12, 13அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 23, 30. ஜன. 3, 5, 14பரிகாரம் ஆண்டாளை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.

மேஷம்: அசுவினி..: உழைப்பையும், நேர்மையையும் முதலீடாக கொண்டு எடுத்த வேலையை முடிக்கும் உங்களுக்கு மார்கழி மாதம் நன்மையான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் சஞ்சரித்தாலும், பூர்வ புண்ணியாதிபதி சூரியனும் உங்கள் ராசியாதிபதி செவ்வாயும் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், விஐபிகள் ஆதரவு கிடைக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எடுத்த வேலைகள் நடந்தேறும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நினைத்ததை நடத்திக் கொள்ளும் நிலைமை உருவாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கல் முடிவிற்கு வரும். சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். டிச.25 வரை விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் புதன் அதிர்ஷ்ட வாய்ப்புகளை அதிகரிப்பார். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும் என்றாலும் மேலும் அக்கறை எடுத்துக் கொள்வது நன்மையாகும். உங்கள் பாக்கியாதிபதி குரு வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களின் எப்போதும் கவனம் தேவை. பிறர் சொல்லும் வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் அதிலுள்ள நன்மை, தீமைகளை ஆராய்ந்து முடிவிற்கு வருவது நன்மை தரும்.  விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். கையில் பணப்பழக்கம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 17, 18. ஜன. 13, 14.அதிர்ஷ்ட நாள்: டிச. 16, 25, 27. ஜன. 7, 9.பரிகாரம் கற்பக விநாயகரை வழிபட்டுவர வாழ்க்கை வளமாகும்.பரணி: நினைத்ததை சாதிப்பதில் உறுதியாகவும் அதற்காக தொடர்ந்து உழைத்திடவும் கூடிய உங்களுக்கு, மார்கழி மாதம் யோகமான மாதமாகும். மாதம் முழுவதும்  சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் ஆடை, ஆபரணம் சேரும். கையிருப்பு அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும்.  தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு, போட்டி, பிரச்னைகள் என்றிருந்த நிலை மாறும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட போராட்டம் விலகும். ஒற்றுமை உண்டாகும். புதிய வாகனம் இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றிவிட்டு வரக்கூடிய நிலை ஏற்படும். உதவி எனக் கேட்பவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்யக் கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயர்வாக இருக்கும். தொழில் முன்னேற்றம் பெறும்.  வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். டிச. 25 க்குள் எதிர்பார்த்த பணம் வரும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். செல்வாக்கு உயரும். லாப சனியும், ராகுவும் பணப்புழக்கத்தை அதிகரிப்பார்கள். வியாபாரத்தில் லாபத்தையும், வேலையில் உயர்வையும் உண்டாக்குவர்.  உங்கள் நீண்டநாள் கனவு நனவாகும். உடல்நலம் சீராகும்.சந்திராஷ்டமம்: டிச. 18, 19. ஜன. 14.அதிர்ஷ்ட நாள்: டிச. 24, 27. ஜன. 6, 9.பரிகாரம் தில்லை காளியை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.கார்த்திகை 1 ம் பாதம்: எந்த இடத்திலும் தனித்துவத்துடன் இருந்து வரும் உங்களுக்கு, மார்கழி அதிர்ஷ்டமான மாதமாகும். உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதியான சூரியன் பாக்ய ஸ்தானத்தில் நட்பாக சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சி சாதகமாகும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்குவதற்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேரும். மறைந்த புதனால் டிச. 25 வரை செல்வம், செல்வாக்கு ஏற்படும். நினைத்த வேலைகளை உங்களால் நடத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த பணம் வரும். திடீர் அதிர்ஷ்டம்  உங்களை திக்கு முக்காட வைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கும் ஏற்படும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். நீண்ட நாளாக நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் இந்த நேரத்தில் லாபம் தரும். உங்கள் ராசிக்கு லாபாதிபதியான சனி லாப ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்யக் கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். குடும்பத்தின் மீது அக்கறை உண்டாகும். மாணவர்களுக்கு டிச. 25 க்கு பிறகு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை.சந்திராஷ்டமம்: டிச. 19அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 27, 28. ஜன. 1, 9, 10.பரிகாரம் சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடந்தேறும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்..: நிதானமாக செயல்பட்டு வரும் உங்களுக்கு, மார்கழி திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிக்கு சுகாதிபதியான சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெறுவதால் எதிர்பாராத நெருக்கடி, சங்கடம், பிரச்னை, இனம் புரியாத பயம் ஏற்படும். உங்கள் கவனக்குறைவால் வேலையில் தவறு ஏற்பட்டு மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரும். மனம் எப்போதும் அழுத்தமாகவே இருக்கும் என்றாலும், டிச. 21 முதல் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்வரும் ஒவ்வொரு பிரச்னைகளையும் எதிர் கொண்டு வெற்றி பெறும் நிலை ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகள் இந்த நேரத்தில் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். பணியில் இருப்பவர்களும், சுய தொழில் புரிபவர்களும் இந்த நேரத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். உங்கள் அலட்சியம் உங்களுக்கே எதிரியாகி விடும். கொடுக்கல் வாங்கலிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். வெளிநாட்டு முயற்சி இந்த நேரத்தில் சாதகமாகும். தாய்வழி உறவுகளிடம் இடைவெளி ஏற்படுவதற்கும், உங்கள் உடல்நிலையில் அசதி சோர்வு  ஏற்படவும் வாய்ப்பிருப்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் சப்தமாதிபதி செவ்வாயும் மறைவு பெறுவதால் நண்பர்களை அனுசரித்துச் செல்வது, விட்டுக்கொடுத்து செயல்படுவது இந்த நேரத்தில் அவசியம். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் கூடும். பெண்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம்: டிச. 20.அதிர்ஷ்ட நாள்: டிச. 19, 24, 28. ஜன. 1, 6, 10.பரிகாரம் அதிகாலையில் சூரியனை வழிபட உங்கள் வாழ்வில் நன்மை உண்டாகும்.ரோகிணி: மனம் என்ன சொல்கிறதோ அதைக்கேட்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். விரயாதிபதி செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது ஒரு வகையில் உங்களுக்கு நன்மையாகவே இருக்கும். செலவுகள் கட்டுப்படும். மறைமுகத் தொல்லைகள் விலகும். மனதில் நிம்மதி உண்டாகும். தூக்கமின்றி தவித்த நிலை மாறும். உங்கள் தனக்காரகன் புதன் டிச. 25 முதல் தடைபட்டிருந்த வேலைகளை நடத்தித் தருவார். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும் என்றாலும், ஜீவன ஸ்தானத்தில் சனி ஆட்சியாக சஞ்சரிப்பதுடன், யோகக்காரகன் ராகுவும் அங்கே சஞ்சரிப்பதால் வேலையில் அக்கறையுடன் இருந்து கொள்வது உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். ஒரு சிலருக்கு இருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்ற எண்ணமும் ஏற்படும் என்றாலும், இந்த நேரம் அதற்கு சாதகமான நேரமில்லை என்பதால், இருக்கின்ற இடத்தில், பார்க்கின்ற வேலையில் கவனமாக செயல்படுவதன் வழியாக உங்கள் சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சுயதொழில் செய்பவர்கள் புதியதாக முதலீடு செய்யும் முன் நன்றாக யோசித்து செயல்படுவது நல்லது. இந்த மாதத்தில் எப்படி இருந்தாலும் ராசிநாதன் சுக்கிரனும், தனாதிபதி புதனும் வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உண்டாக்குவர். பொருளாதார நிலை உயரும். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். உங்கள் விருப்பம் மாதத்தின் பிற்பகுதியில் பூர்த்தியாகும். விவசாயிகள் விளைச்சலில் முழு கவனம் செலுத்தி வர நன்மை ஏற்படும்.சந்திராஷ்டமம்: டிச. 21.அதிர்ஷ்ட நாள்: டிச. 20, 24, 29. ஜன. 2, 6, 11.பரிகாரம் நரசிம்மரை வழிபட தடைபட்ட வேலை நடந்தேறும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம் : நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பிறக்கும் மார்கழி மாதம் விவேகமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் நட்சத்திர அதிபதியும், தைரிய வீரிய காரகனுமான செவ்வாய், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களையும் அறியாமல் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். எந்தவொரு வேலையில் இறங்கினாலும் அதில் குழப்பம் அதிகரிக்கும். அரசுவழி வேலைகளிலும் நெருக்கடி இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளால் சங்கடங்கள் ஏற்படும். சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு அல்லது தாய் வழி உறவினர்களுடன் சங்கடம் என்ற நிலை உண்டாகும். ஒரு சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள் என்றாலும் டிச. 25 முதல் உங்கள் ராசிக்கு தன குடும்பாதிபதியான புதன் மறைவு பெறுவதால் எடுத்த முயற்சிகள் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உத்தியோகத்தில் சுமூகமான நிலை உண்டாகும். மனதில் இருந்த பயம் போகும். குடும்பத்தினர் உங்களை அனுசரிப்பர். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். டிச. 21 முதல் ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலையும், பொன் பொருள் சேர்க்கையும் உண்டாகும். மாணவர்களுக்கு டிச. 25 க்கு மேல் படிப்பில் ஆர்வம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: டிச. 22.அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 24, 27. ஜன. 6, 9.பரிகாரம் சுப்ரமணியரை வழிபட நினைத்தது நடந்தேறும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்..: எடுத்த வேலைகளை வேகத்துடனும் விவேகத்துடனும் நடத்தி வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி முன்னேற்றமான மாதமாகும். உங்கள் லாபாதிபதியும், சத்ரு ஜெய ஸ்தானாதிபதியுமான செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். நினைப்பதை நடத்தி முடிக்கும் நிலை உண்டாகும். உடல்நிலை சீராகும். வம்பு, வழக்கு என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். இடம், வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் சகாய ஸ்தானாதிபதி சூரியனும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிலர் இருக்கும் வீட்டை விட்டு வசதியான வீட்டில் குடியேறுவர். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். உங்கள் வேலைகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். முடங்கிய தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் ராசியாதிபதி புதன் டிச.25 வரை நீங்கள் எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்றாலும், உங்கள் விரயாதிபதியும் பஞ்சமாதிபதியுமான சுக்கிரன் மாதம் முழுவதும் நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருப்பார். டிச. 21 முதல் எதிர்பாலினரால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் அவர்களிடம் விலகி இருப்பது  நன்மை ஏற்படுத்தும். குடும்பத்தினர் மீது இந்த நேரத்தில் அக்கறை கொள்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் முழு கவனத்தை செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: டிச. 22அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 23, 27. ஜன. 5, 9, 14பரிகாரம் கோமதி அம்மனை வழிபட குறைகள் யாவும் தீரும்.திருவாதிரை: எதையும் தனித்து நின்று சாதிக்கும் உங்களுக்கு மார்கழி மாதம் யோகமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் யோகக்காரகன் ராகுவும், கர்ம காரகன் சனியும் உங்கள் வாழ்வில் எதிர்பார்த்த  நன்மைகளை இந்த மாதத்தில் வழங்குவர். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரி அனுசரணையாக இருப்பார். சுயதொழில் புரிபவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். உடலில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வம்பு வழக்குகள் இருந்தால் உங்களுக்கு சாதகமாகும். புதிய வாகனம், சொத்து சேரும். தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு உருவாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பிறருக்கு உதவி செய்யக் கூடிய அளவிற்கு உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். நினைத்தவற்றை சாதித்துக் கொள்ளும் நிலையுடைய இக்காலத்தில் டிச. 21 முதல் எதிர்பாலினரால் பிரச்னை ஏற்படலாம். புதியவர்களிடம் கவனமாக இருப்பதால் உங்கள்  கவுரவம் உயரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாள் கனவு நனவாகும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். தொண்டர்களின் பலம் கூடும். சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். உங்கள் லாபாதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணை மீதும் பிள்ளைகளின் மீதும் அக்கறை கொள்வது உங்களுக்கு நன்மை தரும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.சந்திராஷ்டமம்: டிச. 23அதிர்ஷ்ட நாள்: டிச. 22, 31. ஜன. 4, 5, 13, 14பரிகாரம் மாசாணி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்து வாழும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ஞானக்காரகனும் உங்கள் நட்சத்திர அதிபதியுமான குரு மாதத்தின் முற்பகுதியில் இரண்டாம் இடத்திலும், டிச. 22 முதல் ஜென்ம ராசியிலும் வக்கிரமாக சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும் என்றாலும் உழைப்பிற்கேற்ற ஆதாயம் ஏற்படும். சூரியனும், செவ்வாயும் உங்களிடம் வேகத்தையும் துணிச்சலையும் உண்டாக்குவர். ஒரு முயற்சியை எடுத்த பிறகு அடுத்தடுத்து என்று அதில் வெற்றி பெறுவதற்காக நகர்ந்து கொண்டே இருப்பீர்கள். வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டாலும் அதை எப்படி சரிசெய்வது என்ற வழி உங்களுக்கு தெரியும். சிலர்  தொழிலை விரிவு செய்வதற்காக வேறு இடத்திற்கு மாற்றுவர்.  தன்னம்பிக்கை அதிகரிக்கும். பாக்ய சனியும், ராகுவும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது தைரியத்துடன் செயல்பட வைப்பார். எடுத்த வேலைகளை முடிக்கக் கூடிய அளவிற்கு உங்களின் செல்வாக்கு உயரும். பலம் உண்டாகும். உறவுகள் நண்பர்கள் மத்தியில் கவுரவமாக நடை போடக் கூடிய நிலை உண்டாகும். பணியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். டிச. 25 வரையும் அதன் பிறகு ஜன.11 முதலும் ராசிநாதன் புதன் உங்கள் கனவுகளை நனவாக்குவார். வருமானம் அதிகரிக்கும். எடுத்த வேலைகளில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இணக்கம் ஏற்படும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 24.அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 23, 30. ஜன. 3, 5, 12, 14.பரிகாரம் வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

கடகம் : புனர்பூசம் 4 ம் பாதம்..: தெளிவான சிந்தனையும், பிறருக்கு வழிகாட்டும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, மார்கழி கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வந்த குரு வக்கிரம் அடைந்துள்ள நிலையில், உங்கள் செயல்களில் சின்னச் சின்ன தடுமாற்றம் வரலாம். யோசிக்காமல் ஒரு வேலையில் ஈடுபட்டு அதனால் சங்கடப்பட நேரலாம். உங்கள் தன குடும்பாதிபதி சூரியன், பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொள்ளக் கூடிய வலிமை உண்டாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு வழக்குகள் என சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடம் சமாதானம் பேசக் கூடிய அளவிற்கு உங்கள் செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடியான நிலை மாறும்.  சிலருக்கு புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலை மேலும் விரிவு செய்யக் கூடிய அளவிற்கு வசதி அதிகரிக்கும். தேவையான பணம் வரும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை ஏற்படும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 24அதிர்ஷ்ட நாள்: டிச. 20, 21, 29, 30. ஜன. 2, 3, 11, 12பரிகாரம் ஆபத்சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.பூசம் பொறுமையாக செயல்பட்டு சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிக்கு சப்தமாதிபதியும் அஷ்டமாதிபதியுமான சனி, அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உடல், மனநிலையில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். வீண் பிரச்னைகள் உங்களைத் தேடிவரும். வேலை பார்க்கும் இடத்தில் மறைமுகத் தொல்லை உண்டாகும். வியாபாரம், தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பெண்களுக்கு 8 ம் இடம் என்பது மாங்கல்ய ஸ்தானம் என்பதால் கணவரின் உடல்நிலை பாதிக்கப்படலாம். யோகக்காரகன் ராகுவும் 8ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய ரகசியம், மறைமுக செயல்பாடுகள் வெளியில் தெரிய வரும். உங்களைச் சுற்றி இருப்பவர்களே உங்களுக்கு எதிராக மாறுவர். பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாக இருக்கும். வெளிநாட்டு முயற்சியில் சங்கடம், அந்நியரால் வீண் பிரச்னை என்ற நிலை ஏற்படும். தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் வார்த்தைகளால் சங்கடத்தை சந்திக்கும் நிலை சிலருக்கு ஏற்படும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை இருக்கும் என்றாலும் சத்ரு ஜெய ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்வரும் சங்கடம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். பிரச்னை, நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கக் கூடிய சக்தி உண்டாகும். யாமிருக்க பயமேன் எனச் சொல்லும் முருகன் போல ஆறாம் இடத்து செவ்வாய் உங்களைப் பாதுகாப்பார். தலை நிமிர்ந்து நடை போட வைப்பார். உங்கள் குடும்பாதிபதி சூரியனும் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழியில் ஏற்பட்ட சங்கடம் விலகும். புதிய தொழில் தொடங்கவும் வெளிநாடு செல்லவும் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். டிச. 21 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்க முடியும். கணவன், மனைவிக்குள் இணக்கம் இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 25அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 20, 26, 29. ஜன. 2, 8, 11பரிகாரம் தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.ஆயில்யம்சக மனிதர்களின் மன நிலை தெரிந்து அதற்கேற்ப செயல்படும் உங்களுக்கு, மார்கழி மாதம் நன்மையான மாதமாகும். டிச. 21 வரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் பொன் பொருள் சேர்க்கைக்கு வழி காட்டுவார். புதிய இடம் வீடு, வாகனம் வாங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். கணவன், மனைவிக்குள் ஒற்றுமையை அதிகரிப்பார். உங்கள் நட்சத்திர நாதன் புதன் டிச. 25 முதல் தடைபட்ட வேலைகளை முடித்துக் கொடுப்பார்.  எதிர்பார்த்த பணம் இந்த நேரத்தில் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சுமூக நிலை ஏற்படும். வியாபாரம் வளர்ச்சி பெறும்.  இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். சட்ட ரீதியாக ஏற்பட்ட சங்கடம் விலகும். அஷ்டம ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சனி ஆட்சியாக சஞ்சரித்தாலும், சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன், செவ்வாய், டிச. 25 முதல் புதன் உங்கள் வேலைகளை வெற்றியாக்குவர். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளை நீக்குவர். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயரும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 26அதிர்ஷ்ட நாள்: டிச. 20, 23, 29. ஜன. 2, 5, 11, 14பரிகாரம் மீனாட்சி அம்மனை வழிபட சங்கடம் விலகும். நினைப்பது நடந்தேறும்.

சிம்மம்: மகம்..: எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதையெல்லாம் சமாளித்து வெற்றி அடையக்கூடிய சக்தி கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கேது உங்கள் செயல்களில் தடைகளையும் தாமதத்தையும் ஏற்படுத்தலாம். உலகையும் உறவினர்களையும் புரிந்து கொள்வதற்காக உங்களுக்கு நெருக்கடிகளை வழங்கலாம். உங்கள் சுய காலில் நிற்கும் வகையில் உங்களை உருவாக்கலாம். இந்த நேரத்தில் சப்தம ஸ்தானத்தில் ஆட்சி பலம்பெறும் சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களுக்குள் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத்தை எண்ணி உங்கள் செயல்கள் இருக்கும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஏதாகிலும் ஒரு சச்சரவு நெருக்கடி பிரச்சனை என்று உருவாகலாம் என்றாலும் தக்க சமயத்தில் நண்பர்களால் உங்கள் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும். கூட்டுத் தொழில் லாபம் அடையும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். டிச. 25 வரை உங்கள தன குடும்பாதிபதி புதன் சாதகமாக சஞ்சரிப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். எதிர்பார்ப்புடன் மேற்கொள்ளும் வேலைகள் லாபம்தரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாங்க நினைத்த இடத்தை வாங்கும் அளவிற்கு பணம் இருக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். விவசாயிகள் இந்த நேரத்தில் விளைச்சலில் கவனமாக இருப்பது அவசியம்.சந்திராஷ்டமம்: டிச. 27அதிர்ஷ்ட நாள்: டிச. 16, 19, 25, 28. ஜன. 1, 7, 10பரிகாரம் விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட சங்கடம் விலகும்.பூரம்: அதிர்ஷ்ட வாய்ப்புகளைத் தேடி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் சகாய ஸ்தானதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். வராமல் இருந்த பணம் வரும். உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். புதிய வாகனம், நவீன பொருட்கள் என்று வாங்கிடக்கூடிய நிலை உண்டாகும். கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் உருவானாலும் அந்த நிமிடமே அவை சரியாகும். செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும். பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். ஒரு சிலர் புதிய சொத்து இடம் என்று வாங்குவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் தலைமையையும், தொண்டர்களையும் அனுசரித்துச் செல்வது அவசியம். உத்தியோகத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்திடக்கூடிய சக்தி உண்டாகும். சுயதொழில் செய்து வருபவர்கள் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது இந்த நேரத்தில் அவசியம். விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வது நன்மையாகும். பெண்கள் கணவருக்கும் குடும்பத்தினருக்கும் தெரியாமல் பிறரிடம் பணம் கொடுப்பதும் முதலீடு செய்வதும் இழப்பிற்கு வழிவகுக்கும். பிரச்சனைகளை உருவாக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 28.அதிர்ஷ்ட நாள்: டிச. 19, 24. ஜன. 1, 6, 10.பரிகாரம் வடிவுடை அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரம் 1 ம் பாதம்: எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிநாதன் சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பாக்யாதிபதி செவ்வாயும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மாதத்தின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் உங்கள் தன, குடும்பாதிபதியும் லாபாதிபதியுமான புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் இருக்கும். எதிர்பாராத வரவு வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சி வெற்றியாகும். கடன் தொல்லை விலகும். சேமிப்பு உயரும். உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரனும் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். பொன் பொருள் சேரும். இளைய சகோதரர் ஆதரவு கிடைக்கும் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் சனி ராகு, ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நிதானம் அவசியம். புதியவர்களை நம்பி எந்தவொரு வேலையிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். எதிர்பாலினரிடம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையை உண்டாக்கும். கூட்டுத் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். திருமணம், மறுமணம் போன்ற சிந்தனைகளுக்கு இக்காலத்தில் இடம் கொடுக்க வேண்டாம்.சந்திராஷ்டமம்: டிச. 28, 29.அதிர்ஷ்ட நாள்: டிச. 19. ஜன. 1, 10.பரிகாரம் பாகம்பிரியாளை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்..: ஆளுமைத்திறன், அறிவாற்றல் கொண்ட உங்களுக்கு பிறக்கும் மார்கழி யோகமான மாதம். உங்கள் விரயாதிபதி சூரியன் சுக ஸ்தானத்தில் கேந்திர பலத்துடன் சஞ்சரிப்பதால் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். புதிய வாகனம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் ஈடுபடும் வேலைகளில் தடை, தாமதம் என்று ஏற்பட்டாலும் கடைசியில் வெற்றியே உண்டாகும். எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்கள் மனதிற்கு நிம்மதியை ஏற்படுத்தும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய முதலீட்டில் இருந்து வர வேண்டிய ஆதாயம் வரும். புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத்தின் மீது அக்கறை கொள்வீர்கள். அதற்கான சேமிப்பை உருவாக்குவீர்கள். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயம் செழிப்படையும். விளைச்சல் வழியே எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 29அதிர்ஷ்ட நாள்: டிச. 19, 23, 28. ஜன. 1, 5, 10, 14பரிகாரம் வீரராகவப் பெருமாளை வழிபட வெற்றி உண்டாகும்.அஸ்தம்: சாதுரியமும் சாமர்த்தியமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதமாகும். இதுவரை தடைபட்ட வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நடந்தேறும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் உங்கள் செல்வாக்கை உயர்த்துவர். முன்னேற்றத்தை நோக்கி நடைபோட வைப்பர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். சிலர் தங்கத்தில் முதலீடு செய்வர். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து அனுபவசாலிகள் பாராட்டுவர். அரசியல்வாதிகளுக்கு புதிய பாதை தெரியும். தொண்டர்களின் பலம் கூடும். பணியாளர்களுக்கு தடைகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். மாதம் முழுவதும் தன குடும்பாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பொன், பொருள் சேரும். பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.  தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைஞர்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். திறமை வெளிப்படும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 30அதிர்ஷ்ட நாள்: டிச. 20, 23, 29. ஜன. 2, 5, 11, 14பரிகாரம் மகாலிங்கேஸ்வரரை வழிபட தடை விலகும். முயற்சி வெற்றியாகும்.சித்திரை 1, 2 ம் பாதம்: உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டு திறமையை வெளிப்படுத்தும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி  முன்னேற்றமான மாதமாகும். உங்கள் சகாய ஸ்தானாதிபதி செவ்வாய் கேந்திர பலம் பெறுவதுடன், உங்கள் ஜீவன, லாப ஸ்தானத்தையும் பார்ப்பதால் செய்யும் தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைக்க முடியும். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை உங்களுக்கு ஏற்படும். டிச. 25 முதல் ராசிநாதன் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதை சாதிக்க வேண்டுமோ அதை சாதித்திக்க கூடிய அளவிற்கு உங்கள் செயல்கள் இருக்கும். அதில் வெற்றியும் பெறுவீர்கள். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். ஆதாயம் அதிகரிக்கும். சிலர் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சியை மேற்கொண்டு வெற்றி அடைவீர்கள். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் இக்காலத்தை உங்களுக்கு யோக காலமாக மாற்றுவர். நீங்கள் நினைப்பது நடந்தேறும். நடக்கவே நடக்காது என்று கைவிட்ட வேலைகளில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். செல்வமும் செல்வாக்கும் உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். உடல்நிலை மேம்படும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இணக்கம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 30, 31.அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 23, 27. ஜன. 5, 9, 14.பரிகாரம் தண்டாயுதபாணியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us