/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
பைனலில் ஈஸ்ட் பெங்கால் * தெற்காசிய கிளப் கால்பந்தில்...
/
பைனலில் ஈஸ்ட் பெங்கால் * தெற்காசிய கிளப் கால்பந்தில்...
பைனலில் ஈஸ்ட் பெங்கால் * தெற்காசிய கிளப் கால்பந்தில்...
பைனலில் ஈஸ்ட் பெங்கால் * தெற்காசிய கிளப் கால்பந்தில்...
ADDED : டிச 15, 2025 11:07 PM

காத்மண்டு: தெற்காசிய கிளப் கால்பந்து பைனலுக்கு இந்தியாவின் ஈஸ்ட் பெங்கால் அணி முன்னேறியது.
நேபாளத்தின் காத்மண்டுவில் பெண்களுக்கான தெற்காசிய கிளப் கால்பந்து தொடர் நடக்கிறது. இந்தியாவின் ஈஸ்ட் பெங்கால், வங்கதேசத்தின் நஸ்ரின் உட்பட 5 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் நஸ்ரின் அணியை சந்தித்தது.
ஈஸ்ட் பெங்கால் அணிக்கு 7, 26, 45, 74, 90 வது நிமிடங்களில் அசத்திய இகவாபுத், ஐந்து கோல் அடித்து கைகொடுத்தார். ஜோதி (45+1), சுலஞ்சனா (73) தங்கள் பங்கிற்கு தலா ஒரு கோல் அடித்தனர்.முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 7-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், 9 புள்ளியுடன் (3ல் 3 வெற்றி) பட்டியலில் முதலிடம் பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் நேபாளத்தில் ஏ.பி.எப்., அணியை டிச. 20ல் சந்திக்க உள்ளது.