/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் ரயில்வே கேட் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் சிரமம்
/
விருதுநகர் ரயில்வே கேட் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் சிரமம்
விருதுநகர் ரயில்வே கேட் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் சிரமம்
விருதுநகர் ரயில்வே கேட் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : டிச 15, 2025 05:27 AM

விருதுநகர்: விருதுநகர் -- சாத்துார் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் ரோடு சேதமாகி பல மாதங்களாகிறது. இதை சீரமைக்காமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் திண்டாடுவது தொடர் கதையாக மாறியுள்ளது.
விருதுநகரில் இருந்து சாத்துார் செல்லும் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே ரயில்வே கேட் ரோடு சேதமாகி பல மாதங்கள் ஆகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை சீரமைத்த நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் ஒப்புதல் கிடைப் பதில் பல ஆண்டுகளாக தாமதம் நிலவி வருவதால் ரயில்வே கேட் ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளது.
மேலும் விருதுநகரில் இருந்து கலெக்டர் அலுவலக வளாகம், சூலக்கரை, சாத்துார், அரசு மருத்துவக்கல்லுாரிக்கு இவ்வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் வாகன ஓட்டிகள் பள்ளங்களை கடந்து செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
தற்போது புது பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு ஓராண்டை கடந்து விட்டதால் அதிக அளவில் பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ரயில்வே கேட் ரோடு பள்ளங்களால் நிறைந்து இருப்பதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே ரயில்வே கேட் ரோட்டை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

