மொரீஷியஸ் பாதுகாப்பு ஆலோசகராக இந்திய அதிகாரி நியமனம்
மொரீஷியஸ் பாதுகாப்பு ஆலோசகராக இந்திய அதிகாரி நியமனம்
ADDED : டிச 15, 2025 01:04 AM

போர்ட் லுாயிஸ்: மொரீஷியஸ் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இந்தியாவின் முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ராகுல் ரஸ்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு ஆப்ரிக்க நா டான மொரீஷியஸுக்கு ம், இந்தியாவுக்கும் இடையே நீண்டகாலமாக நெருங்கிய உறவு இருந்து வருகிறது. இந்த உறவின் முக்கிய அடையாளமாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இந்தியாவின் முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ராகுல் ரஸ்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஸ்கோத்ரா, கடந்த 1989ம் ஆண்டு மணிப்பூர் கேடரில் இருந்து ஐ.பி.எஸ்., அதிகாரியானவர். இந்தோ - திபெத் காவல் படையில் தலைமை இயக்குநராக பணியாற்றி, சமீபத்தில் ஓய்வு பெற்றார். இந்திய உளவுத் துறையிலும் 30 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
எல்லை மேலாண்மை, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் திறம்பட பணியாற்றியவர். மொரீஷியஸ் பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உளவுத்துறை தகவல் களை பகிர்ந்து கொள் வதில் இவர் முக்கிய பங்கு வகிப்பார் என கூறப்படுகிறது.
இந்திய பெருங்கடல் பகுதியில் சமீப காலமாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், ராகுல் ரஸ்கோத்ராவின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது.

