/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமானுஜர் மடத்தில் நாளை மகோற்ச விழா
/
ராமானுஜர் மடத்தில் நாளை மகோற்ச விழா
ADDED : டிச 15, 2025 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடம் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில், துவங்குகிறது.
மார்கழி மாத மகோற்சவ விழாவையொட்டி, நாளை, (16ம் தேதி) காலை 6:00 மணிக்கு திருமஞ்சனத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து பஜனை ஊர்வலம் நடக்கிறது. வரும் 19ம் தேதி, அனுமன் ஜெயந்தியொட்டி, காலை 6:00 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது.
தொடர்ந்து, 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பஜனை ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

