/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ. 1.30 கோடிமதிப்பீட்டில் சாலை பணி
/
ரூ. 1.30 கோடிமதிப்பீட்டில் சாலை பணி
ADDED : டிச 15, 2025 06:07 AM

கோத்தகிரி: கோத்தகிரி -ஊட்டி இடையே, நெடுஞ்சாலைத்துறை சார்பில், 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன முறையில் சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
கோத்தகிரி நகரம் மற்றும் சுற்றுப்புற சாலைகளில், விபத்துகளை தடுக்க ஏதுவாக, 8 இடங்களில் ரோலர் கிராஸ் சாலையோர தடுப்புகள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. தவிர, மேட்டுப்பாளையம் மலைப்பாதை வளைவுகளில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு, சாலை விரிவு பணி நடந்து வருகிறது.
அதன்படி, கோத்தகிரி காம்பாய் கடை - கால்ப்லிங்ஸ் இடையே, 2 கி.மீ., தொலைவில், பழைய சாலையின் மேற்புறபூச்சை முழுமையாக அகற்றி, அதற்கு மேல் நவீன முறையில் புதிய தார்சாலை அமைத்து புதுப்பிக்கப்படும் பணி நடந்து வருகிறது.
இப்பணிக்கு, 1.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சங்கர்லால் மற்றும் உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர், சாலை பணியை துவக்கி வைத்தனர்.

