
தெரு நாய்கள் தொல்லை மரியாள் நகர் 4வது மெயின் ரோடு, முதல் குறுக்கு தெருவில், தெரு நாய்கள் தொல்லையால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். ஆனந்த், கம்பன் நகர். மீன் கடைகளால் நெரிசல் உப்பளம் சாலையில் மீன் வியாபாரம் செய்வதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சுபாஷ், உப்பளம்.
கடலுார் சாலை படுமோசம் அரியாங்குப்பம் முதல் கிருமாம்பாக்கம் வரை சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவருகின்றனர். கண்ணன், புதுச்சேரி. குண்டும், குழியுமாக மேம்பாலம் நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில், ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மகேஸ்வரி, மரப்பாலம். பன்றிகள் தொல்லை தவளக்குப்பம் பகுதியில் பன்றிகள் தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாரியப்பன், தவளக்குப்பம்.

