/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தட்டாஞ்சாவடியில் இந்திய கம்யூ., போட்டி
/
தட்டாஞ்சாவடியில் இந்திய கம்யூ., போட்டி
ADDED : டிச 15, 2025 06:09 AM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூ., கட் சி வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூ., கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி பேரவை கூட்டம் நேற்று இ.சி.ஆர்., பாக்கமுடையான்பட்டு, தனியார் ஓட்டலில் நடந்தது.
மாநிலக் குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் ஹேமலதா, செல்வம், மோதிலால் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில பொருளாளர் சுப்பையா, மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் அந்தோணி, எழிலன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் சுமன் நன்றி கூறினார்.
கூட்டத்தில், புதுப்பேட்டை முருகேசன் நகரில் , வீடு அகற்றப்பட்ட மக்களுக்கு இலவச மனை பட்டா அல்லது அடுக்குமாடி குடியிருப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, இந்திய கம்யூ., கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி குழு தேர்வு செய்யப்பட்டது.அதில் தொகுதி செயலாளராக முருகன், துணை செயலாளர்களாக செல்வம், செந்தில், பொருளாளராக பாஸ்கரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூ., கட்சி வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டது.

