To type in English
(or)Press CTRL+G
To type in English
ஜன 14, 2026
மொத்த செய்திகள்: 921
மார் கழி வழிபாடு: மார்கழி வழிபாடு
தமிழகம்
14-Jan-2026
மிட்செல் அதிரடி சதம்: நியூசிலாந்து அணி வெற்றி
இந்தியா
14-Jan-2026
ஸ்குவாஷ்: வேலவன் அபாரம்
பிற விளையாட்டு
14-Jan-2026
சூரியன் மகரத்தில் - தைப்பொங்கல் தொடக்கம்
ஷார்ட்ஸ்
14-Jan-2026
எல் சால்வடாரில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள்
அமெரிக்கா
14-Jan-2026
எல் சால்வடார் மாணவர் விசா பெறும் முறைகள்
அமெரிக்கா
14-Jan-2026
கூட்டணியை விரைவில் அறிவிப்போம்: ராமதாஸ்
தமிழகம்
14-Jan-2026
பாசச்சீர் சுமந்து செல்கிறார் செல்லத்துரை
பொக்கிஷம்
14-Jan-2026
டொமினிகாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள்
அமெரிக்கா
14-Jan-2026
டொமினிகா மாணவர் விசா பெறும் நடைமுறை
அமெரிக்கா
14-Jan-2026
நேர்மையின் இன்னோரு பெயர் பத்மா
நிஜக்கதை
14-Jan-2026
மறந்துடாதீங்க... இது மயானக்குச்சி !
வெப் ஸ்டோரீஸ்
14-Jan-2026
உலக நாடுகளில், பொங்கல் விழா!
வெப் ஸ்டோரீஸ்
14-Jan-2026
நொய்டா கோவில்களில் தனுர் மாத பூஜைகள்
புதுடில்லி
14-Jan-2026
உறியடி பொங்கல் விழா துணை மேயர் கலகல
ஷார்ட்ஸ்
14-Jan-2026
மின்னும் அழகே... ஜான்வி கபூர்
வெப் ஸ்டோரீஸ்
14-Jan-2026
கியூபாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள்
அமெரிக்கா
14-Jan-2026
கியூபாவில் மாணவர் விசா பெறும் நடைமுறைகள்
அமெரிக்கா
14-Jan-2026
மாநில குத்துச்சண்டை: மாணவி வெற்றி
கல்விமலர் செய்திகள்
14-Jan-2026
பெரம்பலூர் கெத்து மோடி பொங்கல் விழா
ஷார்ட்ஸ்
14-Jan-2026
பாரம்பரிய சுவையில் தினை வெண்பொங்கல்
வெப் ஸ்டோரீஸ்
14-Jan-2026
குவைத்தில் பொங்கல் விழா
வளைகுடா
14-Jan-2026
இன்று போகிப்பண்டிகை கொண்டாட்டம்!
வெப் ஸ்டோரீஸ்
14-Jan-2026
செடிமுருங்கையில் சேதாரமின்றி லாபம்
விவசாய மலர்
14-Jan-2026
விவசாய மலர்: எங்கு... என்ன...
விவசாய மலர்
14-Jan-2026
தென்னை பராமரிப்பு அவசியம்
விவசாய மலர்
14-Jan-2026
ஒரு வார தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்
விவசாய மலர்
14-Jan-2026
புகையில்லா போகி கொண்டாட வலியுறுத்தல்
கரூர்
14-Jan-2026
சாலை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி
கரூர்
14-Jan-2026
ரெனோ டஸ்டர் 10 லட்சம் கி.மீ., சோதனை
கடையாணி
14-Jan-2026
பாதாள லிங்கம் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி
சேலம்
14-Jan-2026
ஓமலுார் ஜி.ஹெச்.,ல் இணை இயக்குனர் ஆய்வு
சேலம்
14-Jan-2026
17ல் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் கொண்டாட முடிவு
சேலம்
14-Jan-2026
சட்டசபை தேர்தல் எதிரொலி 34 இன்ஸ்பெக்டர் மாற்றம்
சேலம்
14-Jan-2026
எம்ப்ராய்டரி ஆரி பயிற்சி 35 பெண்கள் பங்கேற்பு
சேலம்
14-Jan-2026
20 முதல் சத்துணவு ஊழியர்கள் ஸ்டிரைக்
சேலம்
14-Jan-2026
தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் விழா கோலாகலம்
தர்மபுரி
14-Jan-2026
ஊரக வாழ்வாதார பணியாளர் 8ம் நாளாக போராட்டம்
சேலம்
14-Jan-2026
கோழிப்பண்ணையாளர் போராட்டம்
தர்மபுரி
14-Jan-2026
மாணவி உட்பட 2 பேர் மாயம்
கிருஷ்ணகிரி
14-Jan-2026
மளிகை கடைக்காரரை தாக்கிய இளைஞர் கைது
தர்மபுரி
14-Jan-2026
மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்
தர்மபுரி
14-Jan-2026
அரசு பள்ளிகளில் பொங்கல் திருவிழா
கிருஷ்ணகிரி
14-Jan-2026
மாநகர தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல்
கிருஷ்ணகிரி
14-Jan-2026
கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணி
கிருஷ்ணகிரி
14-Jan-2026
பள்ளி மாணவர்களுக்கு 2 நாள் இயற்கை முகாம்
கிருஷ்ணகிரி
14-Jan-2026
87 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்
கிருஷ்ணகிரி
14-Jan-2026
ரூ.38 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
நாமக்கல்
14-Jan-2026
தேங்காய் விலை சரிவு: விவசாயிகள் கவலை
நாமக்கல்
14-Jan-2026
காப்பு கட்டு பொருட்கள் விற்பனை ஜோர்
நாமக்கல்
14-Jan-2026
ரூ.3.70 கோடிக்கு மாடுகள் வியாபாரம்
நாமக்கல்
14-Jan-2026
அர்ச்சகர்களுக்கு புத்தாடை வழங்கல்
ஈரோடு
14-Jan-2026
தொழிற்பள்ளி துவங்க விண்ணப்பம் வரவேற்பு
ஈரோடு
14-Jan-2026
உள்ளூர் வர்த்தக செய்திகள்
ஈரோடு
14-Jan-2026
அரசு பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ஈரோடு
14-Jan-2026
ஜன., 20ல் தி.மு.க., - மா.செ., கூட்டம்
தமிழகம்
14-Jan-2026
என்னை கண்டு அஞ்சும் அரசு
தமிழகம்
14-Jan-2026
திராவிட மாடலின் நாடக பொங்கல்
தமிழகம்
14-Jan-2026
கூட்டணி தொடர்பாக குழப்பம் இல்லை: அ.ம.மு.க.,
தமிழகம்
14-Jan-2026
கூடலில் துாவிய சாரலும் துாறலும்
மதுரை
14-Jan-2026
இன்று நடக்கிறது துக்ளக் ஆண்டு விழா
சென்னை
14-Jan-2026
லிங்க் அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்
மதுரை
14-Jan-2026
ரயில் பயணிகள் தவிப்பு
மதுரை
14-Jan-2026
24ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூர்
14-Jan-2026
பள்ளி அருகே பாம்பு; தெறித்த பொதுமக்கள்
திருப்பூர்
14-Jan-2026
நுகர்வோருக்கு பொங்கல் பரிசு
மதுரை
14-Jan-2026
போகி விழிப்புணர்வு
மதுரை
14-Jan-2026
காங்., சமத்துவ பொங்கல்
புதுச்சேரி
14-Jan-2026
போலீஸ் செய்திகள்
மதுரை
14-Jan-2026
பிப்.20க்குள் அனைத்து மாணவருக்கும் லேப் டாப்
மதுரை
14-Jan-2026
இன்று இனிதாக திருப்பூர்
திருப்பூர்
14-Jan-2026
திருப்பூர் குமரனுக்கு நினைவு நாள் அஞ்சலி
திருப்பூர்
14-Jan-2026
ஜல்லிக்கட்டு போட்டி 108 ஆம்புலன்ஸ் தயார்
மதுரை
14-Jan-2026
குடும்பத்தகராறில் தந்தையை வெட்டிக் கொன்ற மகன்
மதுரை
14-Jan-2026
அ.தி.மு.க., எதிர்ப்பு: பூங்கா பெயர் அழிப்பு
மதுரை
14-Jan-2026
சத்குரு தியாகராஜ சுவாமி ஆராதனை இசை விழா
புதுச்சேரி
14-Jan-2026
பாவை விழா
மதுரை
14-Jan-2026
நகராட்சி ஆபீசில் ஆதார் பதிவு மையம்
திருப்பூர்
14-Jan-2026
அரசு பள்ளியில் பொங்கல் விழா
புதுச்சேரி
14-Jan-2026
சிலம்பம் கூட்டமைப்பு துவக்கம்
மதுரை
14-Jan-2026
இன்று இனிதாக பொள்ளாச்சி
திருப்பூர்
14-Jan-2026
பா.ஜ., சார்பில் பொங்கல் விழா
புதுச்சேரி
14-Jan-2026
பொங்கல் பானை விற்பனை மந்தம்
திருப்பூர்
14-Jan-2026
சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா
கோயம்புத்தூர்
14-Jan-2026
வேஸ்ட் ஆப் ஆர்ட் படைப்பு கண்காட்சி
கோயம்புத்தூர்
14-Jan-2026
தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
கோயம்புத்தூர்
14-Jan-2026
விவேகானந்தர் பிறந்தநாள் விழா
புதுச்சேரி
14-Jan-2026
ஹோலிபிளவர் பள்ளியில் பொங்கல் விழா
புதுச்சேரி
14-Jan-2026
மரியாள் நகரில் சமத்துவ பொங்கல்
புதுச்சேரி
14-Jan-2026
மகிஷாசுரமர்த்தினி கோயிலில் யாகம்
திண்டுக்கல்
14-Jan-2026
சுகாதாரத்துறை இயக்குனரகம் முற்றுகை
புதுச்சேரி
14-Jan-2026
தட்டாஞ்சாவடியில் தி.மு.க., பொங்கல் விழா
புதுச்சேரி
14-Jan-2026
போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
திண்டுக்கல்
14-Jan-2026
ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
14-Jan-2026
மாநில ஹேண்ட்பால் போட்டி
திண்டுக்கல்
14-Jan-2026
புகையில்லா போகி பரிசளிப்பு
திண்டுக்கல்
14-Jan-2026
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
புதுச்சேரி
14-Jan-2026
இயற்கை வேளாண்மை பயிற்சி
புதுச்சேரி
14-Jan-2026
ஊட்டி மழலையர் பள்ளியில் பொங்கல் விழா
நீலகிரி
14-Jan-2026
வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதுச்சேரி
14-Jan-2026
குன்னுாரில் வீணாகும் குடிநீர்
நீலகிரி
14-Jan-2026
கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
புதுச்சேரி
14-Jan-2026
புதுச்சேரியில் இன்று அரசு விடுமுறை
புதுச்சேரி
14-Jan-2026
சந்தையில் மாடுகள் விற்பனை விறுவிறு
கோயம்புத்தூர்
14-Jan-2026
அலகு குத்தி வந்த பக்தர்கள்
திண்டுக்கல்
14-Jan-2026
தவறி விழுந்து காயமடைந்தவர் சாவு
புதுச்சேரி
14-Jan-2026
குட்கா பறிமுதல்
புதுச்சேரி
14-Jan-2026
பிரம்மோற்சவ விழா 23ம் தேதி துவக்கம்
புதுச்சேரி
14-Jan-2026
டிரைவரை தாக்கிய 4 பேருக்கு வலை
புதுச்சேரி
14-Jan-2026
புல்மேட்டில் சிறப்பு ஏற்பாடுகள்
தேனி
14-Jan-2026
மேலப்பழங்கூரில் சுவாமி சிலைகள் சேதம்
கள்ளக்குறிச்சி
14-Jan-2026
இன்று இனிதாக பகுதிக்கு..
திண்டுக்கல்
14-Jan-2026
கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசளிப்பு
திண்டுக்கல்
14-Jan-2026
குட்கா விற்ற 21 கடைகளுக்கு சீல்
கள்ளக்குறிச்சி
14-Jan-2026
லட்சார்ச்சனை
கள்ளக்குறிச்சி
14-Jan-2026
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
விருதுநகர்
14-Jan-2026
சாரல் மழையால் அறுவடை பணிகள் தாமதம் --
விருதுநகர்
14-Jan-2026
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
விருதுநகர்
14-Jan-2026
காரியாபட்டியில் ஒரு கட்டு கரும்பு ரூ.500
விருதுநகர்
14-Jan-2026
மாணவ - மாணவியருக்கு பரிசு
திருவள்ளூர்
14-Jan-2026
துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு
கள்ளக்குறிச்சி
14-Jan-2026
பள்ளி கல்லுாரிகளில் பொங்கல் விழா
விருதுநகர்
14-Jan-2026
மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கல்
கள்ளக்குறிச்சி
14-Jan-2026
பட்டா கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது
திருவள்ளூர்
14-Jan-2026
குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ.,
தமிழகம்
14-Jan-2026
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்வு
தமிழகம்
14-Jan-2026
முதியவரிடம் பணம் பறித்தவர் கைது
திருவள்ளூர்
14-Jan-2026
மாணவிக்கு தொல்லை வாலிபருக்கு போக்சோ
திருவள்ளூர்
14-Jan-2026
நிவாரண உதவி வழங்கல்
கள்ளக்குறிச்சி
14-Jan-2026
பள்ளி ஆண்டு விழா
விருதுநகர்
14-Jan-2026
2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
கள்ளக்குறிச்சி
14-Jan-2026
இன்றைய நிகழ்ச்சி (ஜன. 14)
விருதுநகர்
14-Jan-2026
இருளில் மூழ்கிய வைப்பாறு பாலங்கள்
விருதுநகர்
14-Jan-2026
மின் விபத்தில் மூதாட்டி பலி
திருவள்ளூர்
14-Jan-2026
குட்கா விற்றவர் கைது
திருவள்ளூர்
14-Jan-2026
மது பாட்டில் விற்ற மூவர் கைது
கள்ளக்குறிச்சி
14-Jan-2026
கட்டடங்கள் திறப்பு அமைச்சர் பங்கேற்பு
விருதுநகர்
14-Jan-2026
பல்திறன் கலை போட்டி
விருதுநகர்
14-Jan-2026
மாமியார் திட்டியதால் மருமகள் தற்கொலை
கள்ளக்குறிச்சி
14-Jan-2026
இன்று இனிதாக... (14.01.2026) திருவள்ளூர்
திருவள்ளூர்
14-Jan-2026
டூவீலர் திருட்டு
தேனி
14-Jan-2026
மனைவி மாயம் கணவர் புகார்
கள்ளக்குறிச்சி
14-Jan-2026
மது பதுக்கிய இருவர் கைது
தேனி
14-Jan-2026
மனைவி புகார் கணவர் கைது
தேனி
14-Jan-2026
கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா கோலாகலம்
தேனி
14-Jan-2026
கல்லுாரியில் கண்காட்சி
காஞ்சிபுரம்
14-Jan-2026
சாராயம் விற்ற இருவர் கைது
கள்ளக்குறிச்சி
14-Jan-2026
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தேனி
14-Jan-2026
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம்
14-Jan-2026
கண்ணி வெடி கடத்திய வாலிபர்கள் கைது
ராணிப்பேட்டை
14-Jan-2026
வாகன விபத்தில் ஐயப்ப பக்தர்கள் மூவர் காயம்
தேனி
14-Jan-2026
முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
தமிழகம்
14-Jan-2026
சமத்துவ பொங்கல்
விழுப்புரம்
14-Jan-2026
2 நாளில் விடைபெறுகிறது வடகிழக்கு பருவமழை
தமிழகம்
14-Jan-2026
சிறப்பு முகாமில் சாதி சான்று வழங்கல்
திருப்பூர்
14-Jan-2026
சஸ்பெண்ட் பெண் இன்ஸ்., கைது
தமிழகம்
14-Jan-2026
8 உதவி இயக்குநர்களுக்கு இடமாறுதல்
காஞ்சிபுரம்
14-Jan-2026
மூன்று இடங்களில் பொங்கல் நிகழ்ச்சி
தேனி
14-Jan-2026
சமத்துவ பொங்கல் விழா
விழுப்புரம்
14-Jan-2026
இன்றைய நிகழ்ச்சி.......
தேனி
14-Jan-2026
புகையிலை பதுக்கியவர் கைது
தேனி
14-Jan-2026
மாசில்லா போகி கொண்டாட அறிவுறுத்தல்
தேனி
14-Jan-2026
தினமலர்-பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
விழுப்புரம்
14-Jan-2026
ெஹல்மெட் விழிப்பு ஊர்வலம்
சிவகங்கை
14-Jan-2026
டூவீலரில் அலைபேசி திருடும் கும்பல்
சிவகங்கை
14-Jan-2026
வெற்றீஸ்வரர் கோயிலில் பூஜை
சிவகங்கை
14-Jan-2026
நலம் காக்கும் முகாம்
சிவகங்கை
14-Jan-2026
பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
சிவகங்கை
14-Jan-2026
பொதுக்குழு கூட்டம்
சிவகங்கை
14-Jan-2026
சிலவரி செய்திகள்... விழுப்புரம்
விழுப்புரம்
14-Jan-2026
ஒரு வார தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்
செங்கல்பட்டு
14-Jan-2026
தீக்குளித்த பெண் சாவு
விழுப்புரம்
14-Jan-2026
சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் விழா
சிவகங்கை
14-Jan-2026
8 உதவி இயக்குநர்களுக்கு இடமாறுதல்
செங்கல்பட்டு
14-Jan-2026
துாய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் இழுபறி
சிவகங்கை
14-Jan-2026
வாக்காளர் திருத்த ஆலோசனை கூட்டம்
சிவகங்கை
14-Jan-2026
குட்கா பதுக்கிய கடை உரிமையாளர் கைது
விழுப்புரம்
14-Jan-2026
வாழைப்பழங்கள் விலை கடும் உயர்வு
சிவகங்கை
14-Jan-2026
இன்றைய நிகழ்ச்சி
சிவகங்கை
14-Jan-2026
கார் மோதி விவசாயி பலி
விழுப்புரம்
14-Jan-2026
இளம் பெண்கள் மாயம் போலீஸ் விசாரணை
விழுப்புரம்
14-Jan-2026
தபால் ஊழியரின் மனைவி தற்கொலை
விழுப்புரம்
14-Jan-2026
நலச் சங்க கூட்டம்
சிவகங்கை
14-Jan-2026
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
விழுப்புரம்
14-Jan-2026
ஆலோசனை கூட்டம்
விழுப்புரம்
14-Jan-2026
கால்நடைகளால் விபத்து அபாயம்
ராமநாதபுரம்
14-Jan-2026
மாநில குத்துச்சண்டை : மாணவி வெற்றி
ராமநாதபுரம்
14-Jan-2026
பொங்கலை முன்னிட்டு போலீஸ் அணிவகுப்பு
கடலூர்
14-Jan-2026
மாணவர்களுக்கு பரிசு
கடலூர்
14-Jan-2026
இலவச சைக்கிள் வழங்கல்
ராமநாதபுரம்
14-Jan-2026
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்
14-Jan-2026
லேப்டாப் வழங்கல்
கடலூர்
14-Jan-2026
பைக் விபத்தில் வடமாநில தொழிலாளி பலி
செங்கல்பட்டு
14-Jan-2026
பள்ளி மாணவி கடத்தல் வாலிபருக்கு போக்சோ
செங்கல்பட்டு
14-Jan-2026
சமத்துவ பொங்கல்
கடலூர்
14-Jan-2026
காத்திருப்பு போராட்டம்
கடலூர்
14-Jan-2026
4ம் டிவிஷன் போட்டி மீண்டும் ஒத்திவைப்பு
சென்னை
14-Jan-2026
விவேகானந்தர் பிறந்த தின விழா
ராமநாதபுரம்
14-Jan-2026
விழிப்புணர்வு நாடகம்
கடலூர்
14-Jan-2026
மாணவ - மாணவியருக்கு மடிக்கணினி வழங்கல்
செங்கல்பட்டு
14-Jan-2026
சமத்துவ பொங்கல்
கடலூர்
14-Jan-2026
பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்
ராமநாதபுரம்
14-Jan-2026
புத்தகம் வெளியீடு
ராமநாதபுரம்
14-Jan-2026
மாடு திருடிய 2 பேர் கைது
ராமநாதபுரம்
14-Jan-2026
இன்றைய நிகழ்ச்சி (14.1.2026)
ராமநாதபுரம்
14-Jan-2026
திருக்குறள் திருவிழா
கடலூர்
14-Jan-2026
விவசாயிகளுக்கு விதை, மரக்கன்று வழங்கல்
ராமநாதபுரம்
14-Jan-2026
நம்ம ஊரு மோடி பொங்கல் விழா
ராமநாதபுரம்
14-Jan-2026
வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் பொங்கல் விழா
கடலூர்
14-Jan-2026
விழிப்புணர்வு ஊர்வலம்
கடலூர்
14-Jan-2026
முப்பெரும் விழா
கடலூர்
14-Jan-2026
அரவான் கோயில் திருக்கல்யாண திருவிழா
கோயம்புத்தூர்
14-Jan-2026
அன்னூர் கோர்ட்டில் பொங்கல் விழா
கோயம்புத்தூர்
14-Jan-2026
உடல் வலிக்கு நொச்சி இலை குளியல்
கோயம்புத்தூர்
14-Jan-2026
முருங்கைக்காய் விலை மீண்டும் உச்சம்
கோயம்புத்தூர்
14-Jan-2026
ஆதரவு நிச்சயம்
டீ கடை பெஞ்ச்
14-Jan-2026
கடலுாரில் த.வெ.க., நிர்வாகிக்கு கத்திவெட்டு
கடலூர்
14-Jan-2026
பொங்கல் கொண்டாட்டத்திற்கு தயாரானது சென்னை
சென்னை
14-Jan-2026
காங். கட்சியினர் உண்ணாவிரதம்
கோயம்புத்தூர்
14-Jan-2026
மருத்துவமனையில் தொடரும் தாக்குதல்கள்
சென்னை
14-Jan-2026
தீப்பந்தம் ஏற்றி போராட்டம்
கடலூர்
14-Jan-2026
தேசிய இளைஞர் தின விழா
கோயம்புத்தூர்
14-Jan-2026
மின்சாரம் தாக்கி அமைச்சர் உறவினர் பலி
கடலூர்
14-Jan-2026
இனிப்பு வழங்கல்
கடலூர்
14-Jan-2026
லேப்டாப் வழங்கும் விழா
கோயம்புத்தூர்
14-Jan-2026
பொங்கல் தொகுப்பில் கரும்பை காணோம்
கடலூர்
14-Jan-2026
வழிப்பறி ஆட்டோ ஓட்டுநர் கைது
சென்னை
14-Jan-2026
சிறப்பு வழிபாடு
கடலூர்
14-Jan-2026
காசநோய் அலுவலகத்தில்...
கோயம்புத்தூர்
14-Jan-2026
போத்தனுாருக்கு சிறப்பு ரயில்
சென்னை
14-Jan-2026
அரசு மருத்துவமனையில் மகிழ்ச்சி பொங்கல் விழா
தமிழகம்
14-Jan-2026
மது பிரியர்களை ஏமாற்றிய டாஸ்மாக் நிர்வாகம்
கடலூர்
14-Jan-2026
பாரதியார் பல்கலையில் பொங்கல் விழா
கோயம்புத்தூர்
14-Jan-2026
விழிப்புணர்வு கருத்தரங்கு
கடலூர்
14-Jan-2026
மதுபோதையில் கண்டக்டருக்கு அடி, உதை
கோயம்புத்தூர்
14-Jan-2026
பெசன்ட் நகர் கடற்கரை கடைகளுக்கு அபராதம்
சென்னை
14-Jan-2026
பிராமணர் சங்க ஆண்டு விழா
சென்னை
14-Jan-2026
பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி
கடலூர்
14-Jan-2026
கிரைம் கார்னர் சென்னை
சென்னை
14-Jan-2026
பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை
கடலூர்
14-Jan-2026
இன்றைய நிகழ்ச்சி
கோயம்புத்தூர்
14-Jan-2026
தினமலர் நாளிதழின் தை திருநாள் பொங்கல்
கோயம்புத்தூர்
14-Jan-2026
கால்பந்து போட்டி விவேகம் அணி வெற்றி
கோயம்புத்தூர்
14-Jan-2026
புதுச்சேரி: புகார் பெட்டி
புகார் பெட்டி புதுச்சேரி
14-Jan-2026
ஒரு ரூபாய் கூட ஊழல் நடக்காது!
இந்தியா
14-Jan-2026
இதே நாளில் அன்று
இதே நாளில் அன்று
14-Jan-2026
முதலுக்கே மோசம்!
அக்கம் பக்கம்
14-Jan-2026
அடுத்த வருஷம் மறந்துடுவாங்க!
பக்கவாத்தியம்
14-Jan-2026
பேச்சு, பேட்டி, அறிக்கை
பேச்சு, பேட்டி, அறிக்கை
14-Jan-2026
அபாயகரமான அமெரிக்கா!
இது உங்கள் இடம்
14-Jan-2026
டவுட் தனபாலு
டவுட் தனபாலு
14-Jan-2026
பழமொழி: ஆடு பகையாம், குட்டி உறவாம்!
பழமொழி
14-Jan-2026
ரூ.5,000 எங்கடா? போஸ்டரால் பரபரப்பு!
தமிழகம்
14-Jan-2026
இன்று இனிதாக... (14.01.2026) பெங்களூரு
பெங்களூரு
14-Jan-2026
கட்சி சின்னத்தை மாற்றுகிறார் தேவகவுடா
பெங்களூரு
14-Jan-2026
அறிவாற்றலால் பிரபலமான அய் சிம்பன்சி மரணம்
உலகம்
14-Jan-2026
சபரிமலையில் இன்று மகர ஜோதி தரிசனம்
தமிழகம்
14-Jan-2026
போலி நிதி நிறுவனம் நடத்திய கும்பல் கைது
இந்தியா
14-Jan-2026
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது
இந்தியா
14-Jan-2026
விலை நிலவரம்: தங்கம் வெள்ளி
லாபம்
14-Jan-2026
2025 வாகன விற்பனை இதுவரை இல்லாத உச்சம்
பொது
14-Jan-2026
பாமாயில் இறக்குமதி டிசம்பரில் 20% குறைவு
பொது
14-Jan-2026
பாரத் கோக்கிங் கோல் 147 மடங்கு விண்ணப்பம்
லாபம்
14-Jan-2026
ஐ.பி.ஓ.,
லாபம்
14-Jan-2026
சால்டரிங் ஒயருக்கு தரக்கட்டுப்பாடு விதி ரத்து
பொது
14-Jan-2026
தினமலர் கண்ணியமான நாளிதழ்.
தினமலர் பவள விழா
14-Jan-2026
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
14-Jan-2026
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
14-Jan-2026
பீச் ஸ்டேஷனில் தீ அலறிய பயணிகள்!
ஷார்ட்ஸ்
14-Jan-2026
விண்ணை பிளந்த சரண கோஷம்!
ஷார்ட்ஸ்
14-Jan-2026
ஜோதி வடிவில் காட்சி தந்த ஐயப்பன்!
ஷார்ட்ஸ்
14-Jan-2026
விஜய் தைரியம் பெருமையா இருக்கு!
ஷார்ட்ஸ்
14-Jan-2026
Chetak C25 ev scooter ரூ. 91,399.ல் அறிமுகம்
ஷார்ட்ஸ்
14-Jan-2026
பீச் ஸ்டேஷனில் தீ அலறிய பயணிகள்
ஷார்ட்ஸ்
14-Jan-2026
விஜய்க்கு ராகுல் ஆதரவு ஏன்?
ஷார்ட்ஸ்
14-Jan-2026
தை பிறந்தால் வழி பிறக்கும்!
ஷார்ட்ஸ்
14-Jan-2026
பராசக்தி படத்தை கிழித்த கார்த்தி!
ஷார்ட்ஸ்
14-Jan-2026
விஜயை சாதாரணமா நினைக்கல!
ஷார்ட்ஸ்
14-Jan-2026
சென்னையில் விண்டேஜ் பஸ் ரூ.50க்கு ஜாலி ரைடு!
ஷார்ட்ஸ்
14-Jan-2026
பராசக்தி படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை!
ஷார்ட்ஸ்
14-Jan-2026
வந்தே மாதரம் பாடலுக்கு பரதம் ஆடிய கலைஞர்கள்!
ஷார்ட்ஸ்
14-Jan-2026
ஹெல்மெட் போடுங்க கரும்பு எடுத்துட்டு கடிங்க
ஷார்ட்ஸ்
14-Jan-2026
உற்சாகமாக பொங்கலை கொண்டாடிய ராமதாஸ்!
ஷார்ட்ஸ்
14-Jan-2026
மோடி பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்!
ஷார்ட்ஸ்
14-Jan-2026
பானையில் பொங்கல் வைத்து கும்பிட்ட மோடி!
ஷார்ட்ஸ்
14-Jan-2026
கோட்டையில் பொங்கலிட்ட ஸ்டாலின்!
ஷார்ட்ஸ்
14-Jan-2026
டான்ஸ் ஆடி பொங்கல் கொண்டாடிய கலெக்டர்!
ஷார்ட்ஸ்
14-Jan-2026
மேஷம்: அசுவினி..: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் சஞ்சரித்தாலும், லாபாதிபதி சனி லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சந்திப்பதுடன், யோகக்காரகன் ராகுவும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் கை கொடுக்கும். அந்நியரால் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உங்கள் பாக்யாதிபதி மாதம் முழுவதும் சகாய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரித்தாலும், வக்கிர குரு முன் ராசிக்குரிய பலனைக் கொடுப்பார் என்பதால், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்ப்பு, நோய்நொடி, வழக்கு போன்ற சங்கடங்கள் விலகும். திடீர் வாய்ப்பு தேடி வரும். நடப்பவை யாவும் நன்மையாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். முடங்கிக் கிடந்த தொழில்கள் மீண்டும் முன்னேற்றம் அடையும். பணியாளர் ஒத்துழைப்புக் கிடைக்கும். சேமிப்பு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும். விவசாயிகள் இந்த நேரத்தில் விளைச்சலில் அக்கறை செலுத்த வேண்டும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும்.சந்திராஷ்டமம்: பிப். 10.அதிர்ஷ்ட நாள்: ஜன. 16, 18, 25, 27, பிப். 7, 9.பரிகாரம் கற்பக விநாயகரை வழிபட வாழ்க்கையில் நன்மை நடக்கும்.பரணிஎந்த நிலை வந்தாலும் அதற்கேற்ப வாழத் தெரிந்த உங்களுக்கு, தை முன்னேற்றமான மாதமாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாதம் முழுதும் பத்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. பிப். 7 வரை சுக்கிரன் உங்கள் ஆசைகளைத் துாண்டி செலவுகளை அதிகரிக்கலாம் என்பதால் பண விவகாரத்தில் கொஞ்சம் கூடுதலாக எச்சரிக்கை தேவை. உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சூரியன், ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சூரியனைக் கண்ட பனி போல சங்கடங்கள் விலகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்பவர்களுக்கு அரசின் அனுமதி கிடைக்கும். கடனாக கேட்டிருந்த பணம் கைக்கு வரும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். சகாய ஸ்தனாதிபதி புதனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விற்பனை உயரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வர். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். ஞான மோட்சக்காரகன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உறவினர்களைப் பற்றி புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம்: ஜன. 15, பிப்.11.அதிர்ஷ்ட நாள்: ஜன. 18, 24, 27, பிப். 6, 9.பரிகாரம்திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.கார்த்திகை 1 ம் பாதம்தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது உங்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். பூர்வ புண்ணியாதிபதி சூரியன், மாதம் முழுவதும் ஜீவன ஸ்தானத்தில் புதனுடன் இணைந்து, புத ஆதித்ய யோகத்தை அளிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்தது நடந்தேறும். பொன்னும், பொருளும் சேரும். நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலையில் செல்வாக்கு உயரும். நடக்குமா நடக்காதா என கேள்விக்குறியாக இருந்த வேலைகள் எல்லாம் இப்போது நடந்தேறும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் செல்வாக்கை உயர்த்துவர். பொருளாதார நிலை மேம்படும். இதுவரை இருந்த நெருக்கடி மறையும். எதிர்பார்த்த பணம் வரும். திடீர் வாய்ப்பால் உங்கள் நிலை உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கையில் பணம் புழங்கும். தொழிலை விரிவு செய்யக்கூடிய நிலை ஏற்படும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்கள் கனவு நனவாகும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். விவசாயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால் லாபம் அதிகரிக்கும். ஐந்தாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை தேவை. சந்திராஷ்டமம்: ஜன.16, பிப்.12அதிர்ஷ்ட நாள்: ஜன.18,19, 27, 28, பிப்.1,9,10பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.
மாத ராசி பலன்
14-Jan-2026
ரிஷபம்: கார்த்திகை 2,3,4 ம் பாதம்: சுயமாக சிந்தித்து வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாகும். உங்கள் ராசிக்கு சுகாதிபதியான சூரியன், அஷ்டம ஸ்தானத்தை விட்டு விலகி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சி வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். சூழ்நிலையின் காரணமாக மனதில் ஒருவித பயம் இருந்தாலும் உங்கள் வேலையில் உறுதியாக இருப்பீர்கள். பிப்.7 வரை ராசியாதிபதி சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்கள் பொருளாதார நிலை உயரும். புதிய இடம், வாகனம் வாங்க முடியும். மனதை அழுத்திக் கொண்டிருந்த சங்கடம் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். எதிர்பார்த்த பணம் வரும். இதுவரை நஷ்டத்தில் இயங்கி வந்த தொழில்கள் இனி லாபம் காணும். கடந்த மாதம் வரை தடைபட்டு உங்களுக்கு பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் நெருக்கடியை ஏற்படுத்திய வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். சுயதொழில் செய்பவர்களுக்கு வருமானம் உயரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுப்பது கூடுதல் நன்மை தரும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் வரும். கையில் பணம் புழங்கும்.சந்திராஷ்டமம்: ஜன.16அதிர்ஷ்ட நாள்: ஜன.15,19,24,28,பிப்.1,6,10பரிகாரம்சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை உண்டாகும்.ரோகிணிநினைத்ததை சாதிக்கும் வரை உறுதியாக இருந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மை தரும் மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் ராசிநாதனுடன் செவ்வாய், சூரியன், புதன் சஞ்சரிக்கும் நிலையில் தை மாதம் பிறப்பதால், திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் வெற்றி உண்டாகும். புத, ஆதித்ய யோகத்தால் உங்கள் செல்வாக்கு உயரும். வாழ்க்கையில் இருந்த பெரிய பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். இதுவரை உங்களுக்கிருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். தெய்வ அருளால் மனதில் நிம்மதி உண்டாகும். சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழும் அளவிற்கு உங்கள் செல்வாக்கு உயரும். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வாங்க நினைத்த இடத்தை வாங்க முடியும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய முதலீடு செய்பவர்கள் நன்றாக யோசித்து அதன் பிறகு முதலீடு செய்வது நன்மை தரும். வர வேண்டிய வருமானம் வந்து கொண்டிருக்கும். தாயாரின் நிலையில் சங்கடங்கள் வரும். எந்த ஒன்றிலும் உங்கள் முயற்சிக்கேற்ப நன்மையை அடைய முடியும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு வரும். மாதக்கடைசியில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பொன், பொருள், புதிய வாகனம் என குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜன.17அதிர்ஷட நாள்: ஜன.15, 20, 24, 29. பிப். 2, 6, 11பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 1,2 ம் பாதம்: துணிச்சலாக செயல்பட்டு எடுத்த வேலையில் வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதமாகும். இரண்டாம் இடத்தில் வக்கிரம் அடைந்திருக்கும் குரு, குடும்பத்திற்குள் நன்மைகளை அதிகரிப்பார். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாக்குவார். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெரியோரின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். உங்கள் ராசியாதிபதியுடன் புதன், செவ்வாய், சூரியன் இணைந்திருப்பதால் ஒவ்வொரு வேலையையும் நான்கு வழிகளில் முயற்சி செய்வீர்கள். வருமானமும் ஒன்றில் இல்லாவிட்டால் மற்றொன்றில் வந்து கொண்டிருக்கும். தொழிலை விரிவு செய்வதுடன் வேறொரு தொழிலையும் தொடங்குவீர்கள். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். வயதானவர்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வாழ்க்கைத்துணைக்கு உடல் சங்கடம் வந்தாலும் விரைவில் குணமாகும். ஜன. 29 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொருளாதார நிலை உயரும். என்றோ செய்த முதலீட்டில் இருந்து ஆதாயம் வரும். வங்கியில் கேட்ட கடன் கிடைக்கும். விற்பனையில் இருந்த பிரச்னை விலகும். எதிர்ப்பு இல்லாமல் போகும். பணியாளர்கள் தங்களுக்குரிய பொறுப்பினை உணர்ந்து செயல்படுவதுடன், மேலதிகாரியின் ஆலோசனையை பின்பற்றுவது நல்லது. சந்திராஷ்டமம்: ஜன.18அதிர்ஷ்ட நாள்: ஜன.24, 27, பிப்.6, 9பரிகாரம்திருத்தணி முருகனை வழிபட உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.
மாத ராசி பலன்
14-Jan-2026
மிதுனம்: மிருகசீரிடம் 3,4 ம் பாதம்:தன்னம்பிக்கையுடன் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதத்தில் அதிர்ஷ்டக்காற்று உங்கள் பக்கம் வீசப்போகிறது. ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரிய யோகங்கள் உங்களுக்கு உண்டாகும். மறைந்த புதன் நிறைந்த செல்வத்தை தருவார் என்பது விதி. அவர் சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கும் போது புத ஆதித்ய யோகம் உண்டாகும். அதனால் ஜன. 21 வரை அஷ்டம சூரியனின் பாதிப்பு குறையும். எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்தில் தனித்துவம் பெறுவீர்கள். உங்கள் புத்திசாலித்தனமும் அனுபவமும் இந்த நேரத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். எந்தவித நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தியும் ஏற்படும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தித் தருவார். மற்றவர்களால் முடிக்க முடியாத வேலையையும் முடித்துக் காட்டுவீர்கள். தொழில் எதிரிகள் விலகிச் செல்வர். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேரும். பெண்களின் மனதில் இருந்த குறை நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி விற்பனையும் வருமானமும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விளைச்சல் வீடுவந்து சேரும் வரை விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும்.சந்திராஷ்டமம்: ஜன.18, 19அதிர்ஷ்ட நாள்: ஜன. 23, 27. பிப். 5, 9பரிகாரம்மருதமலை முருகனை வழிபட நன்மை சேரும். திருவாதிரைபுத்திசாலித்தனத்துடன் எதையும் சாதிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் மிக யோகமான மாதமாகும். ஜீவன காரகனான சனியும், யோக காரகனான ராகுவும் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நன்மை அதிகரிக்கும். உங்கள் வேலைகளிலோ, வருமானத்திலோ, முன்னேற்றத்திலோ தடைகள் இல்லை என்ற நிலை உருவாகும். என்ன வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் சக்தியும் உங்களுக்கு இருக்கும். பணியாளர்களுக்கு ஒரு பக்கம் மறைமுகத் தொல்லைகள் இருந்தாலும் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதியதாக என்ன செய்யலாம் என யோசிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் முடிவு வரும் வரை அதில் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பீர்கள். வெளிநாட்டுத் தொடர்பு ஆதாயம் தரும். கடந்த மாதம் வரை குடும்பத்தில் இருந்த நெருக்கடி, பிரச்னைகள் விலகும். அந்நியரால் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட சச்சரவு முடிவிற்கு வரும். ஒற்றுமை அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். அதே நேரத்தில் உங்கள் லாபாதிபதி செவ்வாயும், சகாய ஸ்தானாதிபதி சூரியனும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனைத்திலும் கூடுதல் கவனம் தேவை. பணியாளர்கள் இந்த நேரத்தில் தங்கள் பொறுப்பில் கவனமாக இருப்பதும், மற்றவர் கூறும்படி செயல்படாமல் சட்டப்படி செயல்படுவதும் நன்மை தரும். சில வியாபாரிகளுக்கு வருமான வரித்துறை, விற்பனை வரித்துறை மூலம் சங்கடம் ஏற்பட வாய்ப்புண்டு. கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பது நல்லது. முக்கிய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. ஜன. 29 வரை ராசி நாதன் புதனால் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். முயற்சி வெற்றியாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: ஜன.19, 20.அதிர்ஷ்ட நாள்: ஜன.22, 23, 31,பிப்.4, 5.பரிகாரம்தில்லை காளியை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.புனர்பூசம்பிறரை வழிநடத்தும் திறமை கொண்ட உங்களுக்கு, தை மாதம் புதிய வழியைக் காட்டும் மாதமாக இருக்கும். ராசிக்குள் வக்கிரமாக சஞ்சரிக்கும் குரு மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவார். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம், அலைச்சல் உண்டாகும். செலவு அதிகரிக்கும் என்றாலும் அதன் வழியே உங்கள் நிலையிலும் நன்மையை ஏற்படுத்துவார். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வீண் வம்பு வழக்கு தொல்லைகள் என்றிருந்த நிலை மாறும். திடீர் வாய்ப்பு தேடி வரும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் போட்டிப் போட்டு உங்களை முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பர். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், செவ்வாயும் உடல் நிலையில் கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்துவர். இல்லை என்றால் உங்கள் மனதிற்கு சங்கடம் தரும் அளவிற்கு வேலை பார்க்கும் இடத்திலும், குடும்பத்திலும் சில சம்பவங்கள் நடக்கும். தொழிலில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். பல வழியிலும் செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் கடும் போட்டிகள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு தாமதமாகும் என்றாலும் இவற்றை எல்லாம் உங்களால் சமாளிக்கவும் முடியும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் சொல்வதும், நிதானமாக செயல்படுவதும் நன்மை தரும். மணவர்கள் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. பெண்களுக்கு மன ரீதியாக ஏற்பட்ட சங்கடம் விலகும். வயதானவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு சற்று விலகும். சந்திராஷ்டமம்: ஜன.20, 21அதிர்ஷ்ட நாள்: ஜன.23, 30, பிப். 3, 5, 12பரிகாரம்வள்ளிமணாளன் முருகனை வழிபட வெற்றி கிடைக்கும்.
மாத ராசி பலன்
14-Jan-2026
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்: நாளை வருவதை முன்னதாக அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். மாதம் முழுதும் குரு விரய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிப்பதால் செலவு கூடுதலாகும். அலைச்சல் அதிகரிக்கும். எந்த ஒன்றையும் நினைத்த மாத்திரத்தில் முடிக்க முடியாமல் போகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிவர் இடையே இணக்கமற்ற நிலை ஏற்படும். ஏதாவது ஒரு சங்கடம் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிலர் சங்கடத்திற்கு ஆளாவர். யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு அதனால் நெருக்கடி உண்டாகும். உங்கள் சகாய ஸ்தானதிபதி புதன் ஜன.29 முதல் 8ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். யோசிக்காமல் செய்த வேலைகளிலும் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் குடியிருக்கும் இடத்தை மாற்றம் செய்வர். சொந்த வீட்டில் குடியேறும் வாய்ப்பும் சிலருக்கு உண்டாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். எதிர்காலத்தை எண்ணி புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு, பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. சந்திராஷ்டமம்: ஜன.21அதிர்ஷ்ட நாள்: ஜன.20,29,30, பிப். 2,3,11,12பரிகாரம்வீரபத்திரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.பூசம் நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனியுடன் ராகுவும் கூட்டணி சேர்வதால் எல்லாவற்றிலும் தடை, தாமதம், சங்கடம் என்ற நிலை உண்டாகும். மனதில் இனம் புரியாத குழப்பமும், பயமும் ஏற்படும். சிலருக்கு உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். சுய ஜாதகம் பலமாக இருப்பவர்களுக்கு, நன்மையான தசா புத்தி நடப்பவர்களுக்கு இத்தகைய சங்கடங்கள் ஏற்படாமல் போகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வேலையின் காரணமாக குடும்பத்துடன் வெளியூர் சென்று வசிக்கும் நிலையும் சிலருக்கு ஏற்படும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். பிப். 7 வரை சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் உங்களுக்குள் தடுமாற்றம் ஏற்பட்டு அதனால் பிரச்னைக்கு ஆளாக நேரும். அதனால் விழிப்புடன் இருப்பது அவசியம். புதியவர்களை நம்பி எந்த வேலையிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். சப்தம ஸ்தானத்தில் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் உச்சமாக இருப்பதால் அசாத்திய துணிச்சல் உண்டாகும். புது இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் வரும். வங்கியில் கேட்டிருந்த பணம் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைப்பதுடன் பண வரவும் இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும். உறவுகளுக்கும், உங்களுக்கும் இணக்கம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜன.21, 22.அதிர்ஷ்ட நாள்: ஜன.17, 20, 26, 29. பிப். 2, 8, 11.பரிகாரம்சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்ற நன்மை அதிகரிக்கும். ஆயில்யம்: சூழல் அறிந்து செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஜன. 29 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரம், தொழில், வேலை, குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு மருத்துவத்தால் குணமாகும். அஷ்டமச்சனி, ராகுவின் நெருக்கடி உங்களை நெருங்காமல் போகும். சப்தம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் செவ்வாயும், உங்கள் தன குடும்பாதிபதி சூரியனும் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவர். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். மற்றவரால் உதாசீனம் செய்யப்பட்ட நிலை மாறும். பிறர் பார்த்து வியக்கும் வகையில் உங்கள் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். அதே நேரத்தில் அந்நியரால் இந்த நேரத்தில் குடும்பத்திற்குள் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். யாராக இருந்தாலும் ஓரடி விலகி இருப்பது நல்லது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வார்த்தைக்கேற்ப பொன், பொருள் சேரும். நீண்ட நாள் கனவு நனவாகும். விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். விளைபொருள் வீடு வந்து சேரும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். இரண்டாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், வார்த்தைகளில் கவனமாக இருப்பதும் நன்மையை ஏற்படுத்தும்.சந்திராஷ்டமம்: ஜன.20, 23அதிர்ஷ்ட நாள்: ஜன.20, 29. பிப். 2, 5, 11பரிகாரம் மீனாட்சியம்மனை வழிபட சங்கடம் தீரும். நினைப்பது நடந்தேறும்.
மாத ராசி பலன்
14-Jan-2026
சிம்மம்: மகம்..: தெய்வமே துணை என்ற எண்ணமுடன் வாழும் உங்களுக்கு, பிரகாசமான மாதமாக தை இருக்கும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல உங்கள் நிலை மாறும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். புதிய வழிகள் தெரியும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது நெருக்கடிகளை உண்டாக்கும். ஒவ்வொன்றிலும் தடை, தாமதம், அலைக்கழிப்பு என்று போராட்டமான நிலை உண்டாக்கும். இவற்றையும் மீறி சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பாக்யாதிபதி செவ்வாய் பெரிய முன்னேற்றத்தை உண்டாக்குவார். எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்ற நிலையை உண்டாக்குவார். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். செல்வாக்கு உயரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வியாபாரிகளுக்கு விற்பனையில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். துறை ரீதியான வழக்குகள் சாதகமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு தேடி வரும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் கூட்டணி அமைத்து நெருக்கடி உண்டாக்கினாலும் புத்திசாலித்தனத்தால் வெற்றி பெற்று லாபம் காண்பீர்கள். லாப ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்துள்ள குரு வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். வெளிநாடுகளில் வேலைப் பார்ப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். மனதில் நிம்மதி உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜன.23,24அதிர்ஷ்ட நாள்: ஜன.16,19,25,28, பிப்.1,7,10பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலைச் சாத்த நன்மை உண்டாகும்.பூரம்எந்நிலையிலும் சோர்வடையாமல் முன்னேற்றத்தில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, தை மாதம் முன்னேற்றமான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். சப்தம ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத்துணையின் உடல் நிலையில் ஏதேனும் பிரச்னை இருந்து கொண்டிருக்கும். திருமண வயதினருக்கு இந்த நேரத்தில் எந்தவகை முயற்சி மேற்கொண்டாலும் அது நிறைவேறாமல் போகும். மாதம் முழுவதும் ராசிநாதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்ப்பு, பகை, நோய், நொடி, வம்பு, வழக்குகள் இடம் தெரியாமல் போகும். உங்கள் நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும். பணியாளர்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும், வெளிநாடு செல்லவும் அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். இடம் விற்பது, வாங்குவது போன்றவற்றில் ஏற்பட்ட தடை விலகும். சிலர் புதிய இடம் வாங்கி வீடு கட்டும் முயற்சியை மேற்கொள்வர். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். இந்த நேரத்தில் அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சஞ்சார நிலை எதிர்மறையாக இருப்பதால் தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். புதிய நண்பர்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். அவர்களால் பண இழப்பு, அல்லது அவமானத்தை சந்திக்க நேரலாம். உடல் நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்பவர்கள் மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது நன்மையாகும். ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுபவர்கள் ஜன.29 வரை ஆதாயம் காண முடியும். மாணவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகி படிப்பில் கவனம் உண்டாகும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஜன.24, 25அதிர்ஷ்ட நாள்: ஜன.15, 19, 28. பிப்.1, 6, 10பரிகாரம்அங்காள பரமேஸ்வரியை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.உத்திரம் 1 ம் பாதம்: எந்த இடத்திலும் முதன்மை வகிக்கும் உங்களுக்கு அதிர்ஷ்டம் மாதமாக தை இருக்கும். சனி, ராகு, கேது நெருக்கடியை ஏற்படுத்தினாலும், ராசிநாதன் சூரியன் சத்ரு ஜெய ஸ்தானமான ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி இருந்த இடம் தெரியாமல் போகும். செல்வாக்கு உயரும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்ந்திருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல் பிரமுகர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு இழுபறியாக இருந்த இடமாற்றம், பதவி உயர்வு இப்போது தேடி வரும். ஆறாம் இடத்தில் உங்கள் பாக்கியாதிபதி செவ்வாயும் ராசி நாதனுடன் கூட்டணி அமைத்திருப்பதால் தைரியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். மற்றவர்கள் பார்த்து பிரமிக்கும் அளவிற்கு உங்கள் முன்னேற்றம் இருக்கும். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும். சொந்த இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஜன.29 வரை உங்கள் தன, குடும்பாதிபதி புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். உடல் பாதிப்பு விலகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். மொத்தத்தில் இந்த மாதம் சுபிட்சமான மாதமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: ஜன.25அதிர்ஷ்ட நாள்: ஜன.19, 28. பிப். 1, 10பரிகாரம்அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்ய நன்மை அதிகரிக்கும்.
மாத ராசி பலன்
14-Jan-2026
கன்னி: உத்திரம் 2,3,4 ம் பாதம்எதிலும் கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் செயல்களில் வேகத்தை ஏற்படுத்துவார். உழைப்பை அதிகரிப்பார், அதன் காரணமாக உடல் நிலையில் சங்கடங்கள் ஏற்படும் என்றாலும், இந்த நேரத்தில் ஆயுள்காரகன் சனியும், யோகக்காரகன் ராகுவும் சாதகமாக சஞ்சரிப்பதால் அவர்கள் அரண் போல் உங்களைப் பாதுகாப்பர். உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் தோன்றிய பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலையில் இருந்த நெருக்கடிகள் விலகும். எடுத்த வேலையைச் செய்து முடித்திடக் கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். பிப்.7 வரை தன குடும்பாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். கையில் பணம் புழங்கும். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை உண்டாகும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானத்தை வைத்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவதுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: ஜன.25,26அதிர்ஷ்ட நாள்: ஜன.19,23, 28,பிப்.1,5,10பரிகாரம்: சிதம்பரம் நடராஜரை வழிபட நன்மை உண்டாகும்.அஸ்தம்மன வலிமை, புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாகும். தொழில் காரகனான சனி, ராகுவுடன் இணைந்து சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேலை மீதிருந்த பயம் போகும். சுய தொழில் செய்பவர்களுக்கு நீண்டநாள் முயற்சி இப்போது வெற்றியாகும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். தேவையான அளவிற்கு பணமும் வந்து கொண்டிருக்கும். புதிய வேலை தொடங்க காத்திருந்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். கடந்த காலத்தில் இருந்த பண நெருக்கடி மறையும். திறமை மதிக்கப்படும். பிப். 29 முதல் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய இடம் வாங்கவும், விற்க முடியாமல் இருந்த இடத்தை விற்கவும் வழியுண்டாகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். விரய ஸ்தானத்தில் கேதுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாயும் சஞ்சரிப்பதால் வரவு செலவில் கவனமாக இருப்பதுடன் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வதும் நன்மை தரும். தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுப்பது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜன. 26, 27.அதிர்ஷ்ட நாள்: ஜன. 20, 23, 29. பிப். 2, 5, 11.பரிகாரம்அர்த்தநாரீஸ்வரரை வழிபட சங்கடம் எல்லாம் விலகும்.சித்திரை 1, 2 ம் பாதம்கோபம் இருந்தாலும் அதை மறைத்து நிதானமாக செயல்பட்டு வரும் உங்களுக்கு, தை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிக்கு 3 க்கும் 8 க்கும் உடைய செவ்வாய் 5 ம் இடத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் கவனமாக இருப்பது நன்மை தரும். மற்றவரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காமல் ஒவ்வொன்றையும் நீங்களே முன் நின்று செய்யும் போது அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானும், ராகுவும் எல்லா வகையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். நோய் நொடி இல்லாமல் போகும். வம்பு வழக்கு முடிவிற்கு வரும். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர்கள் விலகிச் செல்வர். வருமானம் பல மடங்கு உயரும். சொத்து சேரும். அரசியல்வாதிகளுக்கு யோகமான நேரமாக இருக்கும். பிப்.7 வரை அதிர்ஷ்டக்காரகனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, பொன் பொருள் சேர்க்கை, புதிய வாகனம் என்ற நிலை குடும்பத்தில் இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலைகளை நடத்தி முடிக்க முடியும். ஜன.29 முதல் நினைத்த செயல்கள் எந்தவித தடையுமின்றி நடந்தேறும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகள் இந்த மாதத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். விளைச்சல் வீடு வந்து சேர வேண்டும் என்றால் அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் அக்கறையாக இருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட், புதிய முதலீடுகள் போன்றவற்றில் கூடுதல் கவனம் வேண்டும். படிப்புதான் உலகம் என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு முழு கவனத்தையும் படிப்பில் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜன.27அதிர்ஷ்ட நாள்: ஜன.18, 23, 27. பிப். 5, 9பரிகாரம் : லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்.
மாத ராசி பலன்
14-Jan-2026
துலாம்: சித்திரை 3,4 ம் பாதம்:புதிய முயற்சிகளில் உறுதியாக இருந்து முன்னேற்றம் அடையும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாகும். உங்கள் ராசிக்கு தன குடும்பாதிபதியும், சப்தமாதிபதியுமான தைரிய வீரிய பராக்கிரமக் காரகன் செவ்வாய் கேந்திர ஸ்தானமான 4ல் உச்சமாக சஞ்சரிப்பதால் உங்களிடம் இருந்த சோம்பல், நலிவு எல்லாம் விலகி சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். அரைகுறையாக விட்டு வைத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர்கள். பயந்து பயந்து செயல்பட்ட நிலை இனி இருக்காது. உங்களைக் குறை கூறியவர்களும் பாராட்டும் நிலை உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவுடன் புதிய பொறுப்பும் கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருக்கும் குருவால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பார்த்த பணம் வரும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்கு, பிரச்னைகள் முடிவிற்கு வரும். செய்து வரும் தொழிலை விரிவு செய்யக் கூடிய நிலை சிலருக்கு ஏற்படும். சொந்த இடம் இல்லை வீடு இல்லை என்ற மனக்குறை விலகும். சொந்த வீட்டில் குடியேறும் நிலை உருவாகும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும்.சந்திராஷ்டமம்: ஜன.27, 28.அதிர்ஷ்ட நாள்: ஜன.15, 18, 24, பிப். 6, 9.பரிகாரம் : ராஜ ராஜேஸ்வரியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.சுவாதிபெரிய அளவில் திட்டங்கள் தீட்டி அதைச் செயல்படுத்துவதில் வல்லவரான உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கர்மக்காரகன் சனியுடன், ராகு கூட்டணி அமைத்திருப்பதால் குடும்பத்தில் ஏதேனும் நெருக்கடி, பிரச்னை இருந்து கொண்டே இருக்கும். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். உங்கள் வாழ்வுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வருமானம் வரும். வரவிற்கேற்ப செலவு செய்ய பழகிக் கொள்வீர்கள். வேலைப் பார்க்கும் இடத்தில் சிறு பிரச்னைகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு எதிராக மாறக் கூடும், அவர்கள் செய்த தவறுக்கு உங்கள் பழி சுமத்துவர் என்றாலும், மேலதிகாரியின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு இந்த மாதத்தில் கிடைக்கும். ஜன.29 வரை உங்கள் பாக்கியாதிபதி புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனத்தால் சாதனை புரிவீர்கள். கொடுக்கல் வாங்கல் சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய இடம், வீடு வாங்கும் நிலை உருவாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். கலைஞர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வங்கியில் கேட்ட பணம் கிடைக்கும். புதிய வாகனம், ஆடை, ஆபரணம் சேரும். சுகஸ்தானத்தில் லாபாதிபதி சூரியனும், செவ்வாய் உச்சமாகவும் சஞ்சரிப்பதால் வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்வு உறக்கம் குறைவதால் உடல் நிலையில் சங்கடம் வந்து போகும். தாயாரின் உடல் நிலையில் அக்கறை தேவை. மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். வியாபாரிகளுக்கு வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வயதானவர்கள் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜன. 28, 29அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 22, 24, 31. பிப். 4, 6பரிகாரம் : துர்கையை வழிபட்டால் முயற்சி வெற்றி பெறும். விசாகம் 1,2,3 ம் பாதம்அதிர்ஷ்டம், உலக ஞானத்தையும் ஒன்றாக கொண்டிருக்கும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஞானக் காரகன் குரு பாக்கிய ஸ்தானத்தில் வக்ரமாகி இருப்பதால் பணவரவில் எதிர்பாராத தடை ஏற்படும். அவசரம் அவசரமாக சில வேலைகளில் ஈடுபட்டு நெருக்கடிக்கு ஆளாக நேரும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். விரய செலவு குறையும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். ஜன.29 வரை எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிப்.7 முதல் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக சந்திப்பதால் ஆடை, ஆபரணம் சேரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் நெருக்கடி விலகும். அரசு பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். ஆனால் உழைப்பு அதிகரிக்கும். அவசர வேலைகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதனால் உடல் நிலையில் பாதிப்புகள் வந்து போகும். நேரத்திற்கு துாங்குவது, சாப்பிடுவது என சரியாக இருந்தால் உடல் நிலை சீராகும். புதியவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவைக்கேற்ற வருமானம் வருவதால் பணநெருக்கடி இருக்காது. மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது நல்லது. சந்திராஷ்டமம்: ஜன. 29.அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 21, 24, 30. பிப். 3, 6, 12.பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட வாழ்வு வளம் பெறும். நன்மை நடக்கும்.
மாத ராசி பலன்
14-Jan-2026
விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்:எந்த வேலையை எப்படி முடிக்க வேண்டும் எனத் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாகும். உங்கள் தன குடும்பாதிபதியும், பூர்வ புண்ணியாதிபதியுமான குரு எட்டில் வக்கிரம் அடைந்த நிலையில் அவர் முன் ராசிக்குரிய பலனை வழங்க வேண்டியவராகிறார் என்பதால், குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். தைரியமாக செயல்படும் மனநிலை உண்டாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். விற்பனையில் எதிர்பார்த்த லாபம் வரும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். சமீபத்தில் உறவுகள், நண்பர்களால் நிறைய அனுபவங்களை அடைந்திருக்கும் நீங்கள் வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும், இனி எப்படி வாழ வேண்டும் என்ற முடிவிற்கு வருவீர்கள். கர்மக்காரகன் சனி பகவானின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் உங்கள் செயல்களில் நிதானம் இருக்கும். எடுக்கும் வேலைகள் உடனுக்குடன் முடிவிற்கு வராமல் இழுபறியாகும். அதற்காக மனம் தளர வேண்டாம். சனி நிதானமாக பலன் தரக் கூடியவர் என்பதால் உங்கள் உழைப்பிற்குரிய பலன் கிடைக்கும். அதே நேரத்தில் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவைப்படும். கடந்த இரண்டரை ஆண்டாகவே சனிப் பார்வையால் உங்கள் உடல் நிலையில் ஏதேனும் பாதிப்பு இருக்கும். விரைவில் சனிப்பெயர்ச்சியாக இருப்பதால் சங்கடம் விலகும். தை மாதம் வாழ்வில் நிறைய மாற்றத்தை சந்திப்பீர்கள். நன்மை அடையும் மாதமாகவும் இருக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஜன.29அதிர்ஷ்ட நாள்: ஜன.18, 21, 27, 30. பிப். 3,9,12பரிகாரம் வராகியை வழிபட எதிர்ப்பு விலகும். நன்மை உண்டாகும்.அனுஷம்வாழ்க்கை என்பது என்ன, உறவினர் என்பவர் யார் என்பதை நன்கு அறிந்த உங்களுக்கு தை மாதம் நன்மை தரும் மாதமாக அமையும். சனி சுகஸ்தானத்தில் சஞ்சரித்து உடல், மனரீதியாகசங்கடம் தருவதுடன், அவரது பார்வையாலும் சங்கடப்படுத்தும் நிலையில் சூரியன், செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது கடலில் தத்தளிப்பவர் கரைக்கு வந்தது போல மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் இப்போது நடக்கும். குடும்பம், தொழில், வேலையில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். கனவாகவே இருந்த பல முயற்சிகள் கைக்கூடும். உடல் நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். தைரியமாக செயல்படும் மனநிலை உண்டாகும். தொழிலில் லாபம் காண்பீர்கள். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பெரிய அளவில் சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு இந்த மாதம் சாதகமாக அமையும். மனதில் நிம்மதி ஏற்படும். ஆனால் தாய்வழி உறவுகளுடன் இடைவெளி ஏற்படும். பணியாளர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவதால் நன்மை தரும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். பணவரவு அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜன.30அதிர்ஷ்ட நாள்: ஜன.17, 18, 26, 27, பிப். 8, 9பரிகாரம் நெல்லையப்பரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.கேட்டைதிட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு தை மாதம் யோகமான மாதமாகும். ஜன.29 வரை புத ஆதித்ய யோகத்தால் தெளிவாக செயல்படுவீர்கள். எடுத்த வேலைகளில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். இழுபறியாக இருந்த முயற்சிகள் வெற்றியாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியவில்லை. எடுத்த வேலைகளை நடத்தி முடிக்க முடியவில்லை என்ற நிலை மாறும். வருமானம் அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதனும் சூரியனும் செல்வாக்கை உயர்த்துவர். எந்தவித சங்கடங்கள் வந்தாலும் அதை சமாளித்து வாழும் நிலை உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். மாதம் முழுவதும் சப்தமாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். நேற்று வரை நெருக்கடியில் இருந்த உங்களுக்கு தை மிக யோகமான மாதமாக இருக்கும். இதுவெல்லாம் எப்படி நடந்தது, மந்திரமா மாயமா என நினைக்கும் அளவிற்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். பட்டம் பதவி என்ற கனவு நனவாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளை எதிர்த்து வெற்றி பெறும் நிலை ஏற்படும். ஜன. 29 முதல் வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜன.31அதிர்ஷ்ட நாள்: ஜன.18, 23, 27. பிப். 5, 9பரிகாரம் : ரங்கநாதரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
மாத ராசி பலன்
14-Jan-2026
தனுசு: மூலம்: உலகைப்புரிந்து அதற்கேற்ப வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாகும். பெரிய மனிதர்களுடைய ஆதரவும் தெய்வ அருளும் கிடைக்கும். தடைப்பட்டு நின்ற வேலைகள் முடிவிற்கு வரும். மனதில் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். புதிய இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படுவீர்கள். வார்த்தைகளில் வேகமும் உறுதியும் இருக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தால் நினைத்தவற்றை சாதித்து ஆதாயம் காண்பீர்கள். ஜன. 29 வரை திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். பணியாளர்களுக்கு வேலையில் இருந்த அழுத்தம் குறையும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு புதிய முயற்சிகள் ஆதாயம் தரும். தேவையான அளவிற்கு வருமானம் வந்து கொண்டிருக்கும். ராசி நாதனின் சஞ்சார நிலையால் பாதிப்புகள் விலகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விற்பனையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும். சந்திராஷ்டமம்: ஜன. 31, பிப். 1.அதிர்ஷ்ட நாள்: ஜன. 16, 21, 25, 30, பிப். 3, 7, 12.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும். பூராடம்செல்வம் செல்வாக்கு என்ற நிலையோடு வாழ்ந்துவரும் உங்களுக்கு பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாகும். உங்கள் லாபாதிபதி சுக்கிரன் பிப். 7 வரை தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பொன் பொருள் சேரும். வீட்டிற்காக நவீன பொருட்கள் வாங்குவீர்கள். சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். வியாபாரிகளுக்கு விற்பனையில் இருந்த மந்தநிலை மாறும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தொழிலை விரிவு செய்யும் முயற்சியையும் சிலர் மேற்கொள்வீர்கள். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். விவசாயிகளுக்கு நன்மையான மாதமாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். வயதானவர்கள் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம். சகாய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி பகவானால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.சந்திராஷ்டமம்: பிப். 1, 2.அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 21, 24, 30, பிப். 3, 6, 12.பரிகாரம் : ஏகாம்பரேஸ்வரரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்.உத்திராடம் 1 ம் பாதம்நினைத்ததை சாதிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு பிறக்கும் தை மாதம் நன்மையான மாதமாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் உங்கள் வாழ்வை வளமாக்குவார்கள். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார்கள். இதுவரை தடைபட்டிருந்த வேலைகளை நடத்தி வைப்பார்கள்.பணியாளர்களின் பிரச்னைகள், சங்கடங்கள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தலைமையின் பார்வை கிடைக்கும். சிலருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாய்ப்பு வரும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சூரியனும் செவ்வாயும் இணைந்திருப்பதால் வார்த்தைகளில் வேகம் இருக்கும். அதனால் சில சங்கடங்களையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்பதால், கவனமாக பேசுவது நல்லது. ஜன. 29 வரை உங்கள் தொழில் காரகன் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி ஆதாயம் காண்பீர்கள். உங்கள் செயல்களுக்கு உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். பயந்து பயந்து வாழ்ந்த நிலை மாறி தைரியமாக வாழக்கூடிய நிலை உண்டாகும். சப்தம ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரித்து வரும் உங்கள் ராசிநாதன் குருவால் உங்கள் செல்வாக்கு உயரும். மற்றவர்கள் எதிரில் கவுரமாக வாழும் நிலை உருவாகும். அதே நேரத்தில் சிலர் அவசரப்பட்டு சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடங்களுக்கு ஆளாகவும் நேரும் என்பதால் இந்த நேரத்தில் கவனமாக செயல்பட வேண்டும். குடும்பம், தொழில், உத்தியோகம் என்பனவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள், பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கொள்வதுடன் ஆசிரியர்கள் ஆலோசனைகளையும் ஏற்பது அவசியம். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். சந்திராஷ்டமம்: பிப். 2.அதிர்ஷ்ட நாள்: ஜன. 19, 21, 28, 30, பிப். 1, 3, 10, 12.பரிகாரம் தாணுமலையப்பனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மாத ராசி பலன்
14-Jan-2026
மகரம்: உத்திராடம் 2,3,4 ம் பாதம்:எடுத்த வேலையில் உறுதியாக இருந்து வெற்றி அடைந்துவரும் உங்களுக்கு பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதமாகும். ராசிக்குள் சஞ்சரிக்கும் சூரியன் ஓய்வு உறக்கமின்றி உங்களை செயல்பட வைப்பார். ஒவ்வொரு வேலையையும் முடிப்பதற்காக அடுத்து அடுத்து என்று ஓடிக் கொண்டிருப்பீர்கள். வருமானம் மட்டுமே இந்த நேரத்தில் உங்களுடைய நோக்கமாக இருக்கும். உங்கள் லாபாதிபதி செவ்வாயும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரிகள் தங்கள் நிறுவனத்தை மேலும் விரிவு செய்வீர்கள். உங்கள் கனவாக இருந்த சொந்த வீடு இப்போது அமையும். வீடு வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியாகும். அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும். சத்ரு, ஜெய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் குரு, முன் ராசிக்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவர் என்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பிள்ளைகள் நிலையில் முன்னேற்றம் இருக்கும். காதல் விவகாரம் கை கூடும். சிலரை அது திருமணம் வரையில் கொண்டுச் செல்லும் என்றாலும், அவசரப்பட்டு எந்தவித முடிவுகளுக்கும் இந்த நேரத்தில் வரவேண்டாம். செலவுகளையும் திட்டமிட்டுச் செய்வது நன்மையாக இருக்கும். எந்த அளவிற்கு பணம் வருகிறதோ அதற்குள் செலவு செய்வது உங்களுக்கு நன்மையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சி செய்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் அமையும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கலைஞர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உழைப்பின் நிலைக்கேற்ப பலன்களை அடையும் நிலை உண்டாகும். விவசாயத்தில் லாபம் கூடும். பெண்கள் நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்கு முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும்.சந்திராஷ்டமம்: பிப். 3.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 19, 26, 28. பிப். 1, 8, 10.பரிகாரம் ஸ்ரீரங்கநாதரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.திருவோணம்திட்டமிட்டு செயல்பட்டு வரும் உங்களுக்கு, ராசிநாதன் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். தொழில் வளர்ச்சி அடையும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் பாக்யாதிபதி புதன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெரிய நிறுவனங்கள் உங்களைத் தேடிவரும். புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொண்டவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் அமையும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாகும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை இருக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள், அந்நியரால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஆடை, ஆபரணம் சேரும். பிறருக்கு உதவி செய்யக் கூடிய அளவிற்கு உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ஏழரைச் சனியின் கடைசி காலமாக இது இருப்பதால் சனி பகவான் கடந்த காலத்தில் உங்களுக்கு உண்டாக்கிய நெருக்கடிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவார். புதிய சொத்து, வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து உண்டாகும். வக்கிர குருவின் நிலையால் வாழ்க்கை வளமாகும். வசதி அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய வீட்டில் பால் காய்ச்சும் நிலை சிலருக்கு உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும். உடல் நிலையில் ஏதேனும் சில சங்கடங்கள் அவ்வப்போது வந்து தலைக்காட்டும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.சந்திராஷ்டமம்: பிப். 4.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 20, 26, 29. பிப். 2, 8, 11.பரிகாரம் கூடலழகரை வழிபட நன்மைகள் உண்டாகும்.அவிட்டம் 1,2 ம் பாதம்எடுக்கும் வேலைகளை கவனமாக செய்து வரும் உங்களுக்கு பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாகும். உங்கள் லாபாதிபதி செவ்வாய் ராசிக்குள் உச்சமாக சஞ்சரிப்பதால் செயல்களில் வேகம் இருக்கும். தடைபட்டு வந்த வேலைகள் முடிவிற்கு வரும். புதிய முயற்சிகள் சாதகமாகும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பார்த்துவரும் வேலையில் இருந்த பிரச்னைகள் தீரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். வியாபாரிகளுக்கு வருமானம் உயரும். சுய தொழில் செய்து வருபவர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். மாதம் முழுவதும் உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும், ஜீவனாதிபதியுமான சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பண வரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். பொன், பொருள் என்று சேரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். விளைச்சல் செழிக்கும். வருமானம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நிலை இருக்கும். மாணவர்கள் நட்பு விவகாரங்களை ஒதுக்கி வைத்து படிப்பில் கவனம் செலுத்துவதால் எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியும்.சந்திராஷ்டமம்: பிப். 5. அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 18, 26, 27., பிப். 8, 9.பரிகாரம் திருக்கோடீஸ்வரரை வழிபட பிரச்னைகள் விலகும்.
மாத ராசி பலன்
14-Jan-2026
கும்பம்: அவிட்டம் 3,4 ம் பாதம்:எந்த ஒன்றையும் படிப்பினையாக எடுத்துக் கொள்ளும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியான செவ்வாய் பனிரெண்டாம் இடத்தில் சஞ்சரித்தாலும் உச்சமாக சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கும், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் செல்வாக்கும், அந்தஸ்தும் உயரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். ஐந்தாம் இடத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் குருவால் உங்கள் கனவுகள் நனவாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வெளியில் நின்ற பணம் வசூலாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும் என்றாலும், ஜன. 29 வரை விரய புதனால் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பது இழுபறியாகும். கொடுக்கல், வாங்கலில் எதிர்பார்ப்புகள் தள்ளிப்போகும். சுய தொழில் செய்து வருவோர் கவனமாக செயல்படுவது நன்மையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்து செல்வது அவசியம். புதியவர்கள் வழியே குடும்பத்தில் குழப்பம் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நன்மையாகும். விவசாயிகள் விளைச்சல் அறுவடையாகும் வரை கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வதும், தவறான நட்புகளை விட்டு விலகி இருப்பதும் நன்மையாகும்.சந்திராஷ்டமம்: பிப். 5.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 18, 26, 27., பிப். 8, 9.பரிகாரம்: யோக நரசிம்மரை வழிபட சங்கடங்கள் விலகும். சதயம்உழைப்பால் உயர்வடையும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதும், ராசி நாதன் சனி ஆட்சியாக சஞ்சரிப்பதும் ஒரே நேரத்தில் இரண்டு திசையில் பயணம் செய்வதுபோல் உங்கள் நிலை மாறும். இதைப் பார்த்தால் அது இல்லை அதைப் பார்த்தால் இது இல்லை என்றாகி விடும். இந்த நேரத்தில் ஒவ்வொரு வேலையிலும் நிதானம் வேண்டும். உடல் நிலையிலும் சின்னச் சின்ன சங்கடங்கள் தோன்றி மறையும். வீண் அலைச்சல் செலவு அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நெருக்கடிகள் கூடும். சிலர் மேல் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகநேரும். என்னதான் உழைத்தாலும் அதற்குரிய மரியாதை என்பதும் கிடைக்காமல் போகும். வியாபாரத்திலும் உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பங்கு வர்த்தகம் சங்கடத்தை உண்டாக்கும். திடீர் வரவு வந்தாலும் அடுத்த நிமிடமே அதற்குரிய செலவும் காத்துக்கொண்டிருக்கும். மாதம் முழுவதும் உங்கள் பாக்யாதிபதி சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் தேவைக்கேற்ற வருமானம் வந்து கொண்டிருக்கும். வெளியில் கவுரவமாக நடைபோட முடியும். அதே நேரத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு செலவுகளைக் கட்டுப்படுத்துவார். வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எதிர்ப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். அதிர்ஷ்ட வாய்ப்புகளை உண்டாக்குவார் என்றாலும், புதிய நட்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது இந்த நேரத்தில் நன்மையாக இருக்கும். மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். விவசாயிகள் விளைச்சல் வீடு வந்து சேரும் வரை அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சந்திராஷ்டமம்: பிப். 6.அதிர்ஷ்ட நாள்: ஜன.17, 22, 26, 31., பிப். 4, 8.பரிகாரம்: வரதராஜப்பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3 ம் பாதம்எந்த ஒன்றிலும் கவனமாக செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிநாதன் பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் நிதானம் தேவை. புதிய வேலைகளில் ஈடுபடும்முன் அதுபற்றி நன்றாக விசாரித்து அதன் பிறகு முயற்சிப்பது நன்மையை உண்டாக்கும். புதிய முதலீடுகளிலும் கூடுதல் கவனம் தேவை. விரய ஸ்தானத்தில் செவ்வாயும், சூரியனும் கூட்டணி அமைத்திருப்பதால் செலவு அதிகரிக்கும். இடம் வாங்குவது, விற்பது போன்ற விஷயத்தில் நெருக்கடிகள் தோன்றும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதிகள் கிடைப்பதற்கு தாமதமாகும். பூர்வ புண்ணியாதிபதி புதனும் எதிர்மறையாக சஞ்சரிப்பதால் வரவேண்டிய பணம் வருவதிலும் தடை உண்டாகும். வாங்க நினைத்தவற்றை வாங்க முடியாத அளவிற்கு சூழ்நிலைகள் உண்டாகும். இருந்தாலும் வாழ்க்கைக்கு அடிப்படையானவற்றை பாக்யாதிபதி சுக்கிரன் வழங்குவார். வெளியில் பார்ப்பதற்கு எந்தவிதமான குறையும் இல்லாததுபோல் உங்கள் நிலை இருக்கும். ஆனால் உங்களுக்குள் பெரும் போராட்டமும் நெருக்கடியாகவும் இருக்கும், அதையும் சமாளித்திடக்கூடிய சக்தி உங்களுக்கு ஏற்படும். சப்தம ஸ்தானத்தில் ஞானமோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் நண்பர்கள் வழியில் சில அனுபவம், சங்கடங்களை அடைய வேண்டியதாக இருக்கும். எனவே புது நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது மிக அவசியம். மாணவர்கள் இந்த நேரத்தில் தவறான நண்பர்களை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்தினால் உயர் கல்வி கனவு நனவாகும். விவசாயிகள் எல்லாவற்றையும் தங்களுடைய நேரடிப் பார்வையில் செய்து வந்தால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: பிப். 7.அதிர்ஷ்ட நாள்: 17, 21, 26, 30, பிப். 3, 8, 12.பரிகாரம்: கள்ளழகரை வழிபட நெருக்கடிகள் நீங்கும்.
மாத ராசி பலன்
14-Jan-2026
மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம்பிறரை வழிநடத்தும் ஞானம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதமாகும். உங்கள் ராசிநாதன் குரு சுகஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருந்தாலும் உங்கள் நிலையிலிருக்கும் சங்கடங்களை விலக்குவார். தெய்வ அருளும் பெரிய மனிதர்கள் துணையும் இந்த நேரத்தில் கிடைக்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். தேவையான பணம் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் சப்தமாதிபதி புதன் ஜன. 29 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதி இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு உண்டாகும். வியாபாரிகளுக்கு புதிய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பண வரவு திருப்தி தரும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் கிடைக்கும். உடலில் இருந்த நோய், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். அரசியல்வாதிகள் நிலை உயரும். கலைஞர்கள் திறமை வெளிப்படும். விவசாயிகளுக்கு இருந்த நெருக்கடி விலகி எதிர்பார்த்த வரவு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கணவன் மனைவி உறவில் சுமூகம் இருக்கும்.சந்திராஷ்டமம்: பிப். 7.அதிர்ஷ்ட நாள்: ஜன. 21, 30., பிப். 3, 12.பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட தடைகள் விலகும். உத்திரட்டாதிஎடுத்த வேலையை உடனடியாக முடிக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாகும். சூரியன், செவ்வாய், கேது, சுக்கிரன், புதன் என்று கிரகங்களின் சஞ்சார நிலைகள் இந்த மாதம் சாதகமாக இருப்பதால் கடந்த மாதங்களில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிரச்னைகள் உங்களை விட்டு விலகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், செவ்வாயும் வரவை அதிகரிப்பர். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் இப்போது லாபம் காண ஆரம்பிக்கும். வரவேண்டிய பணம் வரும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்புகள் உருவாகும். கருத்து வேறுபாட்டினால் உங்களை விட்டு விலகிச்சென்றவர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவர். உங்கள் தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நட்புகளால் நன்மைகள் கூடும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நடை உடை எல்லாம் மாறும். முகத்தில் மகிழ்ச்சி தெரியும். பொன், பொருள், புதிய வாகனம் என்று சிலருக்கு சேரும் என்றாலும், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் செலவுகளை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். புதிய இடம் வாங்குவது, வீடு கட்டுவது, அத்தியாவசியமான செலவுகள் என்று கையிருப்பு கரையும். இல்லையெனில் கடன் வாங்கியாவது செலவு செய்யும் நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருப்பதால் விளைச்சலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். அரசியல், பொதுவாழ்வில் இருப்போரின் செல்வாக்கு உயரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும், வெளிநாடு செல்லவும் அரசிடம் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.சந்திராஷ்டமம் பிப். 8.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 21, 26, 30., பிப். 3, 12.பரிகாரம் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் சங்கடம் தீரும். ரேவதிமுயற்சியால் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஜன. 29 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். கல்வியாளர் நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் இருக்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், செவ்வாயும் உங்கள் செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவுடன் புதிய பொறுப்பும் வரும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகளில் முடிவு உண்டாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு, விவகாரங்கள் சாதகமாகும். மாதம் முழுவதும் வருமானத்துடன் வசதியாக வாழ்ந்திடும் நிலை இருக்கும். ஆனாலும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கர்மக் காரகனும், யோகக் காரகனும் உங்கள் ஆசைகள் பூர்த்தியாக செலவுகளை உண்டாக்குவர். சேமிப்பு கரையும். சிலருடைய குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மாணவர்களுக்கு மனதில் தெளிவு இருக்கும் படிப்பில் அக்கறை கூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். விற்பனையும் வருமானமும் உயரும்.சந்திராஷ்டமம்: பிப். 9.அதிர்ஷட நாள்: ஜன. 21, 23, 30., பிப். 3, 5.பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் உயர்வு உண்டாகும்.
மாத ராசி பலன்
14-Jan-2026

