sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கடையாணி

/

மஹிந்திரா 'எக்ஸ்.யூ.வி., 7.எக்ஸ்.ஒ.,' 'டாவின்ஸி' சஸ்பென்ஷன் உள்ள உலகின் முதல் கார்

/

மஹிந்திரா 'எக்ஸ்.யூ.வி., 7.எக்ஸ்.ஒ.,' 'டாவின்ஸி' சஸ்பென்ஷன் உள்ள உலகின் முதல் கார்

மஹிந்திரா 'எக்ஸ்.யூ.வி., 7.எக்ஸ்.ஒ.,' 'டாவின்ஸி' சஸ்பென்ஷன் உள்ள உலகின் முதல் கார்

மஹிந்திரா 'எக்ஸ்.யூ.வி., 7.எக்ஸ்.ஒ.,' 'டாவின்ஸி' சஸ்பென்ஷன் உள்ள உலகின் முதல் கார்


UPDATED : ஜன 14, 2026 09:21 AM

ADDED : ஜன 14, 2026 07:48 AM

Google News

UPDATED : ஜன 14, 2026 09:21 AM ADDED : ஜன 14, 2026 07:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மஹிந்திரா' நிறுவனம், 'எக்ஸ்.யூ.வி., 7.எக்ஸ்.ஒ.,' எஸ்.யூ.வி.,யை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் முன்பதிவு, நாளை துவங்குகிறது. முதல் 40,000 பேருக்கு மட்டும், அறிமுக விலையில் கிடைக்கும். இது, மென்பொருள் கட்டுப்பாட்டில் இயங்கும் மஹிந்திராவின் முதல் கார் ஆகும்.

ஐந்து, ஆறு மற்றும் ஏழு சிட்டர் மாடல்களில் வரும் இந்த காரில், முதல் முறையாக 'டாவின்ஸி' என்ற புதிய சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சஸ்பென்ஷன், வேகமாக செல்லும் போது, இறுக்கமாகவும், கரடுமுரடான சாலைகளில் மென்மையாகவும் இருக்கும். பயணிகள் பாதுகாப்பை அதிகப்படுத்த, காரின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

Image 1521780


31 அங்குல மூன்று டிஸ்ப்ளேக்கள் அடங்கும் டாஷ்போர்டு, ஆறு காற்று பைகள், க்ரூஸ் கன்ட்ரோல், எல்.இ.டி., லைட்டுகள், ஒயர்லெஸ் இணைப்பு வசதி, அலெக்சா வசதியுடன் 'சேட் ஜி.பி.டி.,' பயன்பாடு, ஸ்கை ரூப் உட்பட 75க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் அடிப்படையாக வருகின்றன.

கார் மாடலை பொறுத்து, 540 டிகிரி கேமரா, அடாஸ் லெவல் - 2 பாதுகாப்பு, டால்பி விஷன் மற்றும் அட்மாஸ் வசதியுடன் 16 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வென்ட்டிலேட்டட் மற்றும் பவர்டு முன்புற, பின்புற சீட்கள், ஒயர்லெஸ் சார்ஜிங், பாஸ் மோட் வசதி, 18,19 அங்குல அலாய் சக்கரங்கள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு உள்ளிட்டவையும் கிடைக்கின்றன.






      Dinamalar
      Follow us