/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரம்மோற்சவ விழா 23ம் தேதி துவக்கம்
/
பிரம்மோற்சவ விழா 23ம் தேதி துவக்கம்
ADDED : ஜன 14, 2026 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில், பிரம்மோற்சவ விழா, வரும் 23ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழாவையொட்டி, வரும் 18ம் தேதி காலை 7:00 மணிக்கு பந்த கால் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 23ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
31ம் தேதி, காலை 8:00 மணிக்கு ரத உற்சவம், மாலை 6:00 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த மாதம் 1ம் தேதி, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 8ம் தேதி, கூழ் உற்சவம் மற்றும் பள்ளயம் நிகழ்ச்சி நடக்கிறது.

