sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 15, 2026 ,தை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

மிதுனம்

/

மிதுனம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

மாத ராசி பலன் : மிதுனம்
14 ஜன 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 ம் பாதம்:
தன்னம்பிக்கையுடன் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதத்தில் அதிர்ஷ்டக்காற்று உங்கள் பக்கம் வீசப்போகிறது. ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரிய யோகங்கள் உங்களுக்கு உண்டாகும். மறைந்த புதன் நிறைந்த செல்வத்தை தருவார் என்பது விதி. அவர் சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கும் போது புத ஆதித்ய யோகம் உண்டாகும். அதனால் ஜன. 21 வரை அஷ்டம சூரியனின் பாதிப்பு குறையும். எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்தில் தனித்துவம் பெறுவீர்கள். உங்கள் புத்திசாலித்தனமும் அனுபவமும் இந்த நேரத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். எந்தவித நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தியும் ஏற்படும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தித் தருவார். மற்றவர்களால் முடிக்க முடியாத வேலையையும் முடித்துக் காட்டுவீர்கள். தொழில் எதிரிகள் விலகிச் செல்வர். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேரும். பெண்களின் மனதில் இருந்த குறை நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி விற்பனையும் வருமானமும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  விளைச்சல் வீடுவந்து சேரும் வரை விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும்.
சந்திராஷ்டமம்: ஜன.18, 19
அதிர்ஷ்ட நாள்: ஜன. 23, 27. பிப். 5, 9
பரிகாரம்
மருதமலை முருகனை வழிபட  நன்மை சேரும். 

திருவாதிரை
புத்திசாலித்தனத்துடன் எதையும் சாதிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் மிக யோகமான மாதமாகும். ஜீவன காரகனான சனியும், யோக காரகனான ராகுவும் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நன்மை அதிகரிக்கும். உங்கள் வேலைகளிலோ, வருமானத்திலோ, முன்னேற்றத்திலோ தடைகள் இல்லை என்ற நிலை உருவாகும். என்ன வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் சக்தியும் உங்களுக்கு இருக்கும். பணியாளர்களுக்கு ஒரு பக்கம் மறைமுகத் தொல்லைகள் இருந்தாலும் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதியதாக என்ன செய்யலாம் என யோசிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் முடிவு வரும் வரை அதில் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பீர்கள். வெளிநாட்டுத் தொடர்பு ஆதாயம் தரும். கடந்த மாதம் வரை குடும்பத்தில் இருந்த நெருக்கடி, பிரச்னைகள் விலகும். அந்நியரால் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட சச்சரவு முடிவிற்கு வரும். ஒற்றுமை அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். அதே நேரத்தில் உங்கள் லாபாதிபதி செவ்வாயும், சகாய ஸ்தானாதிபதி சூரியனும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனைத்திலும் கூடுதல் கவனம் தேவை. பணியாளர்கள் இந்த நேரத்தில் தங்கள் பொறுப்பில் கவனமாக இருப்பதும், மற்றவர் கூறும்படி செயல்படாமல் சட்டப்படி செயல்படுவதும் நன்மை தரும். சில வியாபாரிகளுக்கு வருமான வரித்துறை, விற்பனை வரித்துறை மூலம்  சங்கடம் ஏற்பட வாய்ப்புண்டு. கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பது நல்லது. முக்கிய வேலைகளை  பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. ஜன. 29 வரை ராசி நாதன் புதனால் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். முயற்சி வெற்றியாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: ஜன.19, 20.
அதிர்ஷ்ட நாள்: ஜன.22, 23, 31,பிப்.4, 5.
பரிகாரம்
தில்லை காளியை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

புனர்பூசம்
பிறரை வழிநடத்தும் திறமை கொண்ட உங்களுக்கு, தை மாதம் புதிய வழியைக் காட்டும் மாதமாக இருக்கும். ராசிக்குள் வக்கிரமாக சஞ்சரிக்கும் குரு மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவார். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம்,  அலைச்சல் உண்டாகும். செலவு அதிகரிக்கும் என்றாலும் அதன் வழியே உங்கள் நிலையிலும் நன்மையை ஏற்படுத்துவார். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வீண் வம்பு வழக்கு தொல்லைகள் என்றிருந்த நிலை மாறும். திடீர் வாய்ப்பு தேடி வரும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் போட்டிப் போட்டு உங்களை முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பர். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், செவ்வாயும் உடல் நிலையில் கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்துவர்.  இல்லை என்றால் உங்கள் மனதிற்கு சங்கடம் தரும் அளவிற்கு வேலை பார்க்கும் இடத்திலும், குடும்பத்திலும் சில சம்பவங்கள் நடக்கும். தொழிலில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். பல வழியிலும் செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் கடும் போட்டிகள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு தாமதமாகும் என்றாலும் இவற்றை எல்லாம் உங்களால் சமாளிக்கவும் முடியும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும்.  அரசியல்வாதிகள்  தலைமையை அனுசரித்துச் சொல்வதும், நிதானமாக செயல்படுவதும் நன்மை தரும். மணவர்கள் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. பெண்களுக்கு மன ரீதியாக ஏற்பட்ட சங்கடம் விலகும். வயதானவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு சற்று விலகும்.  
சந்திராஷ்டமம்: ஜன.20, 21
அதிர்ஷ்ட நாள்: ஜன.23, 30, பிப். 3, 5, 12
பரிகாரம்
வள்ளிமணாளன் முருகனை வழிபட வெற்றி கிடைக்கும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us