sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

மிதுனம்

/

மிதுனம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

மாத ராசி பலன் : மிதுனம்
16 செப் 2025

முந்தய மாத ராசி பலன்

rasi

மிதுனம்

மிதுனம்

மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்
நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு புரட்டாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தைரிய வீரிய பராக்கிரம காரகனான செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல வகையில் செலவு அதிகரிக்கும். விரயம் உண்டாகும். திட்டமிட்ட வேலைகள் தள்ளிப் போகும் என்றாலும், அக். 7 வரை ஐந்தாம் இடத்திற்கு குருபார்வை இருப்பதால் செவ்வாயால் உண்டாகும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உறவினர்கள் உதவிக்காக உங்களைத் தேடி வரும் நிலை இருக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். சகோதரர் ஒத்துழைப்பால் உங்கள் வேலைகள் நடந்தேறும். இழுபறியான விவகாரங்கள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். ராசிநாதன் சஞ்சாரம் செப். 28 வரை சாதகமாக இருப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்ததை அடைவீர்கள். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். செல்வாக்கு உயரும். தொழில் முன்னேற்றம் பெறும். பணியாளர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செப். 29 முதல் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களைப் பற்றி மற்றவர்கள் புறம் பேசும் நிலை ஏற்படும் என்பதால் செயல்களில் கவனம் தேவை. யாரையும்  பகைக்க வேண்டாம். புதியவர்களை முழுமையாக நம்பவும் வேண்டாம். உங்களுடைய முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். 
சந்திராஷ்டமம்: அக்.1
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 23, 27. அக். 5, 9, 14.
பரிகாரம் பகவதி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.

திருவாதிரை
அதிர்ஷ்ட வாய்ப்புகளை இயல்பாகவே பெற்ற உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதமாகும். யோகக் காரகன் ராகு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் திறமையை வெளிப்படுத்துவார். மற்றவர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்திடக்கூடிய நிலையினை ஏற்படுத்துவார். அக். 7 வரை ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு 5, 7, 9 ம் இடங்களைப் பார்ப்பதால் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். குழந்தைகள் நலனில் அக்கறை கூடும். பூர்வீக சொத்து விவகாரத்தில் சாதகமான நிலை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். புதிய இடம், வீடு வாங்கிடக் கூடிய நிலை சிலருக்கு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். செப். 28 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். சூரியன் நான்காம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிரிகள் பற்றி ஒரு அச்சம் உள்ளுக்குள் இருக்கும் என்றாலும் குருப் பார்வைகளால் அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். அக். 8 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் எதிர்ப்புகள் விலகும். மனதில் இருந்த பயம் போகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: அக். 2.
அதிர்ஷ்ட நாள்: செப். 22, 23, அக். 4, 5, 13, 14.

பரிகாரம் தில்லை காளியை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்
எந்த ஒன்றிலும் நன்மை தீமைகளை அறிந்து எச்சரிக்கையாக செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். ஞானக் காரகன், மங்களக் காரகன் குரு அக் 7 வரை ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து 5, 7, 9 ம் இடங்களைப் பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அக். 8 முதல் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் அகலும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். செப் 28 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு உங்கள் வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார்கள். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் சாதகமாகும். பெரிய நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது நன்மையாகும். உணவகம், கெமிக்கல், ரியல் எஸ்டேட், மருத்துவம் சம்பந்தமான தொழில் புரிந்து வருவோர் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம்.
சந்திராஷ்டமம்: அக். 3.
அதிர்ஷ்ட நாள்: செப். 21, 23, 30. அக். 5, 12, 14.

பரிகாரம் ஆலங்குடி குருவை வழிபட அனைத்து தடைகளும் விலகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us