sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 விளையாட்டு மைதானம் பெயர் மாற்றப்பட்டதா? அமைச்சர் பெயர் வைத்ததாக பா.ஜ., போராட்டம்

/

 விளையாட்டு மைதானம் பெயர் மாற்றப்பட்டதா? அமைச்சர் பெயர் வைத்ததாக பா.ஜ., போராட்டம்

 விளையாட்டு மைதானம் பெயர் மாற்றப்பட்டதா? அமைச்சர் பெயர் வைத்ததாக பா.ஜ., போராட்டம்

 விளையாட்டு மைதானம் பெயர் மாற்றப்பட்டதா? அமைச்சர் பெயர் வைத்ததாக பா.ஜ., போராட்டம்


ADDED : ஜன 14, 2026 03:27 AM

Google News

ADDED : ஜன 14, 2026 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு: துமகூரு டவுனில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சூட்டப்பட்டிருந்த மகாத்மா காந்தி பெயரை மாற்றிவிட்டு, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பெயர் வைத்ததாக போராட்டம் நடத்திய பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர்.

துமகூரு டவுன் வெங்கடேஸ் ராவ் காலனியில், மகாத்மா காந்தி பெயரில், மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. வரும், 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை, மாநில அளவிலான ஒலிம்பிக் போட்டிகள் இங்கு நடைபெற உள்ளன.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 60 கோடி ரூபாய் செலவில், மைதானத்தை புனரமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன், மைதானத்தின் உட்புற அரங்கிற்கு, கர்நாடக உள்துறை அமைச்சரும், துமகூரு மாவட்ட பொறுப்பு அமைச்சருமான பரமேஸ்வர் பெயர் பலகை வைக்கப்பட்டது. இதனை கண்டித்து பா.ஜ., தொண்டர்கள் நேற்று மதியம், மைதானத்தின் முன் போராட்டம் நடத்தினர்.

மைதானத்திற்கு உள்ளும் நுழைய முயன்றனர். நிலைமையை கட்டுப்படுத்த, 30க்கும் மேற்பட்ட தொண்டர்களை கைது செய்த போலீசார், அவர்களை வேன்களில் ஏற்றி அழைத்து சென்றனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பரமேஸ்வர் கூறியதாவது:

துமகூரு மாவட்ட விளையாட்டு மைதானத்தில், ஒரு பகுதியில் செட் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை உள்விளையாட்டு அரங்காக பயன்படுத்த உள்ளனர். அந்த இடத்திற்கு எனது பெயரை வைத்துள்ளனர். மகாத்மா காந்தி பெயரை மாற்றி விட்டு, எனது பெயரை முழு மைதானத்திற்கும் வைக்கவில்லை.

மன்ரேகா திட்டத்தில் இருந்து, காந்தி பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து, நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். அப்படி இருக்கும் போது, காந்தி பெயரை அகற்றி விட்டு, என் பெயரை வைக்க முடியுமா; துமகூருவுக்கு கிரிக்கெட் மைதானம் கொண்டு வந்ததால், என் பெயரை வைக்க, துமகூரு மாவட்ட விளையாட்டு வீரர்கள் ஆசைப்பட்டனர். இதில், எனது பங்கு எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us