ADDED : ஜன 14, 2026 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
நெல்லிக்குப்பம் அடுத்த கருப்பு கேட் பகுதியில் கடலூர் பண்ருட்டி சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறையினரால் மின் விளக்குகள் பராமரிக்கப் படுகின்றன.
இதில் 20 விளக்குகளுக்கு மேல் கடந்த 15 நாட்களுக்கு மேலாக எரியவில்லை.இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று இரவு மின் கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

