sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

/

தனுசு

/

தனுசு

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : தனுசு
04 ஏப் 2020

முந்தய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

தனுசுதன்னலம் இல்லாத தனுசு ராசி அன்பர்களே!

சார்வரி ஆண்டின் தொடக்கத்தில்  உங்கள் ஆட்சி நாயகன் குருவால் மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. ஜூலை 7 முதல்  நவ.13 வரை அவரால் நற்பலன் கிடைக்காது. ஆனால் அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். குருவின் பலத்தால் சனியின் பாதிப்பு குறையும்.  சனிபகவானால் உறவினர் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும். ஆனால் அவரது 3ம் இடத்துப் பார்வையால் செயலில் வெற்றி, பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் விருத்தியை தருவார். டிச.26க்கு பிறகு அவரால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படலாம். பொருளாதார இழப்பு ஏற்படலாம். ஆனால் அவரின் 10ம் இடத்துப்பார்வை மூலம் நற்பலன் கிடைக்கும். பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக இருப்பர்.   

ராகுவால் இடப்பெயர்ச்சியையும், தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். ஆக.31க்கு பிறகு  தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். முயற்சியில் வெற்றியைக் கொடுப்பார். கேது காரிய தடையையும், உடல் உபாதையையும் தரலாம். ஆக.31க்கு பிறகு பொருள் விரயம் ஏற்படலாம்.  குடும்ப சூழல் மேம்படும். மகிழ்ச்சி நிலவும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உறவினர் உதவிகரமாக செயல்படுவர். ஜூலை 7 முதல்  நவ.13 வரை தம்பதியிடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு வரலாம். உறவினர் மத்தியில் அவ்வப்போது சிற்சில மனக்கசப்புகள் வரலாம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தாமதமாகலாம்.

பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். ஜூலை 7க்கு பிறகு கணவரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. நவ.11க்கு பிறகு குருபகவான் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர். உடல்நலம் பாதிக்கப்படலாம்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் முயற்சிக்கு தகுந்த லாபத்தைக் காண்பர். வெளியூர் பயணத்தால் நன்மையை எதிர்பார்க்கலாம். அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும்.
* வியாபாரிகளுக்கு ஆக.31க்கு பிறகு ராகு முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைகள் அனைத்தும் விலகும்.
* தரகு, கமிஷன் தொழிலில் ஆக.31க்கு பிறகு எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்களின் பிடியில் இருந்து விடுபடுவர். இதனால் வீண் விரையம் மறையும்.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு ஆக.31க்கு பிறகு வேலையில் எந்தவித தொய்வும் இருக்காது.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.  சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
* ஐ.டி.,துறையினர் நவ.11க்கு பிறகு சீரான வளர்ச்சி காண்பர். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் இருப்பர். வேலை விஷயமாக  குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர்.
* மருத்துவர்கள் எதிர்பாராத நற்பலன் கிடைக்கப் பெறுவர். பெண்கள் வகையில் இருந்த பிரச்னை ஆக.31க்கு பிறகு மறையும்.
* ஆசிரியர்களுக்கு நவ.11க்கு பிறகு வேலைப்பளு, வீண் மனக்கவலை மறையும். பணியில் திறமை பளிச்சிடும்.
* அரசியல்வாதிககளுக்கு ஆக. 31க்கு பிறகு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
* விவசாயிகளுக்கு ஆக.31க்கு பிறகு மஞ்சள், கொண்டைக்கடலை, உளுந்து மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானம் வரும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கூடுதல் மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்களில் முடிவு திருப்திகரமாக இருக்கும்.
பண்ணை தொழில் கால்நடை செல்வம் பெருகும்.  பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலையில் இருப்பர். ஆசிரியர்களின் ஆலோசனையும் கிடைக்க பெறுவீர்கள்.ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும்.நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.

 சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஜூலை 7க்கு பிறகு பகைவர் சதி அவ்வப்போது தலைதுாக்கலாம். சிலரிடம் வீண் விரோதம் வர வாய்ப்புண்டு.எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பேசவும்.
* வியாபாரிகளுக்கு புதிய வியாபார முயற்சி தற்போது வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும்.
* அரசு பணியாளர்கள் சக ஊழியர்களிடம் கருத்துவேறுபாடு கொள்ள வாய்ப்புண்டு. அதிக நெருக்கம் வேண்டாம்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஜூலை7-க்கு பிறகு  மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிய வேண்டியதிருக்கும். மின்சாரம், நெருப்பு தொடர்பான பணியாளர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
* ஐ.டி.,துறையினர் ஜூலை 7 முதல் நவ.13 வரை வேலையில் அலைச்சலுக்கு ஆளாவர்.  சிலர் பொறுப்புகளை இழக்க நேரிடலாம் கவனம்.
* வக்கீல்கள் புதிய வழக்குகள் எடுத்து நடத்தும் போது கூடுதல் கவனம் தேவை.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் முக்கிய பணிகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். எது எப்படியானாலும் பணவிஷத்தில் எந்த பின்னடைவும் ஏற்படாது.
* அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
* கலைஞர்கள் ஜூலை 7க்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.
 பண்ணை தொழில் கோழி,ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது.

பரிகாரம்
* சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் அபிேஷகம்
* சுவாதியன்று லட்சுமிநரசிம்மருக்கு பானகம்

Advertisement

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us