தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : தனுசு
13 ஏப் 2026
முந்தைய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

தனுசு
தனுசு: மூலம்: குறை தீர்ப்பார் குரு
ஞான மோட்சக்காரகன் கேது, மங்களக்காரகன் குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் நினைத்ததை சாதிக்கும் வருடமாக இருக்கும். வருடத்தின் தொடக்கமே உங்களுக்கு யோகமாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும், உயர் கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், புதிய சொத்து என்ற கனவு நனவாகும்.
சனி சஞ்சாரம்: சுக ஸ்தானமான 4ம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான், தனது 3,7,10ம் பார்வைகளால் உங்கள் ராசியையும் 6 மற்றும் 10ம் இடங்களைப் பார்ப்பதால், வேலைப்பளு அதிகரிக்கும். எந்தவொரு வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்று முடிக்க முடியாமல் போகும், உற்சாகமாக செயல்படக்கூடிய உங்களிடம் இயல்பாகவே ஒரு மந்தநிலை உண்டாகும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதி என்பது இல்லாமல் போகும், செய்துவரும் தொழிலிலும் ஆதாயம் கேள்விக்குறியாக இருக்கும். வீடு, வாகனம் வகையில் செலவு ஏற்படும். இருந்தாலும் அனைத்தையும் சமாளித்திடக்கூடிய சக்தியும் உண்டாகும். வம்பு, வழக்குகளில் வெற்றி கிடைக்கும், ஆரோக்கியம் சீராகும்.
ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், நவ.13 வரை சகாய ஸ்தான ராகு உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார், உற்சாகமாக செயல்பட வைப்பார், வியாபாரம் தொழில் உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்குவார், தன்னம்பிக்கையை தைரியத்தை அதிகரிப்பார், மற்றவர்களால் சாதிக்க முடியாதவற்றை சாதித்திடக்கூடிய வலிமையையும் திறமையையும் வழங்குவார். நவ. 13 முதல் ராகு குடும்ப ஸ்தானத்திலும், கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் குடும்பம், தொழில், உத்தியோகம், உடல்நிலை என அனைத்திலும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும்.
குரு சஞ்சாரம்: மே 26 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்க்கும் குருவால் உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணவரவு அதிகரிக்கும், திருமண வயதினருக்கு வரன் அமையும், வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும், வீடு, வாகனம் என்று வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். மே 26 முதல் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சரித்தாலும், அவருடைய பார்வைகள் 12,2,4ம் இடங்களுக்கு கிடைப்பதால் வீண் அலைச்சல் குறையும், செலவுகள் கட்டுப்படும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும், எதிர்பார்த்த பணம் வரும், விருப்பங்கள் பூர்த்தியாகும், நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கும் குருப்பார்வை உண்டாவதால் அவரால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும், தடைபட்ட வேலைகள் நடந்தேறும், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும்.
சூரிய சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியான சூரியன், பொதுவாக அவருடைய சஞ்சாரங்களில் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் ஜாதகரின் நிலையை உயர்த்துவார், தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார், தடைபட்ட வேலைகளை முடித்து வைப்பார், வேலை, சுயதொழில், பதவி உயர்வு, வெளிநாட்டு முயற்சி என அனைத்தையும் அளிப்பார், வம்பு வழக்கு என்றிருந்த நிலையினை மாற்றுவார், பொருளாதார நிலையை உயர்த்துவார், அந்த நிலையில், பராபவ வருடத்தில் மாசி, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய நான்கு மாதங்களும் உங்களுக்கு நன்மையான, நினைத்ததை சாதித்துக்கொள்ளும் மாதங்களாக இருக்கும்.
பொதுப்பலன்: பராபவ வருடத்தின் முற்பகுதி உங்களுக்கு சாதகமாகவும், பிற்பகுதி நிதானமாகவும் செயல்பட வேண்டிய வருடமாக இருக்கும், உழைப்பும் முயற்சியும் உங்களை வெற்றிநடை போடவைக்கும். குலதெய்வ வழிபாடும், அம்மன் வழிபாடும் உங்களைப் பாதுகாக்கும்.
தொழில்: தொழில்காரகனான சனி பகவான் நான்காம் இடத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால், செய்துவரும் தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும், பிறரை நம்பி இந்த நேரத்தில் நிர்வாகப் பணிகளை ஒப்படைக்க வேண்டாம், கொள்முதல், விற்பனை, நிர்வாகம் என அனைத்திலும் உங்களுடைய நேரடி கண்காணிப்பு அவசியம், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள், ஆன்மிகம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு விற்பனை, நிதி நிறுவனம், காண்ட்ராக்ட், எக்ஸ்போர்ட், ஜூவல்லரி தொழில்கள் முன்னேற்றம் அடையும்.
பணியாளர்கள்: தொழில் காரகனான சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசியையும், தொழில் ஸ்தானமான 10ம் இடத்தையும் பார்ப்பதால் வேலைபளு அதிகரிக்கும், வேலையின்மீது பயம் ஏற்படும், சிலருக்கு வேலை இழப்பும் ஏற்படும் என்பதால் வேலையில் அக்கறையோடு செயல்படுவது நன்மையளிக்கும், அரசு பணியில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வது சங்கடமற்ற நிலையை உண்டாக்கும்.
பெண்கள்: வருடத்தின் முற்பகுதியில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும், கனவுகள் நனவாகும், உடல்நிலை சீராகும், குடும்பத்தினர் ஆதரவும் கணவரின் அன்பும் உங்களுக்குள் மகிழ்ச்சியை அதிகரிக்கும், வருடத்தின் பிற்பகுதியில் அனைத்திலும் நிதானம் தேவை, வேலை மற்றும் சுயதொழிலில் எச்சரிக்கை அவசியம், குடும்பத்தினர் ஆலோசனையோடு செயல்படுவதும், உடல்நிலையில் கவனமாக இருப்பதும் நன்மையாகும்.
கல்வி: தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் ராசிக்கும், 11ம் இடத்திற்கும் குருப்பார்வை கிடைப்பதால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், உயர்கல்வி என்ற லட்சியத்தை எட்டுவீர்கள். மருத்துவம், இன்ஜினியரிங், சட்டப்படிப்பு என்ற உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும்.
உடல்நிலை: அர்த்தாஷ்டம சனிக்காலம், ராசிக்கும் சனி பகவானின் பார்வை என்பதால் உடல்நலனில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்றாலும், ருண ரோக ஸ்தானத்தையும் சனி பகவான் பார்ப்பதால் வரும் நோய்கள் மருத்துவத்தால் குணமாகும். ஆரோக்கியம் மேம்படும்.
குடும்பம்: குருப்பார்வை, சகாய ஸ்தானத்தில் ராகு, 120 நாட்கள் சூரியன் என்று உங்களுக்கு சாதகம் புரிவதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும், புதிய இடம், வீடு, வாகனம் என்ற முயற்சி வெற்றியாகும், பிள்ளைகளின் மேல்படிப்பு, திருமணம் என்ற எண்ணம் நிறைவேறும். தம்பதிக்குள் ஒற்றுமை இருக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
பரிகாரம்: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகியை வழிபட சங்கடங்கள் விலகும்.
பூராடம்: உழைப்பு முன்னேற்றம் தரும்
அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், ஞானக்காரகன் குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் உழைப்பாலும் சுய முயற்சியாலும் வெற்றிபெறும் வருடமாக இருக்கும், இதுவரை எந்த ஒன்றிலும் பிடிப்பில்லாமல் வாழ்ந்துவந்த நிலையில் மாற்றம் ஏற்படும், இனி திட்டமிட்டு செயல்படுவீர்கள், உங்கள் நோக்கமெல்லாம் உயர்ந்த இடத்தை எட்டுவதாகவே இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும், உங்கள் கனவுகள் நனவாகும், விருப்பங்கள் பூர்த்தியாகும்.
சனி சஞ்சாரம்: அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான் முன்பிருந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார், அலட்சியமாக செயல்பட்டவர்களையும் அக்கறையுடன் செயல்பட வைப்பார், செய்து வரும் தொழிலிலும் பார்த்துவரும் உத்தியோகத்திலும் கவனம் கொள்ள வைப்பார். வேலைபளுவால் சங்கடத்திற்கு ஆளாக்குவார், உழைப்பிற்கும் முயற்சிக்கும் ஏற்ற ஆதாயத்தை வழங்குவார்.
ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, உங்களது முயற்சிகளை வெற்றியாக்குவார், வருமானத்தை அதிகரிப்பார், துணிச்சலுடனும் தைரியத்துடனும் நடைபோட வைப்பார், நினைத்ததை முடித்திடக்கூடிய அளவிற்கு உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். நவ. 13 முதல் அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும், குடும்ப ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் மறைமுகத் தொல்லைகள் அதிகரிக்கும், உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும், உங்களுடைய ரகசிய விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வரும், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும், பண விவகாரத்தில் நெருக்கடி ஏற்படும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும்.
குரு சஞ்சாரம்: வருடத்தின் தொடக்கத்தில் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், லாப ஸ்தானத்தையும் ராசியையும் பார்ப்பதால் நெருக்கடிகள் விலகும், விருப்பங்கள் பூர்த்தியாகும், திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும், செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மே 26 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் பணவரவில் ஏற்பட்ட தடை விலகும், குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும், வீண் அலைச்சல் குறையும், செலவுகள் கட்டுப்படும், அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும், தடைபட்ட வேலைகள் நடந்தேறும், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும்.
சூரிய சஞ்சாரம்: 3,6,10,11ம் இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும் காலங்களில் ஜாதகருக்கு யோகப் பலன்களை வழங்குவார். அந்த நிலையில் பராபவ வருடத்தில் மாசி, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய நான்கு மாதங்களும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், செல்வம் செல்வாக்கு உயரும், பட்டம் பதவி கிடைக்கும்.
பொதுப்பலன்: உங்களுடைய முழுத்திறமையையும் இந்த வருடத்தில் நீங்கள் வெளிப்படுத்த வேண்டியதாக இருக்கும். உழைப்பும் முயற்சியுமே உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும், வருடத்தின் முற்பகுதியில் நீங்கள் நினைப்பது நடக்கும், பொருளாதார நிலை உயரும், தேவைகள் பூர்த்தியாகும். வழக்கறிஞர், நீதிபதி, ஆசிரியர், அமைச்சர்கள், ஆன்மீகப் பணியாளர்கள், வைத்தியர்கள், புரோகிதர்கள், கலைஞர்கள், பொறியாளர்கள் நிலையும் மதிப்பும் உயரும்.
தொழில்: தொழில்காரகன் சனி பகவான் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில்மீது அக்கறை அதிகரிக்கும், முதலீட்டிற்கும் முயற்சிக்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும், பணியாளர் ஒத்துழைப்பால் திட்டமிட்டபடி தொழில் முன்னேற்றமடையும். சினிமா, தொலைக்காட்சி, வலைதளம், ஏ.ஐ., உணவகம், விடுதி, திருமண மண்டபம், ட்ராவல் ஏஜென்சி, ஆடை வணிகம், கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, நிதி நிறுவனம், ஜுவல்லரி, வாகனம் தயாரிப்பு மற்றும் வாகனம் சம்பந்தப்பட்ட தொழில்கள் வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள்: வேலைபளு அதிகரிக்கும் என்றாலும் அதற்குரிய மரியாதை உண்டாகும், அக்கறையோடு வேலைப் பார்ப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் சட்டத்திற்கும் தங்களுடைய வரம்பிற்கும் உட்பட்டு செயல்படுவது நன்மையாகும், நேர்மையாக வேலைப்பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும், வேலையில் தவறு செய்பவர்கள் இந்த ஆண்டில் சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
பெண்கள்: சப்தம குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் இதுவரை இருந்த பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிக்கும், உடல்நிலை சீராகும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். பொன் பொருள் சேரும், வேலைப்பார்க்கும் இடத்தில் கூடுதல் பொறுப்பை சுமக்க வேண்டியதாக இருக்கும், சுய தொழில் செய்பவர்கள் முதலீடு செய்வதற்குமுன் மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். சுக ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் இந்த வருடத்தில் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
கல்வி: உங்களுக்கு வருடத்தின் பிறப்பே சாதகமாக, ராசிக்கு குருப்பார்வையோடு பிறப்பதால் பொதுத்தேர்வு, போட்டித்தேர்வு முடிவுகள் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும், தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், உயர்கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை: உடல்நிலையில் அவ்வப்போது சிறு சிறு சங்கடங்கள் தோன்றும், பரம்பரை நோய், தொற்றுநோய், சிறுநீரக கோளாறு, ரகசியநோய், சுவாசக்கோளாறு என்று ஏற்பட வாய்ப்புண்டு என்றாலும் அவை மருத்துவத்திற்கு கட்டுப்படும்.
குடும்பம்: ராசிநாதனின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும், கடன் பட்டாவது சொந்த வீடு, வாகனம் என்று வாங்குவீர்கள், பிள்ளைகள் நலனிலும் முன்னேற்றத்திலும் அக்கறை எடுப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும், உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும்.
பரிகாரம்: சங்கர ராமேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
உத்திராடம்: வெற்றிமேல் வெற்றி
ஆத்ம காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களான மகர ராசியில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ வருடத்தில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதி யோகமாகவும், பிற்பகுதி உழைப்பால் உயரக்கூடிய காலமாகவும் இருக்கும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எடுத்த வேலைகள் வெற்றியாகும், எண்ணிய காரியங்கள் நடந்தேறும், வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.
சனி சஞ்சாரம்: உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அர்த்தாஷ்டம சனிக்காலம் என்பதால் வேலைபளு கூடும், உத்தியோகத்தில் நெருக்கடி ஏற்படும், தொழிலில் சங்கடங்கள் உருவாகும், உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் வாழ்க்கை வளமாகும், நீண்டநாள் கனவுகள் நனவாகும், செல்வாக்கு உயரும்.
ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும் கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1ம் பாதத்தினருக்கு நவ.13 வரை முயற்சி வெற்றியாகும், முன்னேற்றம் உண்டாகும், வசதி வாய்ப்புகள் கூடும், அதன்பின் குடும்ப ஸ்தானத்தில் ராகுவும் அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் குடும்பம், தொழில், உடல்நிலை என அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது, அதன்பின் ஜென்ம ராசியில் ராகு, ஏழாமிடத்தில் கேது என்று சஞ்சரிப்பதால் வருடம் முழுவதும் சர்ப்ப கிரகங்கள் சோதனைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பர் என்பதால் அனைத்திலும் நிதானம் அவசியம்.
குரு சஞ்சாரம்: 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்தது நடந்தேறும், வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும், வருமானம் அதிகரிக்கும், திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். அதன்பின் குருவின் பார்வைகளால் நன்மைகள் அதிகரிக்கும், அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பு நீங்கும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 முதல் சப்தம ஸ்தானத்தில் குரு உச்சமாக சஞ்சரிப்பதால் விருப்பங்கள் பூர்த்தியாகும், செல்வம் செல்வாக்கு உயரும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும், பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு சொந்த தொழில் அமையும், வேலையில் உயர்வு கிடைக்கும், வருடம் முழுவதும் குருவின் பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதியும், பணப்புழக்கமும் இருந்து கொண்டிருக்கும்.
சூரிய சஞ்சாரம்: 3,6,10,11ம் இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு யோகப் பலன்களை வழங்குவார். அந்த நிலையில் பராபவ வருடத்தில், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, மாசி, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய நான்கு மாதங்களும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பங்குனி, ஆனி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களும் யோக மாதங்களாகும், இந்த மாதங்களில் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும், வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
பொதுப்பலன்: பராபவ வருடம் உங்கள் வாழ்வில் மாற்றங்களை உண்டாக்கும் வருடமாக இருக்கும். இதுவரை தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்யம், அரசியலில் செல்வாக்கு என்ற நீண்ட நாள் கனவுகள் நனவாகும்.
தொழில்: செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருமானம் உயரும். நிதி நிறுவனம், உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திர தொழிற்கூடம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, ஏ.ஐ., ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகம், ஜுவல்லரி தொழில்கள் லாபமடையும்.
பணியாளர்கள்: வேலையில் ஏற்பட்ட சங்கடங்களும், வேலை மீதிருந்த பயமும் போகும். உங்கள் திறமைக்குரிய மரியாதையும், எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த பிரச்னைகள், சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வரும் சிலருக்கு பி.ஆர். கிடைக்கும்.
பெண்கள்: பராபவ வருடம் பெண்களுக்கு முன்னேற்றமான வருடமாக இருக்கும். உடல் ரீதியாக பாதிப்பு, குடும்பத்தில் பிரச்னை, வேலையில் சங்கடம் என்றிருந்த நிலைகள் மாறும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும், நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவர்கள் ஏக்கம் தீரும். பொன் பொருள் சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உண்டாகும்.
கல்வி: தேர்வுகள் முடிந்து ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை: உடல் நிலையில் ஏதேனும் ஒரு தொல்லை ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தவர்களுக்கு சரியான சிகிச்சைகள் கிடைத்து ஆரோக்கியம் சீராகும் என்றாலும், தொடர்ந்து உடல்நிலையில் அக்கறை எடுத்துக் கொள்வது நன்மை அளிக்கும். வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணியிலும், சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது அவசியம்.
குடும்பம்: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் முடிவிற்குவரும். கருத்து வேறுபாட்டால் ஒருவர் சொல்வதை ஒருவர் கேட்காமல் வாழ்ந்து வந்த தம்பதிகளுக்குள் இணக்கமான நிலை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், எதிர்காலத்திற்கு தேவையான வசதிகள் என திட்டமிட்டு செயல்படுவீர்கள். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடங்கள் விலகும்.