sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 15, 2026 ,சித்திரை 2, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

/

கும்பம்

/

கும்பம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : கும்பம்
13 ஏப் 2026

முந்தைய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

கும்பம்

கும்பம்: அவிட்டம்: நினைத்தது நிறைவேறும்

தைரிய வீரிய காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களான மகர ராசியில் பிறந்தவர்களுக்கும், 3,4ம் பாதங்களான கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கும் சனி பகவானே ராசி நாதனாவார். பராபவ வருடத்தில் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் வெற்றியடையும் வருடமாக, நினைப்பது நடந்தேறும் காலமாக இருக்கும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குருப் பார்வையுடன் வருடம் பிறப்பதால் தொட்டதெல்லாம் பொன்னாகும், எடுத்ததெல்லாம்வெற்றியாகும். வாழ்வில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

சனி சஞ்சாரம்: அவிட்டம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சகாய ஸ்தான சனி, வெற்றிமேல் வெற்றிகளை வழங்குவார், வியாபாரம் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வார்த்தைகளால் சங்கடங்கள் தோன்றும், வரவு செலவில் நெருக்கடி ஏற்படும், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடம் முழுவதும் சர்ப்ப கிரகங்கள் எதிர்மறையாக சஞ்சரிப்பதால், உடல்நிலையில் பாதிப்பு, மறைமுகத்தொல்லை, குடும்பத்தில் குழப்பம், பணவரவில் தடை, தவறான பழக்க வழக்கங்களால் அவமானம் என ஏற்படும். 2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 முதல் கேது சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும், வம்பு வழக்குகள் சாதகமாகும், உடல்நிலை சீராகும், நினைத்த வேலைகள் நடந்தேறும்.

குரு சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை குருவின் பார்வைகளால் செய்துவரும் தொழில் லாபம்தரும், உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும், வீண் செலவுகள் குறையும், பணப்புழக்கம் இருக்கும், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மே 26 முதல் நீண்டநாள் கனவுகள் நனவாகும், விருப்பங்கள் பூர்த்தியாகும், வருமானம் அதிகரிக்கும், திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கமே,  குருப்பார்வையுடன் பிறப்பதால் குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைக்கேற்ப, உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம், செல்வாக்கு என அவரவர் கனவுகள் நனவாகும்.

சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன், அவரவர் ராசிக்கு 3,6,10,11ம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் முன்னேற்றத்தை வழங்குவார். அந்த நிலையில், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, பங்குனி, ஆனி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதக் காலங்களிலும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதக் காலங்களிலும் உங்கள் நிலையில் உயர்வினை ஏற்படுத்துவார்.

பொதுப்பலன்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், வருமானம் உயரும், புதிய சொத்து சேரும், வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், புதிய தொழில் தொடங்கும் கனவு நனவாகும், ஆரோக்கியமாகவும், மதிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ முடியும்.

தொழில்: தொழிலில் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். உற்பத்தி அதிகரிக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பணியாளர் ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், மருத்துவம் சார்ந்த தொழில்கள், கெமிக்கல், உணவகம், ரசாயன விற்பனை, ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், வாகன விற்பனை, ட்ராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் வளர்ச்சி அடையும்.

பணியாளர்கள்: வேலைப் பார்க்கும் இடத்தில் தொடர்ந்து சங்கடங்களை சந்தித்து வந்தவர்களுக்கு இனி அதில் மாற்றம் ஏற்படும், உழைப்பிற்கு ஏற்ற வருமானம் இல்லை, சலுகைகள் இல்லை என்று வருத்தப்பட்டு வந்த நிலை மாறும், உங்கள் திறமையை நிர்வாகம் அங்கீகரிக்கும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும், அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு இந்த வருடத்தில் கிடைக்கும்.

பெண்கள்: வாழ்க்கையின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தவர்களுக்கு பிறக்கும் பராபவ வருடம் நம்பிக்கையை உண்டாக்கும் வருடமாக இருக்கும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும், கணவன் மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும், வெளியூரில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைக்கும், பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும், உயர்கல்வி வேலை திருமணம் குழந்தை பாக்யம் என்று அவரவர் தேவைக்கேற்றவை பூர்த்தியாகும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், பொன் பொருள் சேரும்.

கல்வி: குரு சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் பொதுத் தேர்வின் முடிவு உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், உயர்கல்வி கனவு நனவாகும், விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: பரம்பரை நோய், தொற்று நோய், விபத்து என்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும், ஆரோக்கியம் சீராகும் என்றாலும், ஆயுள் காரகன் சனியின் பார்வையும், கேதுவும் உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கலாம் என்பதால் வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணிகளிலும், சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது நன்மையை உண்டாக்கும்.

குடும்பம்: பெரும் புயல் வீசி ஓய்ந்ததுபோல் குடும்பத்தில் அமைதி உண்டாகும். நெருக்கடிகள் நீங்கும், தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும், புதிய இடம், வீடு நவீன பொருட்கள் வாகனம் என்று வாங்க நீண்டநாட்களாக மேற்கொண்டு வந்த முயற்சி வெற்றியாகும், பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும், அவர்களுடைய  உயர்கல்வி, வேலை, திருமணத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும், குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.

பரிகாரம்: மடப்புரம் மாகாளியை வழிபட மங்கலம் உண்டாகும். மனக்கவலை விலகும்.

சதயம்: உயர்வு காத்திருக்கு

கர்மக்காரகன் சனி, யோகக்காரகன் ராகு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் வெற்றிமேல் வெற்றியடையும் வருடமாக இருக்கும், ஆச்சரியப்படக் கூடிய வகையில் உங்கள் நிலையில் உயர்வு ஏற்படும், செல்வாக்கோடு வாழும் நிலை உண்டாகும். 

சனி சஞ்சாரம்: ஜென்ம ராசியை விட்டு சனி விலகிவிட்டதால் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும், முடங்கிய தொழில் முன்னேற்றமடையும், வருமானம் உயரும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும், உங்களைத் தவறாக வழிநடத்தியவர்கள், உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்பட்டவர்கள் உங்களை விட்டு விலகுவர். என்றாலும்,  உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம்.

ராகு - கேது சஞ்சாரம்: நவ.13 வரை ஜென்ம ராசிக்குள் ராகு, ஏழாமிடத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆசைக்கு அணை போடுவதும், தவறான நண்பர்களை விட்டு விலகுவதும், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் நன்மையளிக்கும். நவ. 13 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் கேது  சஞ்சரிப்பதால் எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும், எதிரிகளை வெல்லக்கூடிய அளவிற்கு உங்கள் செல்வாக்கு உயரும், இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும், உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும், எடுக்கும் வேலைகள் தடையின்றி நடந்தேறும்.

குரு சஞ்சாரம்: பராபவ  வருடம் பிறக்கும்போது குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் உங்கள் ராசியையும் பார்ப்பதால் வருடத்தின் தொடக்கமே உங்களுக்கு சாதகமாக இருக்கிறது, பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும், சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும், குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் விலகும், பணம், பட்டம், பதவி, செல்வாக்கு, அந்தஸ்து என்று உங்கள் நிலை உயரும், திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். மே 26 முதல் குரு, ருண ரோக ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகளால் வியாபாரம் தொழில் லாபமடையும், வீண் செலவுகள் கட்டுப்படும், பாத சனியால் ஏற்படும் பாதகங்கள் விலகும்.

சூரிய சஞ்சாரம்: சூரியன் அவரவர் ராசிக்கு 3,6,10,11ம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்துவார், பொருளாதார நிலையை உயர்த்துவார், வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார், செல்வாக்கோடு நடைபோட வைப்பார். அந்த நிலையில் சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதங்களும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார், எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார்.

பொதுப்பலன்: வருடத்தின் முதல்நாளே உங்கள் ராசியில் பிறப்பதுடன், ராசிக்கு குருப்பார்வையும் உண்டாவதால் பராபவ வருடம் மிக யோகமான வருடமாக இருக்கும், இதுவரை உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகள் பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் நீண்டநாள் கனவுகள் நனவாகும், செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும், சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும்.

தொழில்: தொழில் காரகன் சனி பகவானின் 10ம் பார்வை லாப ஸ்தானத்திற்கு கிடைப்பதால் வரவு அதிகரிக்கும், நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் இனி லாபமடையும், எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும், வரவேண்டிய பணம் வரும். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், நிதி நிறுவனம், சினிமா, தொலைக்காட்சி, மருத்துவம் சார்ந்த தொழில்கள்,  கெமிக்கல், ரசாயனம், இயந்திரத் தொழில் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு, வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, ஜுவல்லரி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஆன்லைன் வர்த்தகம்,  ஆட்டோமொபைல்ஸ், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், செங்கல் தயாரிப்பு, எம்சேண்ட் தொழில்கள் வளர்ச்சி அடையும்.

பணியாளர்கள்: ராசியை விட்டு சனி பகவான் விலகியதுடன், ராசிக்கு குருப்பார்வையும் கிடைப்பதால் உங்களிடம் இருந்த மந்தநிலை விலகும், மனக்கவலை நீங்கும், வேலையில் அக்கறை கூடும், எடுத்த வேலைகளை உடனுக்குடன் முடித்துக் கொடுப்பீர்கள், உங்கள் திறமையின் காரணமாக நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சம்பளமும் சலுகைகளும் தேடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தள்ளிப்போன பதவி உயர்வும் இடமாற்றமும் இந்த நேரத்தில் கிடைக்கும்.

பெண்கள்: வாழ்க்கையையும் உடல் நிலையையும் நினைத்து சங்கடப்பட்டுக் கொண்டிருந்த நிலைமாறும், குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும், வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும், வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்துகொண்டு ஆதரவாக இருப்பார், குடும்பம் உங்கள் கட்டுப்பாட்டில் வரும், பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும், பொன் பொருள் சேரும்.

கல்வி: ஐந்தாமிட குரு உயர் கல்வியை நோக்கி உங்களை நடைபோட வைப்பார், தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே உயர் கல்விக்கு திட்டமிடுவீர்கள், தேர்வு முடிவும் நீங்கள் எதிர்பார்த்ததுபோல் இருக்கும், எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வைகள் சுகம் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்கு கிடைப்பதால், உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும், வாகனப் பயணத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்,  உடல் நிலையில் அவ்வப்போது ஏதேனும் சங்கடங்கள் ஏற்படும் என்றாலும், மே.26 வரை ராசிக்கு குருப் பார்வை ஏற்படுவதாலும், அதன்பிறகு சனி பகவானை குரு பார்ப்பதாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் நோய் நொடிகளும் ஆபத்தும் விலகும்.

குடும்பம்: ஜென்ம சனிக்காலம் முடிந்து, குடும்ப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் இக்காலத்தில், குரு பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் உங்களைப் பாதுகாக்கும், எடுத்த வேலைகளை வெற்றியாக்கும், எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்கும், பொன், பொருள், வீடு, மனை, வாகனம் என்ற முயற்சிகள் வெற்றியாகும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், தம்பதிக்குள் இணக்கமான நிலை உருவாகும், பிள்ளைகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும், அவர்களுடைய எதிர்காலத்திற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும்.

பரிகாரம்: திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.

பூரட்டாதி: நிதானம் அவசியம்

தன, புத்திரக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3ம் பாதங்களான கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும், 4ம் பாதமான மீன ராசியில் பிறந்தவர்களுக்கு குருவே ராசிநாதனாகவும் உள்ளனர். 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குருப்பார்வையுடன் வருடம் பிறப்பதால் வாழ்க்கை வளமாகும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், பொன்னும் பொருளும் சேரும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய ஸ்தான கேதுவால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும், ஆரோக்கியம் மேம்படும், செல்வாக்கு உயரும்.

சனி சஞ்சாரம்: பூரட்டாதி 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல்நிலை சீராகும், வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும், வருமானம் அதிகரிக்கும், விருப்பங்கள் பூர்த்தியாகும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகள் குறையும், சேமிப்பு உயரும் என்றாலும் நட்பு வட்டத்தில் விரிசல் ஏற்படும்,  வாழ்க்கைத் துணையுடன் இணக்கமற்ற நிலை உண்டாகும், செய்துவரும் தொழிலிலும் பார்த்துவரும் வேலையிலும் போராட்டமான நிலை இருக்கும் என்பதால் அனைத்திலும் நிதானம் அவசியம்.

ராகு - கேது சஞ்சாரம்: நவ.13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து, அதன்பின் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, நவ. 13 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது செல்வாக்கை உயர்த்துவார், நினைத்ததை சாதிக்கும் நிலையை உருவாக்குவார், நோய் நொடி வம்பு வழக்குகள் இல்லாமல் வாழவைப்பார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ. 13 வரை சத்ரு ஜெய ஸ்தான கேதுவும், அதன்பின் லாப ஸ்தான ராகுவும் வெற்றிமேல் வெற்றிகளை உண்டாக்குவர், வருமானத்தை அதிகரிப்பர், நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடித்திடக்கூடிய வலிமையை உண்டாக்குவர், சூழ்நிலைகளை சாதகமாக்குவர்.

குரு சஞ்சாரம்: 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடம் பிறக்கும்போது குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் ராசியையும் பார்ப்பதால் வருடத்தின் தொடக்கமே சாதகமாக இருக்கிறது, குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும், பணம், பட்டம், பதவி, செல்வாக்கு, அந்தஸ்து என்ற நிலை உருவாகும், மே 26 முதல் குருவின் பார்வைகளால் வியாபாரம் தொழில் லாபமடையும், வீண் செலவுகள் கட்டுப்படும், பாத சனியால் ஏற்படும் பாதகங்கள் விலகும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதியில் எடுத்த வேலைகள் வெற்றியாகும், உடல்நிலை சீராகும், வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும், வீண் செலவுகளும் அலைச்சலும் குறையும். மே 26 முதல் ஐந்தாமிடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் ஜென்ம சனியின் பாதிப்புகள் விலகும், உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும், செல்வாக்கு அந்தஸ்து உயரும், குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.

சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகன் சூரியன் ஒவ்வொரு ராசியினருக்கும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த ஜாதகருக்கு சங்கடங்கள் விலகி நன்மைகள் நடக்கும், யோகப் பலன்கள் உண்டாகும், பட்டம் பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, தொழில், உத்தியோகம் என்ற முயற்சிகள் வெற்றியாகும், அந்த நிலையில் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதங்களும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வைகாசி, ஆவணி, மார்கழி, தை ஆகிய நான்கு மாதங்களும் நினைத்த காரியம் நடந்தேறும், எடுத்த வேலைகள் வெற்றியாகும். 

பொதுப்பலன்: குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும், ராகு, கேதுவும் பராபவ வருடத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் விலகும், போராட்ட நிலை மாறும், பணப்புழக்கம் அதிகரிக்கும், பொன்பொருள் சேரும், குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும், வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், வாழ்க்கை வளமாகும்.

தொழில்: தொழில்மீது அக்கறை அதிகரிக்கும், திட்டமிட்டு செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள், தொழிலாளர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். ஜுவல்லரி, ஆடை வர்த்தகம், சிறு குறு நிறுவனங்கள், பெரு வணிகம், நிதி நிறுவனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் ஃபார்ட்ஸ் தயாரிப்பு, ஃபேக்டரி, ட்ராவல்ஸ், எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர், ஏற்றுமதி இறக்குமதி, ஏ.ஐ., ஆன்லைன் வர்த்தகம் லாபம்தரும்.

பணியாளர்கள்: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் பிரச்சனைகள் முடிவிற்கு வரும், சிலருக்கு வெளி நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும், திறமைக்குரிய அங்கீகாரமும் எதிர்பார்த்த ஊதியமும் சலுகைகளும் கிடைக்கும், அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும்.

பெண்கள்: மங்களக்காரகன் குருவும், சர்ப்ப கிரகங்களான ராகு, கேதுவும் வருடம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும், இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும், குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும், வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும், சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும், பிள்ளைகளால் பெருமை உண்டாகும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், பொன் பொருள் சேரும். 

கல்வி: பொது மற்றும் போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைப்பதுடன், விரும்பிய கல்லூரியில் எதிர்பார்த்த பாடப் பிரிவில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: ஆயுள் காரகன் சனி பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் உங்களுக்கு அவ்வப்போது சில சங்கடங்களை ஏற்படுத்தும் என்றாலும் குருப்பார்வைகளும், கேதுவின் சிம்ம, கடக சஞ்சாரங்களும் உங்களைப் பாதுகாக்கும், பெரிய அளவில் பயமுறுத்திய நோய்களும் மருத்துவத்திற்கு கட்டுப்படும். ஆரோக்கியம் மேம்படும், சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள்.

குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், புதிய இடம் வீடு வாகனம் பொன் பொருள் என்ற முயற்சி வெற்றியாகும், தம்பதிகளிடம் இணக்கமான நிலை உண்டாகும், வீட்டில் மங்கல ஒலி கேட்கும், பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், வெளி வட்டாரத்தில் செல்வாக்குடன் வாழ்வீர்கள்.

பரிகாரம்: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை வழிபட தடைகள் விலகும், நன்மைகள் நடக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us