sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

/

கும்பம்

/

கும்பம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : கும்பம்
09 ஏப் 2016

முந்தய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

கும்பம்உழைப்பால் உயர்ந்திடும் கும்ப ராசி அன்பர்களே! (75/100)

ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் வக்கிரம் அடைந்து 7-ம் இடத்தில் உள்ளார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். ஆடம்பர வசதி அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பணி உயர்வைத் தருவார். அவர் 2016 ஆக. 2 வரை அந்த ராசியில் இருப்பார். அதன் பிறகு வக்கிர நிவர்த்தி அடைந்து கன்னி ராசிக்கு மாறுவது நல்லதல்ல. அப்போது மனக்குழப்பம், வேதனைக்கு ஆளாக நேரிடலாம். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். உறவினர் மத்தியில் வீண் விரோதம் உருவாகும். எதிரி மூலம் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. இதற்காக நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளதால் ஆண்டு முழுவதும் அமோகமான வாழ்வு பெறுவீர்கள். அந்த வகையில் எந்த இடையூறு குறுக்கிட்டாலும் குருவின் பார்வை வெற்றிக்குத் துணை நிற்கும்.

சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவரால் தொழிலில் பின்னடைவு உருவாகலாம். அவ்வப்போது உடல் உபாதைக்கு ஆளாவீர்கள். ராகு 7-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. படிப்பு, வேலை விஷயமாக வெளியூர் செல்லும் நிர்பந்தம் உருவாகும். தரம் தாழ்ந்தவர்களின் சேர்க்கையால் அவப் பெயரையும் சந்திக்க வாய்ப்புண்டு. கேது உங்கள் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இதன் மூலம் செயலில் தடையும், உடல் உபாதையும் தரலாம். குடும்பத்திற்குத் தேவையான அடிப்படை வசதி அனைத்தும் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் வகையில் சுபச் செலவு செய்வீர்கள். அவர்களின் வளர்ச்சி கண்டு பெருமை கொள்வீர்கள். ஆக.2க்குப் பிறகு நற்பலன் படிப்படியாக குறையும்.

பணியாளர்கள் சுதந்திர மனப்பான்மையுடன் பணியாற்றுவர். சக ஊழியர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். ஆக. 2 க்கு பிறகு அதிகாரிகளின் குறிப்பறிந்து நடப்பது அவசியம். விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே எதிர்பார்க்கும் கோரிக்கைகள் நிறைவேறும். வழக்கமான சம்பள உயர்வு. சலுகைகள் கிடைப்பதில் தடை இருக்காது. வியாபாரம் ஆண்டின் தொடக்கத்தில் லாபகரமாக இருக்கும். ஆக.2க்குப் பிறகு எதிரி தொல்லை ஏற்படலாம். அரசிடம் இருந்து சலுகை எதிர்பார்க்க முடியாது. ராகுவால் பண விரயம் ஆகலாம். எனவே புதிய நபர்களிடம் விழிப்புடன் இருப்பது அவசியம். நண்பர்கள் என்ற போர்வையில் விரோதிகளும் நெருங்கிப் பழக வாய்ப்புண்டு. ஆக. 2 க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் தங்கும் நிலை ஏற்படலாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் பெறுவதில் விடாமுயற்சி தேவைப்படும்.

அரசியல்வாதிகள் சமூகசேவகர்கள் பிரதிபலனை பாராது பணி செய்ய வேண்டியதிருக்கும். தொண்டர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடும்.

மாணவர்கள் போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவர். ஆக. 2 க்கு பிறகு முயற்சி எடுத்து படிக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது.

விவசாயிகள் நவீன கருவி மூலம் பணியை மேம்படுத்துவர். விவசாயத்தில் நல்ல வருமானம் தொடர்ந்து வரும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆனால், ஆக.2க்குப் பிறகு புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.

பெண்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தளர்ச்சி நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பணியில் ஈடுபடும் பெண்களுக்கு ஆக.2க்குள் எதிர்பார்க்கும் கோரிக்கை நிறைவேற வாய்ப்புண்டு.

2017 ஜனவரி16 -ஏப்ரல்13 ஜன.16ல் துலாம் ராசிக்கு அதிசாரம் (முன்னோக்கி செல்லுதல்) அடையும் குரு மார்ச் 10 வரை அங்கேயே இருக்கிறார். இதன் மூலம் நன்மை அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். கையில் பெரும்பணம் புழங்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகும். பணியில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். குடும்ப ஒற்றுமை மேம்படும். உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். எதிரியாக இருந்தவர்கள் கூட உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை உருவாகும். தடைகளை  முறியடித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். அக்கம்பக்கத்தினர் மத்தியில் செல்வாக்கு மேலோங்கும். அவரது 9-ம் இடத்துப்பார்வையால் குடும்பத்தில் குதுõகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். புது மணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் விரைவில் கை கூடி வரும்.மனம் போல புத்தாடை அணிகலன்
வாங்குவீர்கள்.

பணியாளர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். பணிச்சுமை படிப்படியாக மறையும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடம்,  பணி மாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம். வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கையெழுத்தாகும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் நற்பெயர் காண்பர். தொண்டர்களின் கடும் உழைப்பால் வெற்றி அடைவர்.

மாணவர்கள் சிறப்பான பலனைப் பெறலாம். விவசாயிகள் எதிர் பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் பெறலாம். வழக்கு விவகாரங்களில் நல்ல முடிவு கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியான வாழ்வு அமையப் பெறுவர். பிள்ளைகள் உடல் நலனில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது.

பரிகாரம்: சிவனை வழிபடுங்கள். சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். கிருஷ்ணர் வழிபாடு முன்னேற்றம் தரும். 2016 ஆக. 2 க்கு பிறகு வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். கொண்டைக்கடலை தானம் செய்வது நன்மைஅளிக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us