தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : மகரம்
13 ஏப் 2026
முந்தைய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மகரம்
மகரம்: உத்திராடம்: வெற்றிமேல் வெற்றி
ஆத்ம காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களான மகர ராசியில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ வருடத்தில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதி யோகமாகவும், பிற்பகுதி உழைப்பால் உயரக்கூடிய காலமாகவும் இருக்கும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எடுத்த வேலைகள் வெற்றியாகும், எண்ணிய காரியங்கள் நடந்தேறும், வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.
சனி சஞ்சாரம்: உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அர்த்தாஷ்டம சனிக்காலம் என்பதால் வேலைபளு கூடும், உத்தியோகத்தில் நெருக்கடி ஏற்படும், தொழிலில் சங்கடங்கள் உருவாகும், உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் வாழ்க்கை வளமாகும், நீண்டநாள் கனவுகள் நனவாகும், செல்வாக்கு உயரும்.
ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும் கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1ம் பாதத்தினருக்கு நவ.13 வரை முயற்சி வெற்றியாகும், முன்னேற்றம் உண்டாகும், வசதி வாய்ப்புகள் கூடும், அதன்பின் குடும்ப ஸ்தானத்தில் ராகுவும் அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் குடும்பம், தொழில், உடல்நிலை என அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது, அதன்பின் ஜென்ம ராசியில் ராகு, ஏழாமிடத்தில் கேது என்று சஞ்சரிப்பதால் வருடம் முழுவதும் சர்ப்ப கிரகங்கள் சோதனைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பர் என்பதால் அனைத்திலும் நிதானம் அவசியம்.
குரு சஞ்சாரம்: 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்தது நடந்தேறும், வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும், வருமானம் அதிகரிக்கும், திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். அதன்பின் குருவின் பார்வைகளால் நன்மைகள் அதிகரிக்கும், அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பு நீங்கும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 முதல் சப்தம ஸ்தானத்தில் குரு உச்சமாக சஞ்சரிப்பதால் விருப்பங்கள் பூர்த்தியாகும், செல்வம் செல்வாக்கு உயரும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும், பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு சொந்த தொழில் அமையும், வேலையில் உயர்வு கிடைக்கும், வருடம் முழுவதும் குருவின் பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதியும், பணப்புழக்கமும் இருந்து கொண்டிருக்கும.
சூரிய சஞ்சாரம்: 3,6,10,11ம் இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு யோகப் பலன்களை வழங்குவார். அந்த நிலையில் பராபவ வருடத்தில், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, மாசி, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய நான்கு மாதங்களும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பங்குனி, ஆனி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களும் யோக மாதங்களாகும், இந்த மாதங்களில் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும், வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
பொதுப்பலன்: பராபவ வருடம் உங்கள் வாழ்வில் மாற்றங்களை உண்டாக்கும் வருடமாக இருக்கும். இதுவரை தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்யம், அரசியலில் செல்வாக்கு என்ற நீண்ட நாள் கனவுகள் நனவாகும்.
தொழில்: செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருமானம் உயரும். நிதி நிறுவனம், உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திர தொழிற்கூடம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, ஏ.ஐ., ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகம், ஜுவல்லரி தொழில்கள் லாபமடையும்.
பணியாளர்கள்: வேலையில் ஏற்பட்ட சங்கடங்களும், வேலை மீதிருந்த பயமும் போகும். உங்கள் திறமைக்குரிய மரியாதையும், எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த பிரச்னைகள், சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வரும் சிலருக்கு பி.ஆர். கிடைக்கும்.
பெண்கள்: பராபவ வருடம் பெண்களுக்கு முன்னேற்றமான வருடமாக இருக்கும். உடல் ரீதியாக பாதிப்பு, குடும்பத்தில் பிரச்னை, வேலையில் சங்கடம் என்றிருந்த நிலைகள் மாறும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும், நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவர்கள் ஏக்கம் தீரும். பொன் பொருள் சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உண்டாகும்.
கல்வி: தேர்வுகள் முடிந்து ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை: உடல் நிலையில் ஏதேனும் ஒரு தொல்லை ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தவர்களுக்கு சரியான சிகிச்சைகள் கிடைத்து ஆரோக்கியம் சீராகும் என்றாலும், தொடர்ந்து உடல்நிலையில் அக்கறை எடுத்துக் கொள்வது நன்மை அளிக்கும். வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணியிலும், சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது அவசியம்.
குடும்பம்: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் முடிவிற்குவரும். கருத்து வேறுபாட்டால் ஒருவர் சொல்வதை ஒருவர் கேட்காமல் வாழ்ந்து வந்த தம்பதிகளுக்குள் இணக்கமான நிலை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், எதிர்காலத்திற்கு தேவையான வசதிகள் என திட்டமிட்டு செயல்படுவீர்கள். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடங்கள் விலகும்.
திருவோணம்: முயற்சியில் வெற்றி
மனக்காரகன் சந்திரன், ஆயுள்காரகன் சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் யோகமான வருடமாகும். சோதனைமேல் சோதனை என்று தொடர்ந்து சங்கடங்களை அனுபவித்து வந்த நிலையில் இனி மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும், நினைத்ததை சாதிக்கும் நிலை உருவாகும். தொழில் முன்னேற்றமடையும், அரசியலில் எதிர்பார்த்த இடம் கிடைக்கும்.
சனி சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனும், தன குடும்பாதிபதியுமான சனி பகவான், சகாய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் வருடம் முழுவதும் சஞ்சரிப்பதால், எடுத்த வேலைகள் வெற்றியாகும், இதுவரை இருந்த நெருக்கடிகள் முடிவிற்கு வரும், வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும், தைரியம் அதிகரிக்கும், உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும், வாழ்வில் நிம்மதி உண்டாகும்.
ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு இரண்டாம் இடமான தன குடும்ப ஸ்தானத்திலும், கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரித்து, அதன்பின் ராகு ராசிக்குள்ளும் கேது ஏழாமிடத்திலும் சஞ்சரிப்பதால் வருடம் முழுவதும் சர்ப்ப கிரகங்கள் உங்களை சங்கடத்திற்கு ஆளாக்குவர், உடல்நிலையில் பாதிப்பு, மறைமுகத்தொல்லைகள், குடும்பத்தில் குழப்பம், பணத்தடை, தவறான நட்புகளால் செல்வாக்கில் பின்னடைவு, கவரவத்திற்கு இழுக்கு என்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் அனைத்திலும் கவனமாகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்வது அவசியம்.
குரு சஞ்சாரம்: மே 26 வரை குருவின் பார்வைகள் தொழில் மற்றும் விரயம், குடும்ப ஸ்தானங்களுக்கு உண்டாவதால் செய்துவரும் தொழில் லாபம்தரும், உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும், வீண் செலவுகள் குறையும், பணப்புழக்கம் இருக்கும், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மே 26 முதல் சப்தம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குருவால் உங்கள் நீண்டநாள் கனவுகள் நனவாகும், விருப்பங்கள் பூர்த்தியாகும், வருமானம் அதிகரிக்கும், திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும், திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம், செல்வாக்கு என்ற கனவுகள் நனவாகும்.
சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன், பங்குனி, ஆனி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதக் காலங்களும் தனது 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் உங்கள் நிலையில் உயர்வினை ஏற்படுத்துவார், செல்வாக்கோடு நடைபோட வைப்பார், எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார், வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார், வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார், புதிய பொறுப்பு, பதவி என்று அதிகாரத்துடன் வாழக்கூடிய நிலையை உருவாக்குவார்.
பொதுப்பலன்: எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அதில் ஏதாவது ஒரு தடை, தாமதம் போராட்டம் என்றிருந்த நிலைமாறும். உங்கள் திறமை வெளிப்படும், தடைபட்ட வேலைகள் நடந்தேறும், செல்வம், செல்வாக்கு, அந்தஸ்தோடு வாழக்கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக உங்களுக்கு கனவாகவே இருந்த ஒவ்வொன்றும் இந்த நேரத்தில் உங்களைத்தேடி வரும்.
தொழில்: தொழிலில் இருந்த தடைகள் விலகும், இதுவரை உற்பத்தி, விற்பனை, வரவு என ஒவ்வொன்றிலும் போராட்டங்களை சந்தித்து வந்த உங்களுக்கு இனி சுபிட்சமான நிலை உருவாகும், வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த தொழில் சொந்தக் கட்டிடத்தில் செயல்படத் தொடங்கும், உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திரத் தொழிற்கூடம், வாகனம் தயாரிப்பு மற்றும் விற்பனை, கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வர்த்தகம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள், பால், குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஜவுளி தொழில்கள் முன்னேற்றம் அடையும்.
பணியாளர்கள்: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும், உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும், தடைபட்டு வந்த பதவி உயர்வையும் சலுகைகளையும் நிர்வாகமே வழங்கும், அரசு பணியாளர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு உண்டாகும், சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும், தடைபட்டு வந்த பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.
பெண்கள்: மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல்வேறு சங்கடங்களை அனுபவித்து வந்த உங்களுக்கு, இனி அவற்றிலிருந்து விடுதலைக் கிடைக்கும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும், வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும், கணவருடன் இணக்கமான நிலை உண்டாகும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், சுய தொழில் செய்து வருபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும், வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு மாங்கல்யம் ஏறும்.
கல்வி: பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர முடியும்.
உடல்நிலை: பரம்பரை நோய், தொற்று நோய், விபத்து, மன அழுத்தம், செரிமானக் கோளாறு, அல்சர், இளைப்பு என்று தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை அளிக்கும்.
குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பொருளாதார நிலை உயரும், புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும், தம்பதிகளுக்குள் இணக்கமான நிலை உண்டாகும். குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும், சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும், செல்வாக்கோடு வாழும் நிலை உண்டாகும்.
பரிகாரம்: ராகு கேதுவிற்கு பரிகார பூஜை செய்து காளத்தீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
அவிட்டம்: நினைத்தது நிறைவேறும்
தைரிய வீரிய காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களான மகர ராசியில் பிறந்தவர்களுக்கும், 3,4ம் பாதங்களான கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கும் சனி பகவானே ராசி நாதனாவார். பராபவ வருடத்தில் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் வெற்றியடையும் வருடமாக, நினைப்பது நடந்தேறும் காலமாக இருக்கும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குருப் பார்வையுடன் வருடம் பிறப்பதால் தொட்டதெல்லாம் பொன்னாகும், எடுத்ததெல்லாம்வெற்றியாகும். வாழ்வில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
சனி சஞ்சாரம்: அவிட்டம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சகாய ஸ்தான சனி, வெற்றிமேல் வெற்றிகளை வழங்குவார், வியாபாரம் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வார்த்தைகளால் சங்கடங்கள் தோன்றும், வரவு செலவில் நெருக்கடி ஏற்படும், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும்.
ராகு - கேது சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடம் முழுவதும் சர்ப்ப கிரகங்கள் எதிர்மறையாக சஞ்சரிப்பதால், உடல்நிலையில் பாதிப்பு, மறைமுகத்தொல்லை, குடும்பத்தில் குழப்பம், பணவரவில் தடை, தவறான பழக்க வழக்கங்களால் அவமானம் என ஏற்படும். 2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 முதல் கேது சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும், வம்பு வழக்குகள் சாதகமாகும், உடல்நிலை சீராகும், நினைத்த வேலைகள் நடந்தேறும்.
குரு சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை குருவின் பார்வைகளால் செய்துவரும் தொழில் லாபம்தரும், உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும், வீண் செலவுகள் குறையும், பணப்புழக்கம் இருக்கும், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மே 26 முதல் நீண்டநாள் கனவுகள் நனவாகும், விருப்பங்கள் பூர்த்தியாகும், வருமானம் அதிகரிக்கும், திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கமே, குருப்பார்வையுடன் பிறப்பதால் குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைக்கேற்ப, உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம், செல்வாக்கு என அவரவர் கனவுகள் நனவாகும்.
சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன், அவரவர் ராசிக்கு 3,6,10,11ம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் முன்னேற்றத்தை வழங்குவார். அந்த நிலையில், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, பங்குனி, ஆனி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதக் காலங்களிலும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதக் காலங்களிலும் உங்கள் நிலையில் உயர்வினை ஏற்படுத்துவார்.
பொதுப்பலன்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், வருமானம் உயரும், புதிய சொத்து சேரும், வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், புதிய தொழில் தொடங்கும் கனவு நனவாகும், ஆரோக்கியமாகவும், மதிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ முடியும்.
தொழில்: தொழிலில் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். உற்பத்தி அதிகரிக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பணியாளர் ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், மருத்துவம் சார்ந்த தொழில்கள், கெமிக்கல், உணவகம், ரசாயன விற்பனை, ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், வாகன விற்பனை, ட்ராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள்: வேலைப் பார்க்கும் இடத்தில் தொடர்ந்து சங்கடங்களை சந்தித்து வந்தவர்களுக்கு இனி அதில் மாற்றம் ஏற்படும், உழைப்பிற்கு ஏற்ற வருமானம் இல்லை, சலுகைகள் இல்லை என்று வருத்தப்பட்டு வந்த நிலை மாறும், உங்கள் திறமையை நிர்வாகம் அங்கீகரிக்கும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும், அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு இந்த வருடத்தில் கிடைக்கும்.
பெண்கள்: வாழ்க்கையின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தவர்களுக்கு பிறக்கும் பராபவ வருடம் நம்பிக்கையை உண்டாக்கும் வருடமாக இருக்கும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும், கணவன் மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும், வெளியூரில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைக்கும், பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும், உயர்கல்வி வேலை திருமணம் குழந்தை பாக்யம் என்று அவரவர் தேவைக்கேற்றவை பூர்த்தியாகும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், பொன் பொருள் சேரும்.
கல்வி: குரு சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் பொதுத் தேர்வின் முடிவு உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், உயர்கல்வி கனவு நனவாகும், விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை: பரம்பரை நோய், தொற்று நோய், விபத்து என்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும், ஆரோக்கியம் சீராகும் என்றாலும், ஆயுள் காரகன் சனியின் பார்வையும், கேதுவும் உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கலாம் என்பதால் வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணிகளிலும், சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது நன்மையை உண்டாக்கும்.
குடும்பம்: பெரும் புயல் வீசி ஓய்ந்ததுபோல் குடும்பத்தில் அமைதி உண்டாகும். நெருக்கடிகள் நீங்கும், தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும், புதிய இடம், வீடு நவீன பொருட்கள் வாகனம் என்று வாங்க நீண்டநாட்களாக மேற்கொண்டு வந்த முயற்சி வெற்றியாகும், பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும், அவர்களுடைய உயர்கல்வி, வேலை, திருமணத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும், குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.
பரிகாரம்: மடப்புரம் மாகாளியை வழிபட மங்கலம் உண்டாகும். மனக்கவலை விலகும்.