sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

/

ரிஷபம்

/

ரிஷபம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : ரிஷபம்
13 ஏப் 2026

முந்தைய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை: நல்ல காலம் வந்தாச்சு

ஆத்மக்காரகன் சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ ஆண்டில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும், வசதி வாய்ப்புகள் உருவாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். வேலையில், வாழ்க்கையில், தொழிலில் முன்னேற்றமான நிலை இருக்கும். வருமானம் அதிகரிக்கும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.

சனி சஞ்சாரம்: கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு விரய சனியாக சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் வகையிலும் மருத்துவத்திற்காகவும் கையிருப்பு கரையும். 2,3,4ம் பாதத்தினருக்கு வேலை, தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.

ராகு - கேது சஞ்சாரம்: 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, நவ. 13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, பணப்புழக்கத்தை அதிகரிப்பார், விருப்பங்களைப் பூர்த்தியாக்குவார். தைரியமாக நடைபோட வைப்பார். வியாபாரம் தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். பொருளாதார நிலையை உயர்த்துவார். 2,3,4ம் பாதத்தினருக்கு,  நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார், எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவார், தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார்.

குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார். அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர், 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் 1 ம் பாதத்தினருக்கு வாழ்க்கை வளமாகும். குடும்பம், தொழில் முன்னேற்றமடையும், சுப நிகழ்ச்சி நடந்தேறும். விரய சனியின் பாதிப்புகள் குறையும். 2,3,4ம் பாதத்தினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும், பொன் பொருள் சேரும், பழைய கடன்கள் அடையும், குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.

சூரிய சஞ்சாரம்: 1ம் பாதத்தினருக்கு, ஆனி, புரட்டாசி, தை, மாசி மாதங்களிலும், 2,3,4ம் பாதத்தினருக்கு, ஆடி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார், சோர்ந்து கிடந்தவர்களையும் சுறு சுறுப்பாக செயல்பட வைப்பார், வீரத்தையும் வேகத்தையும் அளிப்பார். நோய் நொடி வம்பு வழக்கு என்ற நிலைகளில் இருந்து விடுவிப்பார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றத்தையும், எதிர்பார்த்த பதவி உயர்வையும் வழங்குவார், வியாபாரம் தொழிலில் லாபத்தை உண்டாக்குவார், பணவரவை ஏற்படுத்துவார், நிம்மதியையும் சந்தோஷத்தையும் அதிகரிப்பார்.

பொதுப்பலன்: பராபவ ஆண்டு உங்கள் வாழ்வில் நன்மைகள் காணும் ஆண்டாகவே இருக்கும், உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், யோக வாசல் திறக்கும், பொன்னும் பொருளும் சேரும், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை, சொத்து, சுகம் என்ற கனவுகள் நனவாகும், அரசு பணியில் இருப்பவர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் எதிர்பார்த்த இடம் கிடைக்கும்.

தொழில்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் தடைகள் விலகும், நஷ்டத்தில் இயங்கிவந்த தொழில்களும் லாபமடையும், சிலர் புதியதாக தொழில் தொடங்குவீர். இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், அலைபேசி, சினிமா, சின்னத்திரை, யூட்யூப், பங்கு வர்த்தகம், ஆடை ஆபரணம் தொழில்கள் வளர்ச்சி அடையும்.

பணியாளர்கள்: வேலையில் இருந்த பயமும் நெருக்கடியும் நீங்கும். உங்கள் திறமைக்கும் தகுதிக்கும் உரிய மரியாதை கிடைக்கும். நிர்வாகம் உங்களைப் புரிந்து கொள்ளும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலை மீதிருந்த பயம் விலகும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்: தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வந்தவர்களுக்கு பராபவ ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். இணக்கமான நிலை ஏற்படும். உடல்நிலை மனநிலை சீராகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேரும்.

கல்வி: படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் வெளி நாடு, வெளி மாநிலம் என்றும் மேற்கல்விக்காக செல்வீர்கள்.

உடல்நிலை: பரம்பரை நோய், தொற்றுநோய், விபத்து என்று மருத்துவ மனைக்கு சென்று வந்தவர்களுக்கு பராபவ ஆண்டு ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய ஆண்டாகும்.  நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். மருத்துவ செலவு குறையும். 

குடும்பம்: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். வீடு, வாகனம், சேமிப்பு என்று வசதி அதிகரிக்கும், புதிய வாய்ப்புகள் தேடிவரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். உறவினர்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலை உயரும். பிள்ளைகளுக்கு உயர்கல்வி, திருமணம் என்ற முயற்சி வெற்றியாகும்.

பரிகாரம்: சூரியனார் கோவில் சிவசூரியனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். 

ரோகிணி: யோகமான காலம் இது

மனோகாரகன் சந்திரன், அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு மிக யோகமான காலமாக இருக்கும். இதுவரை கனவாகவே இருந்த ஒவ்வொன்றும் நனவாகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் எல்லாம் நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். 

சனி சஞ்சாரம்: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் தொட்டதெல்லாம் பொன்னாகும். நினைத்ததெல்லாம் நடந்தேறும். முடங்கிய தொழில்கள் செயல்பட ஆரம்பிக்கும். முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட பயம் போகும். எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். உத்தியோகத்தில் தோன்றிய பிரச்னைகள் முடிவிற்குவரும். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும்.

ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ஜீவன ஸ்தானத்தில் ராகு, சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். வேலைபளு கூடும். செய்துவரும் தொழில் பார்த்துவரும் உத்தியோகத்தில் நெருக்கடி இருக்கும் என்றாலும், நவ. 13 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவாலும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவாலும் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும், எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தைரியமும் தன்னம்பிக்கயும் அதிகரிக்கும், பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும், பொன் பொருள் சேரும், பழைய கடன்கள் அடையும், திருமண வயதினர் மணமேடையில் ஏறுவர், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும்.

சூரிய சஞ்சாரம்: ஆடி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களில் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கிறார் சூரியன். இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெற்றியாக்குவார், தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். வேகத்தையும் விவேகத்தையும் வழங்குவார், உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளை இல்லாமல் செய்வார், வம்பு வழக்கு என்று நீதிமன்றங்களுக்கு சென்று வந்தவர்களுக்கு வெற்றியை உண்டாக்குவார். வேலைக்காக முயற்சி செய்பவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வை வழங்குவார், வியாபாரம் தொழிலில் லாபத்தை அதிகரிப்பார், அரசியல் வாதிகள் செல்வாக்கை உயர்த்துவார். சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்படி செய்வார். எதிர்பார்த்த பதவியில் அமர வைப்பார். 

பொதுப்பலன்: பராபவ ஆண்டில் உங்களுக்கிருந்த நெருக்கடிகள், போராட்டங்கள் விலகும். பெரியோர், உறவினர் ஆதரவு உங்களை வெற்றிநடை போடவைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். கடன் வாங்கியாவது வீடு, நிலம் என்று வாங்குவீர்கள். பொன் பொருள் சேரும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

தொழில்: தொழில் காரகனான சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழில் லாபம்தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், இண்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, அழகு சாதனம், நவீன சாதனம் தயாரிப்பு, கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக்ஸ், சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம், ஆடை ஆபரணம் தொழில் முன்னேற்றமடையும்.

பணியாளர்கள்: பெரு நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்களுக்கு ஆட்குறைப்பின் காரணமாக தங்களுடைய வேலைப் பறிபோய்விடுமோ என்று பயந்து கொண்டிருந்த நிலைமாறும். உங்கள் திறமையை நிர்வாகம் புரிந்து கொள்ளும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்: லாப ஸ்தானத்தில் சனி பகவான், குடும்ப ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கும் நிலையில் பராபவ ஆண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும், குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும், ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்த நிலைமாறும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும், வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும், கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும், சிலருக்கு புதிய நட்புகள் வழியே பெயர் கெடுவதற்கு வாய்ப்பிருப்பதால் பழக்கத்தில் எச்சரிக்கை அவசியம், எதிர்பாலினரை ஓரடி விலக்கி வைப்பது நன்மையாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.

கல்வி: குரு சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் படிப்பில் அக்கறை உண்டாகும். பொதுத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் உயர் கல்விக்காக வெளிநாடு, வெளிமாநிலம் என்றும் செல்வீர்கள்.

உடல்நிலை: ஆரோக்கியத்தில் ஏதாகிலும் ஒரு குறைபாடு, அதனால் பார்க்கும் வேலையில்கூட கவனம் செலுத்த முடியவில்லை டாக்டர்... டாக்டர் என்று பார்த்தும் உடல்நிலை சரியாகவில்லை என்று வருத்தப்பட்டு வந்தவர்களின் கவலை நீங்கும். பராபவ ஆண்டில் நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். மனதில் நிம்மதி உண்டாகும். ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள்.

குடும்பம்: சனி பகவானால் லாபம், குரு பகவானால் முன்னேற்றம், கேதுவால் தைரியம் தன்னம்பிக்கை உண்டாக இருப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்குவரும். நீண்டநாள் கனவு நனவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகி ஒருவரை ஒருவர் ஆலோசித்து செயல்படும் நிலை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.  வீட்டில் மங்கல ஒசை கேட்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: திங்களூர் கைலாச நாதரை வழிபட மனம் தெளிவாகும். வாழ்க்கை வளமாகும். 

மிருகசீரிடம்: உழைப்பால் முன்னேறுவீர்கள்

தைரிய, வீரிய, பராக்கிரமக்காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ ஆண்டில் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும், பொன்னும் பொருளும் சேரும், புகழும் பெருமையும் உண்டாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் அக்கறை உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பு கூடும். வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வருமானம் கூடும். வீடு, வாகனம், ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும்.

சனி சஞ்சாரம்: மிருகசீரிடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப சனியாக சஞ்சரிப்பவர் வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார், வேலையில் உயர்வையும் நிம்மதியையும் உண்டாக்குவார், வசதி வாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும் அதிகரிப்பார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவன சனியாக சஞ்சரிப்பவர் வேலையில் நியாயமாக நடந்து கொள்பவர்களை முன்னேற்றப்பாதையில் நடைபோட வைப்பார், தவறு செய்பவர்களுக்கும் வேலையில் அக்கறை இல்லாமல் பொறுப்பற்றத்தனமாய் இருப்பவர்களுக்கும், தவறு செய்பவர்களுக்கும் மெமோ இடைநீக்கம் என்று தண்டனை அளிப்பார். சுய தொழில் செய்பவர்களுக்கு உழைப்பால் முன்னேற்றத்தை உண்டாக்குவார்.

ராகு – கேது சஞ்சாரம்: 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 வரையிலும், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, முயற்சிகளை வெற்றியாக்குவார், தைரியமாகவும் தன்னம்பிக்கையாகவும் நடைபோட வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார், தொழிற்கூடங்கள் நடத்தி வருவோருக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பையும் லாபத்தையும் அதிகரிப்பார், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை உண்டாக்குவார்.

குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். பழைய கடன்கள் அடைபடும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொன் பொருள் சேரும். திருமண வயதினருக்கு வரன் அமையும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தடைபட்ட வேலைகள் முடிவிற்குவரும், பெரியோர் ஆதரவு உண்டாகும். திருமண வயதினரின் கனவு நனவாகும். ஜீவன சனியின் பாதிப்புகள் தீரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். செய்துவரும் தொழில் லாபம் தரும்.

சூரிய சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆடி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களிலும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஆவணி, கார்த்திகை, பங்குனி, சித்திரை மாதங்களிலும் உங்கள் ராசிக்கு 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் தன்னம்பிக்கையோடு செயல்பட வைப்பார். எடுத்த வேலைகளை முடிக்க முடியும். நினைத்ததை சாதிக்க முடியும். எதிர்ப்பு போட்டி வம்பு வழக்கு என்பதெல்லாம் இல்லாமல் போகும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வேலைக்காக மேற்கோள்ளும் முயற்சி வெற்றியாகும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் விரும்பிய இடத்திற்கு மாற்றமும் ஏற்படும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும் சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும்.

பொதுப்பலன்: பராபவ ஆண்டு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும், எந்தவொரு வேலையும் நடக்கவில்லை, எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்ற நிலை மாறும், திட்டமிட்டும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவோருக்கு வருமானம் அதிகரிக்கும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தொழில்: செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும், எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், கேட்டரிங், ஆடை, ஆபரணம் மருந்தகம், கெமிக்கல், பெட்ரோல், நிதிநிறுவனம், ஷேர் மார்க்கெட் தொழில்கள் லாபமடையும், மருத்துவர்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் முன்னேற்றமடைவர்.

பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமையை உணருவார்கள். வேலையில் அக்கறை உடையவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் மேல் அதிகாரியின் ஆலோசனையின்படி செயல்படுவது நன்மையாகும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு மெமோ, இடைநீக்கம் என்ற நிலை உருவாகலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

பெண்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவது நன்மையாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். கணவருடன் இணக்கமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

கல்வி: உயர் கல்வி கனவு நனவாகும், சட்டம், மருத்துவம், பொறியியல் படிக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் விலகும், நீண்ட நாட்களாக சங்கடப்படுத்தி வந்த நோய்கள் மருத்துவத்தால் குணமாகும். மனக்குழப்பம் விலகி தெளிவு பிறக்கும்.  ஆரோக்கியமாக நடைபோட முடியும்.

குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். கையில் பணம் புழங்கும், சேமிப்பு உயரும் உதவி என்று உங்களைத்தேடி வருபவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். 

பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us