sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 15, 2026 ,சித்திரை 2, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

/

சிம்மம்

/

சிம்மம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : சிம்மம்
13 ஏப் 2026

முந்தைய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

சிம்மம்

சிம்மம்: மகம்: நிதானம் அவசியம்

ஞான மோட்சக்காரகனான கேது, ஆத்மக்காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் ஆண்டாகும். திருமணம், குழந்தை பாக்யம், படிப்பு, வேலை, சொந்த வீடு, வாகனம், பட்டம் பதவி என்ற கனவுகள் நனவாகும். ஒரு பக்கம் நெருக்கடிகள் இருந்தாலும் மறுபக்கம் அதையெல்லாம் சமாளிக்கும் அளவிற்கு உங்கள் நிலைமை இருக்கும்.

சனி சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், தனது 3,7,10 ம் பார்வைகளால் உங்கள் ராசிக்கு ஜீவன, குடும்ப, பூர்வ புண்ணிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் செய்துவரும் தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும், புதிய தொழில் தொடங்குபவர்கள் மார்க்கெட் நிலவரம் அறிந்து முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் நியாயமாக நடந்து கொள்வதும், மேல் அதிகாரியை அனுசரித்துச்செல்வதும் நன்மையளிக்கும். குடும்பத்தில் அடிக்கடி ஏதாகிலும் ஒரு பிரச்னை உருவாக வாய்ப்பிருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், வார்த்தைகளில் நிதானம் காப்பதும் நன்மையாகும். உடல்நிலையிலும் சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பதால் ஆரோக்கியம் மேம்படும். செல்வாக்கு நிலைக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ஏழாமிடத்தில் ராகு, ஜென்ம ராசிக்குள் கேது, நவ. 13 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் ராகு, விரய ஸ்தானத்தில் கேது என்று சஞ்சரிப்பதால், நவ. 13 வரை மனதில் ஏதேனும் ஒரு சங்கடம், தேவையற்ற பிரச்னைகள், பொருளாதார நெருக்கடி, கணவன் மனைவிக்குள் சச்சரவு, நண்பர்களால் சங்கடம் என்று ஏற்பட்டாலும், நவ. 13 முதல் இந்நிலை மாறும். உடல்நிலை சீராகும், ஆரோக்கியம் மேம்படும், எதிர்ப்பு வம்பு வழக்கு என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.

குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் மே 26 வரை லாப குருவாக சஞ்சரிப்பவர் பணப்புழக்கத்தை அதிகரிப்பார். செய்துவரும் தொழிலில் லாபம் காண வைப்பார். சிலருக்கு திருமணம் கூடும், குழந்தை பாக்யம் ஏற்படும், பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மே 26 முதல் விரய குருவாக சஞ்சரிப்பவர் செலவுகளை அதிகரித்தாலும் அவையெல்லாம் சுபச்செலவுகளாகவே இருக்கும். இதற்கும் மேலாக, அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும் தனது பாக்ய பார்வையால் பார்ப்பதால் அஷ்டம சனியின் பாதிப்பு உங்களை நெருங்காமல் போகும், குடும்பத்திலும், தொழிலிலும் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். செல்வாக்கு உயரும். வீடு, வாசல், வாகனம் என்ற தேவைகள் பூர்த்தியாகும். படிப்பு, வேலை என்ற கனவுகள் நனவாகும். பட்டம், பதவி என்ற ஆசைகள் பூர்த்தியாகும். வியாபாரம், தொழில் லாபமடையும், பொருளாதார நிலை உயரும்.

சூரிய சஞ்சாரம்: உங்கள் ராசியாதிபதியான சூரியன் ஒவ்வொரு ராசியினருக்கும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் அந்தந்த பாவகங்களுக்குரிய பலன்களை யோகப்பலன்களாக வழங்கிடக்கூடியவர். இந்த ஆண்டில் ஐப்பசி, தை, வைகாசி, ஆனி மாதங்களில் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும், முயற்சிகள் சாதகமாகும், தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும், உடல்நிலை சீராகும், போட்டி, பகை என்பதெல்லாம் விலகும், இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் சாதகமாகும், வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும், வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு திறமைக்குரிய வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். மூடி வைத்த தொழில்களை மீண்டும் திறப்பதற்குரிய நிலை உருவாகும். வருமானம் அதிகரிக்கும், பொருளாதார நிலை உயரும், அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள், அனுமதி, ஆதரவு கிடைக்கும்.

பொதுப்பலன்: பராபவ ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவைப் பார்ப்பதுடன், மே 26 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும் பார்க்கிறார், நவ. 13 முதல் ராசியை விட்டு கேது விலகுவதுடன் சத்ரு ஜெய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கப்போவதால், உங்கள் முயற்சிகள் வெற்றியாகும், எடுக்கும் வேலைகள் லாபம்தரும், வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும்,  நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். உடல்நிலை சீராகும். வழக்கு ஜெயமாகும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். செல்வம் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். வயதானவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும், இத்தனை நாளும் இருந்த நெருக்கடிகள் விலகும்.

தொழில்: தொழில் காரகன் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் வீழ்ச்சி அடைந்த தொழில் வளர்ச்சி அடையும், மூடி வைத்த தொழில்கள் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஐ.டி., ஏ.ஐ., கால்நடை, இயந்திரத் தொழில், மருத்துவம், மெடிக்கல், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட், ஹார்ட்வேர், ஷேர் மார்க்கெட், சினிமா, சின்னத்திரை, ஜுவல்லரி, ஆடை ஆபரணத் தொழில்கள், செய்தித்தாள், மீடியா, காலண்டர், டைரி, தனியார் பள்ளிகள் முன்னேற்றம் அடையும். லாபம் காணும்.

பணியாளர்கள்: பராபவ ஆண்டு பணியாளர்களுக்கு நன்மையான ஆண்டாக இருக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்ப்பான பி.ஆர். கிடைக்கும். வேலையின் மீதிருந்த பயம் போகும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைக்கும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் தேடிவரும். பகுதி நேரமாக வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

பெண்கள்: உடல் நிலையிலும் மன நிலையிலும் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். எந்த ஒன்றையும் சமாளிக்கும் அளவிற்கு சக்தி உண்டாகும். தனித்தன்மை வெளிப்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட இடைவெளி விலகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு தொழில் மீது அக்கறை அதிகரிக்கும் எதிர்பார்த்த லாபம் வரும். பொன் பொருள் சேரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

கல்வி: குருப் பார்வைகள் சாதகமாக இருப்பதால் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். மேல்நிலையில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு என்றும் செல்வீர்கள்.

உடல்நிலை: அஷ்டம சனி உங்களை பயமுறுத்தினாலும், குருப் பார்வைகள், செவ்வாய் சஞ்சாரம், நவ. 13 முதல் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவார், உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும், தொற்று நோய் இயற்கை வைத்தியத்தால் குணமாகும், ஆரோக்கியமாக வாழும் நிலை உண்டாகும் என்றாலும், வாகனப்பயணத்தில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும்.

குடும்பம்: வருடத்தின் தொடக்கத்தில் பூர்வ புண்ணியாதிபதி குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். சொந்த இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உறவினர் மத்தியில் செல்வாக்கோடு வாழும் நிலை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.

பரிகாரம்: ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமியை வழிபட உடல்நிலையில் ஏற்பட்ட பயம் போகும்.

பூரம்: சவாலே சமாளி

அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், ஆத்மக்காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும். உடல்நிலையிலும் மன நிலையிலும் அடிக்கடி பின்னடைவு ஏற்பட்டாலும் அதில் மாற்றமும் ஏற்படும். எதிர்பார்த்த முன்னேற்றமும் உண்டாகும். பூரத்தானுடன் போர் செய்யாதே என்ற வார்த்தைக்கேற்ப இந்த வருடத்தில் உங்களுடன் யாரும் போட்டியிட்டு வெல்ல முடியாமல் போகும். எந்தநிலை வந்தாலும் அதை சமாளித்து உங்கள் இலக்கை அடைந்து விடுவீர்கள். லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கும் நிலையில் வருடம் தொடங்குவதால் திருமணம், குழந்தை பாக்யம், படிப்பு, வேலை, சொந்த வீடு, வாகனம், பட்டம், பதவி என்ற கனவுகள் நனவாகும்.

சனி சஞ்சாரம்: பராபவ ஆண்டு முழுவதும் மீன ராசிக்குள் அஷ்டம சனியாக சஞ்சரிப்பவர் உங்கள் முயற்சிகளில் தடைகளையும், செயல்களில் சங்கடத்தையும், உடல்நிலையில் பாதிப்பையும் ஏற்படுத்துவதுடன் பொருளாதார நிலையிலும் பின்னடைவை உண்டாக்குவார், செல்வாக்கிற்கு சோதனையையும், தொழிலிலும், குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலையினையும் உண்டாக்குவார், உத்தியோகத்தில் பயத்தையும், எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற பதட்டையும் ஏற்படுத்துவார் என்பது ஸ்தான மற்றும் பார்வைகளின் பலன்களாக இருந்தாலும், மே 26 முதல் அஷ்டம சனிக்கு குருப்பார்வை கிடைப்பதாலும், ஜூலை 15 - நவ.30 காலத்தில் வக்கிரம், 2027 மார்ச் 25 முதல் அஸ்தமனம் என்ற நிலையினை அடைவதாலும் பராபவ ஆண்டில் அஷ்டம சனியின் பாதிப்புகள் என்பது தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் போய்விடும். பெருமளவிற்கு சனி உங்களைப் பாதிக்கமாட்டார்.

ராகு - கேது சஞ்சாரம்: கிரகங்களில் யோகத்தைக் கொடுக்கின்ற ராகுவும், ஞானத்தைக் கொடுக்கின்ற கேதுவும் நவ. 13 வரை ராசிக்குள்ளும் சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், ஒரு பக்கம் ஆசைகள் அதிகரிக்கும், சொத்து சேர்ப்பதிலும் சுகம் தேடுவதிலும் பணம் சம்பாதிப்பதிலும் மனம் செல்லும், மறுபக்கம் அதனால் சங்கடங்களும், கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகளும் ஏற்படும். என்றாலும் நவ. 13 முதல் இந்த நிலை மாறும், சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகும் ராகு உங்கள் நிலையை உயர்த்துவார், ஆரோக்கியமாக நடைபோட வைப்பார், போட்டி பகை என்பதையெல்லாம் இல்லாமல் செய்வார், வழக்கில் சிக்கியவர்களை விடுவிப்பார்.

குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027. பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் வருடத்தின் தொடக்கமே லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவுடன் தொடங்குகிறது. அங்கிருந்து மே 26 வரை 3,5,7 ம் இடங்களைப் பார்ப்பவர், பொருளாதார நிலையை உயர்த்துவார், வியாபாரம் தொழிலில் ஆதாயத்தை அதிகரிப்பார், திருமண வயதினரின் கனவை நனவாக்குவார், குழந்தை பாக்யத்திற்காக ஏங்கியோரின் ஏக்கத்தை தீர்த்து வைப்பார், பிள்ளைகளால் பெருமையை உண்டாக்குவார். மே 26 முதல் விரய குருவாக சஞ்சரிப்பவர் 4,6,8 ம் இடங்களைப் பார்ப்பதால் அஷ்டம சனியின் பாதிப்புகள் உங்களை நெருங்காமல் போகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும், நோய்நொடி வம்பு வழக்கு என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும், வீடு, வாகனம், பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் என்று சுபச்செலவுகள் ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்: ராசிக்கு 3,6,10,11 ம் இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும் காலங்களில் அந்தந்த பாவகங்களுக்குரிய பலன்களை யோகப்பலன்களாக வழங்குவார். மற்ற கிரகங்கள் வருடம் முழுவதும் எதிர்மறையாக சஞ்சரித்தாலும் வருடத்தில் 120 நாட்கள் சூரியனின் சஞ்சாரம் ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் முன்னேற்றத்தை உண்டாக்கும். அந்த வகையில் இந்த ஆண்டில் ஐப்பசி, தை, வைகாசி, ஆனி மாதங்களில் சூரியனின் சஞ்சாரங்களால் அரசு வழி முயற்சிகள் வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த வருமானம் வரும், நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபம்தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும், வெளிநாட்டில் தற்காலிகமாக குடியிருந்து வருபவர்களுக்கு நிரந்தர குடியுரிமைக் கிடைக்கும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தகுதிக்குரிய வேலைக்கிடைக்கும், அரசியல் வாதிகளுக்கும், பொதுநலப்பணியாளர்களுக்கும் செல்வாக்கு உயரும். வம்பு வழக்குகள் ஜெயமாகும்.

பொதுப்பலன்: பராபவ ஆண்டு உங்கள் முயற்சிக்குரிய பலன்கள் கிடைக்கும் ஆண்டாக இருக்கும். குரு சஞ்சாரங்கள், பார்வைகளுடன் நவ.13 முதல் ராகுவும் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தை எட்டுவீர்கள். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள். ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள், வழக்கு விவகாரங்களில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பட்டம், பதவி, அந்தஸ்து என்ற லட்சியத்தை எட்டுவீர்கள்.

தொழில்: ஜீவன ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். பிறரை நம்பி செயல்பட்ட நிலைமாறி உங்களுடைய நேரடி கண்காணிப்பில் ஒவ்வொன்றையும் நடத்துவீர்கள். ஜுவல்லரி, பேன்சி ஸ்டோர், அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆடை வணிகம், கவரிங் நகைகள், வாகன விற்பனை, உதிரி பாகங்கள் விற்பனை, பியூட்டி பார்லர், ஸ்பா, உடற்பயிற்சி கூடங்கள், சின்னத்திரை, சினிமா, யூட்யூம் தொழில்கள் லாபம் தரும்.

பணியாளர்கள்: பராபவ ஆண்டு உங்களுக்கு பரோபகார ஆண்டாக இருக்கும். வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். ஆட்குறைப்பு செய்வதின் காரணமாக நம்முடைய வேலையும் பறிபோய்விடுமோ! கடன்களை எப்படி அடைப்பது? குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என்று ஒவ்வொரு நாளும் பயந்து கொண்டிருந்தவர்களின் வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு சம்பளம் உயரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள், மறைமுகத் தொல்லைகள் விலகும். வேலையில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

பெண்கள்: அஷ்டம சனிக்காலம் என்றாலும், குரு சஞ்சாரங்களுடன் பார்வைகளும், நவ. 13 முதல் ராகுவும் சாதகமாக இருப்பதால் உயர்கல்வி, வேலை, திருமணம் என்ற கனவுகள் நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு விலகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். சுயதொழில் செய்பவர்களுக்கு தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். பொன் பொருள் சேரும்.

கல்வி: பொதுத்தேர்விலும் போட்டித் தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்விக்காக விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும் சிலர் வெளி மாநிலம் வெளிநாடு என்றும் செல்வீர்கள். மருத்துவம், சட்டம், இன்ஜினியரிங் என்ற விருப்பம் நிறைவேறும்.

உடல்நிலை: தொற்றுநோய், பரம்பரைநோய், விபத்து என்று மருத்துவமனையிலும், தொடர் சிகிச்சையிலும் இருந்து வந்தவர்களுக்கு ஆரோக்கியம் சீராகும், சித்தா, ஆயுர்வேதா மருத்துவத்தால் சிலர் பழைய நிலைக்கு வருவீர்கள் என்றாலும் இயந்திரப்பணியிலும், வாகனம் இயக்குவதிலும், மின்சாரம் தொடர்பான வேலைகளிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும்.

குடும்பம்: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும் வருடத்தின் தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும், புதிய சொத்து சேரும், தம்பதிகளுக்குள் இணக்கமான நிலை ஏற்படும், நீண்ட நாள் கனவுகள் நனவாகும், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம் என்ற எண்ணங்கள் பூர்த்தியாகும். பிள்ளைகள் நலனின் அக்கறை அதிகரிக்கும்.

பரிகாரம்: கபாலீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் உண்டாகும்.

உத்திரம்: செயல்களில் கவனம்

ஆத்மக்காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ வருடத்தில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு பக்கம் பிரச்சனை போராட்டம் என்ற நிலை இருந்தாலும், மறுபக்கம் அதையெல்லாம் சமாளித்திடக்கூடிய நிலை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் தொழில்கள் முன்னேற்றமடையும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நட்புகளால் பிரச்னைகளை சந்திக்க நேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். உங்களுக்குரிய இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அதிக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்றாலும் நினைத்ததை சாதிக்கும் வலிமையும் உண்டாகும்.

சனி சஞ்சாரம்: உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பராபவ ஆண்டு முழுவதும் அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் மறைமுகத் தொல்லைகள் அதிகரிக்கும். உடல்நிலையில் அவ்வப்போது ஏதேனும் சங்கடம் வெளிப்படும். வியாபாரம் தொழிலில் நெருக்கடியும் போராட்டமான நிலையும் இருக்கும். உத்தியோகத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். வரவு இழுபறியாகும். குடும்பத்தினருடன் ஒரு இடைவெளி ஏற்படும். எதிரிகள் விரிக்கும் சூழ்ச்சி வலையில் சிக்க நேரும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கண்டக சனிக்காலம் என்பதால் கூண்டில் சிக்கிய புலியாக சங்கடப்படுவீர்கள். குடும்பத்தினரும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள். நன்றாகப் பழகி வந்தவர்களும் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். வேகமாகவும் திறமையாகவும் செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக்கூடிய உங்களால் முன்புபோல் இப்போது செயல்பட முடியாமல் போகும்.  இருந்தாலும், மே 26 முதல் சனிக்கு குருப்பார்வை கிடைப்பதாலும், ஜூலை 15 - நவ.30 காலத்தில் வக்கிரம், 2027 மார்ச் 25 முதல் அஸ்தமனம் என்ற நிலையினை அடைவதாலும் சனி பகவானால் உண்டாகும் பாதிப்புகள் குறையும்.

ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை அனைத்திலும் போராட்டம் நெருக்கடி என்றிருந்தாலும் அதன்பின் நிலைமாறும். நினைத்ததை சாதித்து முடிக்கும் வலிமை உண்டாகும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை ராகு ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதாலும், அதன்பிறகு கேது பதினொன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதாலும் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்ற நிலை உண்டாகும். செல்வாக்கு, அந்தஸ்து, பொன், பொருள், வீடு வாசல் என்று பராபவ ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும்.

குரு சஞ்சாரம்: உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் வரவு அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அதன்பின் வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் போராட்டமான நிலை இருந்தாலும் அதன்பின் நிலைமை சீராகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பம், தொழில், உத்தியோகம், நட்பில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும், வரவு அதிகரிக்கும் வசதி வாய்ப்புகள் உருவாகும்.

சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன் ஒவ்வொரு ராசியினருக்கும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த ராசியினருக்கு யோகப் பலன்களை வழங்கிடக்கூடியவர் என்பதால், உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ஐப்பசி, தை, வைகாசி, ஆனி ஆகிய நான்கு மாதங்களும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, கார்த்திகை, மாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்களும் சூரியனின் சஞ்சாரங்களால் எடுத்த வேலைகளில் வெற்றியுண்டாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும், வசதி வாய்ப்பு, செல்வாக்கு, அந்தஸ்து, ஆரோக்கியம், எதிர்பார்த்த உயர்வு உண்டாகும்.

பொதுப்பலன்: பராபவ வருடம் உங்களுடைய நீண்டநாள் கனவுகள் நனவாகும் வருடமாக இருக்கும். முயற்சிக்குரிய பலன்கள் கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பம், தொழில், வேலையில் நிம்மதியான நிலை உண்டாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம், பட்டம், பதவி என்று வாழ்க்கை வளமாகும்.

தொழில்: தொழிலில் அக்கறை அதிகரிக்கும். உங்கள் முயற்சியால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். விற்பனை கூடும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசுவழி காண்ட்ராக்ட் கிடைக்கும், ஷேர் மார்க்கெட் முன்னேற்றமடையும், ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். ட்ராவல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம் சார்ந்த தொழில்கள், வாகன விற்பனை, சின்னத்திரை, சினிமா, யூட்யூப், ஏ.ஐ, தொழில்கள் வளர்ச்சி அடையும்.

பணியாளர்கள்: வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வரும் சிலருக்கு பி.ஆர். கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் ஏற்படும்.

பெண்கள்: படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற வாழ்வின் தேவைகள் பூர்த்தியாகும். கணவருடன் இணக்கமான நிலை இருக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

கல்வி: வாழ்க்கையின் ஆதாரம் படிப்பு மட்டும்தான் என்பதை உணர்வீர்கள். படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும். தேர்வு முடிவுகள் மகிழ்ச்சிதரும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: உடல்நிலையில் திடீர் திடீரென பின்னடைவு ஏற்பட்டாலும் அவை மருத்துவத்தால் சீராகும். நீண்டநாட்களாக தொந்தரவுகள் கொடுத்துவந்த பரம்பரை நோய், தொற்று நோய்கள் சித்தா, ஆயுர்வேதா மருத்துவத்தால் குணமாகும். ஆரோக்கியம் மேம்படும்.

குடும்பம்: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்குவரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். தன் குடும்பம், தன் பிள்ளை என்ற எண்ணம் உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் என்று வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழும் நிலை உண்டாகும்.

பரிகாரம்: அமிர்த கடேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us