sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 15, 2026 ,சித்திரை 2, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

/

மீனம்

/

மீனம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : மீனம்
13 ஏப் 2026

முந்தைய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

மீனம்

மீனம்: பூரட்டாதி: நிதானம் அவசியம்

தன, புத்திரக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3ம் பாதங்களான கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும், 4ம் பாதமான மீன ராசியில் பிறந்தவர்களுக்கு குருவே ராசிநாதனாகவும் உள்ளனர். 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குருப்பார்வையுடன் வருடம் பிறப்பதால் வாழ்க்கை வளமாகும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், பொன்னும் பொருளும் சேரும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய ஸ்தான கேதுவால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும், ஆரோக்கியம் மேம்படும், செல்வாக்கு உயரும்.

சனி சஞ்சாரம்: பூரட்டாதி 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல்நிலை சீராகும், வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும், வருமானம் அதிகரிக்கும், விருப்பங்கள் பூர்த்தியாகும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகள் குறையும், சேமிப்பு உயரும் என்றாலும் நட்பு வட்டத்தில் விரிசல் ஏற்படும்,  வாழ்க்கைத் துணையுடன் இணக்கமற்ற நிலை உண்டாகும், செய்துவரும் தொழிலிலும் பார்த்துவரும் வேலையிலும் போராட்டமான நிலை இருக்கும் என்பதால் அனைத்திலும் நிதானம் அவசியம்.

ராகு - கேது சஞ்சாரம்: நவ.13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து, அதன்பின் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, நவ. 13 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது செல்வாக்கை உயர்த்துவார், நினைத்ததை சாதிக்கும் நிலையை உருவாக்குவார், நோய் நொடி வம்பு வழக்குகள் இல்லாமல் வாழவைப்பார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ. 13 வரை சத்ரு ஜெய ஸ்தான கேதுவும், அதன்பின் லாப ஸ்தான ராகுவும் வெற்றிமேல் வெற்றிகளை உண்டாக்குவர், வருமானத்தை அதிகரிப்பர், நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடித்திடக்கூடிய வலிமையை உண்டாக்குவர், சூழ்நிலைகளை சாதகமாக்குவர்.

குரு சஞ்சாரம்: 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடம் பிறக்கும்போது குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் ராசியையும் பார்ப்பதால் வருடத்தின் தொடக்கமே சாதகமாக இருக்கிறது, குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும், பணம், பட்டம், பதவி, செல்வாக்கு, அந்தஸ்து என்ற நிலை உருவாகும், மே 26 முதல் குருவின் பார்வைகளால் வியாபாரம் தொழில் லாபமடையும், வீண் செலவுகள் கட்டுப்படும், பாத சனியால் ஏற்படும் பாதகங்கள் விலகும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதியில் எடுத்த வேலைகள் வெற்றியாகும், உடல்நிலை சீராகும், வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும், வீண் செலவுகளும் அலைச்சலும் குறையும். மே 26 முதல் ஐந்தாமிடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் ஜென்ம சனியின் பாதிப்புகள் விலகும், உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும், செல்வாக்கு அந்தஸ்து உயரும், குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.

சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகன் சூரியன் ஒவ்வொரு ராசியினருக்கும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த ஜாதகருக்கு சங்கடங்கள் விலகி நன்மைகள் நடக்கும், யோகப் பலன்கள் உண்டாகும், பட்டம் பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, தொழில், உத்தியோகம் என்ற முயற்சிகள் வெற்றியாகும், அந்த நிலையில் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதங்களும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வைகாசி, ஆவணி, மார்கழி, தை ஆகிய நான்கு மாதங்களும் நினைத்த காரியம் நடந்தேறும், எடுத்த வேலைகள் வெற்றியாகும். 

பொதுப்பலன்: குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும், ராகு, கேதுவும் பராபவ வருடத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் விலகும், போராட்ட நிலை மாறும், பணப்புழக்கம் அதிகரிக்கும், பொன்பொருள் சேரும், குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும், வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், வாழ்க்கை வளமாகும்.

தொழில்: தொழில்மீது அக்கறை அதிகரிக்கும், திட்டமிட்டு செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள், தொழிலாளர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். ஜுவல்லரி, ஆடை வர்த்தகம், சிறு குறு நிறுவனங்கள், பெரு வணிகம், நிதி நிறுவனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் ஃபார்ட்ஸ் தயாரிப்பு, ஃபேக்டரி, ட்ராவல்ஸ், எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர், ஏற்றுமதி இறக்குமதி, ஏ.ஐ., ஆன்லைன் வர்த்தகம் லாபம்தரும்.

பணியாளர்கள்: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் பிரச்சனைகள் முடிவிற்கு வரும், சிலருக்கு வெளி நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும், திறமைக்குரிய அங்கீகாரமும் எதிர்பார்த்த ஊதியமும் சலுகைகளும் கிடைக்கும், அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும்.

பெண்கள்: மங்களக்காரகன் குருவும், சர்ப்ப கிரகங்களான ராகு, கேதுவும் வருடம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும், இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும், குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும், வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும், சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும், பிள்ளைகளால் பெருமை உண்டாகும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், பொன் பொருள் சேரும். 

கல்வி: பொது மற்றும் போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைப்பதுடன், விரும்பிய கல்லூரியில் எதிர்பார்த்த பாடப் பிரிவில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: ஆயுள் காரகன் சனி பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் உங்களுக்கு அவ்வப்போது சில சங்கடங்களை ஏற்படுத்தும் என்றாலும் குருப்பார்வைகளும், கேதுவின் சிம்ம, கடக சஞ்சாரங்களும் உங்களைப் பாதுகாக்கும், பெரிய அளவில் பயமுறுத்திய நோய்களும் மருத்துவத்திற்கு கட்டுப்படும். ஆரோக்கியம் மேம்படும், சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள்.

குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், புதிய இடம் வீடு வாகனம் பொன் பொருள் என்ற முயற்சி வெற்றியாகும், தம்பதிகளிடம் இணக்கமான நிலை உண்டாகும், வீட்டில் மங்கல ஒலி கேட்கும், பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், வெளி வட்டாரத்தில் செல்வாக்குடன் வாழ்வீர்கள்.

பரிகாரம்: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை வழிபட தடைகள் விலகும், நன்மைகள் நடக்கும்.

உத்திரட்டாதி: விருப்பம் பூர்த்தியாகும்

கர்மக்காரகனான சனி, தன புத்திரக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாகவே இருக்கும். சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் இந்த ஆண்டில் உங்கள் நிலையை உயர்த்துவர், இதை நாமா செய்து முடித்தோம்! இதை நாமா சாதித்தோம்! என்று நீங்களே ஆச்சரியப்படும் வகையில் உங்களுடைய முன்னேற்றம் இருக்கும்.

சனி சஞ்சாரம்: ஏழரை சனிக்காலத்தில் இப்போது ஜென்ம சனியாக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் சனிபகவான். நீங்கள் பிறந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான்தான் என்றாலும், கோச்சார பயணத்தில் அவர் ஜாதகருக்கு வழங்கிடக்கூடிய பலன்களை வழங்குபவர் என்பதால், நண்பர்களுக்கும் உங்களுக்கும் பிரச்சனைகள் உருவாகும், வாழ்க்கைத் துணையுடன் இணக்கமற்ற நிலை ஏற்படும், உத்தியோகத்தில் தேவையற்றப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும், தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காமல் போகும் என்பது பொதுப்பலனாக இருந்தாலும், மே.26 முதல் சனி பகவானை ராசி நாதன் குரு பார்ப்பதால் இந்த நிலைகளில் மாற்றம் ஏற்படும்.

ராகு - கேது சஞ்சாரம்: நவ.13 வரை சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்களை வலிமை மிக்கவராக நடைபோட வைப்பார், எதிர்ப்பு, போட்டி, வழக்கு, நோய் என்பதெல்லாம் உங்களைக்கண்டு விலகிச்செல்லும். நவ. 13  முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் ஆசைக்கனவுகளை நனவாக்குவார், பொருளாதார நிலை உயரும், நட்பின் வழியே நன்மைகள் அதிகரிக்கும், சந்தோஷம் உண்டாகும், வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறு வாழ்க்கைத்தொடங்கும்.

குரு சஞ்சாரம்: வருடத்தின் தொடக்கத்தில் அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களை குரு பார்ப்பதால் உங்களுக்கு எதிரான சதிகளை முறியடிப்பீர்கள், உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும், தொழில் லாபம்தரும், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும், விரய செலவுகளும் அலைச்சலும் குறையும். மே.26 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசியையும் பார்ப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும், எடுத்த வேலைகள் வெற்றியாகும், சிலருக்கு காதல் ஏற்படும், கல்யாணம் நடந்தேறும், சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும், சிலருக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும், பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும், சமூகத்தில் செல்வாக்கோடு வாழும் நிலை உருவாகும்.

சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகன் சூரியன் ஒவ்வொரு ராசியினருக்கும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த அந்த ராசியினருக்கு யோகப்பலன்களை வழங்குவார், அந்த நிலையில் வைகாசி, ஆவணி, மார்கழி, தை ஆகிய நான்கு மாதங்களும் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும், அரசுவழி வேலைகள் சாதகமாகும், சுய தொழில், அரசுவேலை என்ற கனவு நனவாகும்.

பொதுப்பலன்: சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரங்களும், ராசிநாதன் குருவின் நிலைகளும், நான்கு மாதங்கள் சூரியனும் உங்கள் வாழ்க்கையை வளமாக்குவர். நினைத்ததை எல்லாம் நடத்திக்கொள்ளக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். செல்வாக்கும் செல்வ செழிப்பும் ஏற்படும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வாழ்க்கையின் அடிப்படைகள் பூர்த்தியாகும் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.

தொழில்: தொழில்காரகன் சனி பகவான் ராசிக்குள் அமர்ந்து தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பதால், செய்துவரும் தொழில்மீது அக்கறை உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் வரும். நிதி நிறுவனம், ஜுவல்லரி, பங்கு வர்த்தகம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், ட்ராவல்ஸ், ஹார்ட்வேர், மென்பொருள், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபம் தரும்

பணியாளர்கள்: வேலையின்மீது அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு புதிய பொறுப்பினை நிர்வாகம் வழங்கும். வேலைபளு அதிகரித்தாலும் அதற்கேற்ற ஆதாயம்வரும். அரசு பணியில் இருப்பவர்கள் தங்களுடைய வரம்பிற்குள் செயல்படுவது நன்மையளிக்கும். சிபாரிசு, கவனிப்பு போன்றவற்றிற்கு இடம் கொடுக்காமல் செயல்படுபவர்களுக்கு வேலையில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். 

பெண்கள்: ராசிக்குள் சனிபகவான் சஞ்சரிப்பதால் சில சங்கடங்களை நீங்கள் சந்திக்க வேண்டியதாக இருக்கும். உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவைப்படும். புதிய நட்புகளிடமிருந்து ஓரடி விலகி இருப்பது நன்மையாகும். எந்த ஒன்றாக இருந்தாலும் அதை நன்றாக யோசித்து அதன் பிறகு முடிவிற்கு வருவதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும். திருமணம், மறுமணம், வீடு வாகனம் என்ற கனவுகள் நனவாகும். சுய தொழில் செய்து வருபவர்கள் புதிய முதலீடுகளில் கவனமாக இருப்பது நன்மையாகும். 

கல்வி: பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைக் கேட்டு கல்லூரியை தேர்வு செய்வது நன்மையாகும்.

உடல்நிலை: உடல்நிலையில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் தோன்றும், கவனிக்காமல் விட்டுவிட்ட நோய்கள் வீரியமடையும், பரம்பரை நோய்கள் மீண்டும் தலைதூக்கும் என்றாலும் ஆறாமிட கேதுவும், குருப்பார்வைகளும் நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும், மருத்துவத்தால் ஆரோக்கியம் மேம்படும்.

குடும்பம்: கடல் அளவு சங்கடங்களை எல்லாம் பார்த்துவிட்ட உங்களுக்கு பராபவ வருடத்தில் வரும் சங்கடங்கள் கடுகளவாகவே இருக்கும். அதுவும் உங்களுடைய முயற்சிகளால் இருந்த இடம் தெரியாமல் போகும். சொந்த இடம் வீடு வாகனம் என்ற கனவுகள் நனவாகும், பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும், பொன் பொருள் சேரும், மதிப்பு மரியாதை அதிகரிக்கும், வீட்டிற்குள் புதிய உறவு வரும்.

பரிகாரம்: நெல்லையப்பரை வழிபட சங்கடங்கள் விலகும், நன்மைகள் நடக்கும்.

ரேவதி: தொழிலில் கவனம்

வித்யாகாரகனான புதன், தன புத்திரக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் முன்னேற்றமான வருடமாக இருக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும், பண வரவு அதிகரிக்கும். புதிய சொத்து சேரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சனி சஞ்சாரம்: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி சஞ்சரிப்பதால், வேகமாக செயல்பட்டுவந்த உங்களிடம் ஒரு மந்த நிலை ஏற்படும். தனது மூன்றாம் பார்வையால் உங்கள் தைரியத்தை அதிகரிப்பார், துணிச்சலுடன் நடைபோட வைப்பார், சப்தம பார்வையால் வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்துவார், நன்றாகப்பழகி வந்தவர்களையும் விரோதியாக்குவார், பத்தாம் பார்வையால் செய்துவரும் தொழிலில் அக்கறையை அதிகரிப்பார். என்றாலும், மே.26 முதல் சனி பகவானை ராசி நாதன் குரு பார்ப்பதால் இந்த நிலைகளில் மாற்றம் ஏற்படும். சனி தரும் சங்கடங்கள் விலகும்.

ராகு - கேது சஞ்சாரம்: நவ.13 வரை சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் செல்வாக்கை அதிகரிப்பார், அரசியல் வாதிகளுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார், நோய்நொடி என்று வாழ்ந்து வந்தவர்களை ஆரோக்கியமாக நடைபோட வைப்பார், வயதானவர்கள் மனதில் நம்பிக்கையை அதிகரிப்பார், வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார், எதிர்ப்பு, போட்டி, வழக்கு என்று சங்கடப்பட்டு வந்த நிலையில் மாற்றத்தை உண்டாக்குவார். நவ. 13  முதல் யோகக்காரகன் ராகு, லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும், வரவேண்டிய பணம் வரும், புதிய முயற்சிகள் வெற்றியாகும், பொருளாதார நிலை உயரும், புதிய சொத்து சேரும், பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.

குரு சஞ்சாரம்: வருடத்தின் தொடக்கத்தில் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களைப் பார்ப்பதால் உழைப்பு அதிகரிக்கும், அதே நேரத்தில் அதற்குரிய ஆதாயமும் கிடைக்கும், உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும், வியாபாரம் தொழில் லாபம்தரும், உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும், விரய செலவுகள், அலைச்சல் கட்டுப்படும். மே.26 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும், பணவரத்து இருக்கும், புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும், அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும், செல்வாக்கு உயரும், எடுத்த வேலைகள் வெற்றியாகும், உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும்.

சூரிய சஞ்சாரம்: ஆத்மகாரகன் சூரியன் வைகாசி, ஆவணி, மார்கழி, தை ஆகிய நான்கு மாதங்களும் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், எதிர்ப்பு, நோய், பகை, வழக்கு என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும், பணவரவு இருக்கும், பொருளாதார நிலை உயரும், அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். 

பொதுப்பலன்: பராபவ வருடம் உங்கள் வாழ்வில் முன்னேற்றமான வருடமாகும், இதுவரை தடைபட்டிருந்த வேலைகள் முடிவிற்குவரும், தைரியமாகவும் தன்னம்பிக்கையோடும் நடைபோடுவீர்கள், வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும், லாபம் வரும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும், அரசு வேலை, சுய தொழில், வீடு வாசல் என்ற கனவுகள் நனவாகும்.

தொழில்: வருடத்தின் தொடக்கத்தில் தொழில் சுமாராக இருந்தாலும், அதன்பிறகு முன்னேற்றம் அடையும், எதிர்பார்த்த லாபம் வரும். பங்கு வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி, நிதி நிறுவனம், ஜுவல்லரி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், காண்ட்ராக்ட், பதிப்பகம், அச்சகம், செய்தித்தாள், தனியார் பள்ளிகள், ஆன்லைன் வர்த்தகம், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சிபெறும்.

பணியாளர்கள்: பெரிய நிறுவனங்களில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும், சிலருக்கு புதிய பொறுப்பும் சம்பள உயர்வும் கிடைக்கும், வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு  மனதில் நிம்மதி உண்டாகும், அரசு பணியாளர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வரும், சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள்: உடல் நிலையிலும் மன நிலையிலும் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும், உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும், குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும், கணவருடன் இணக்கமான நிலை உண்டாகும், சிலருக்கு மறுமணம் நடக்கும் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும், பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும்.

கல்வி: உயர்கல்வி கனவு நனவாகும். எதிர்பார்த்த பாடப்பிரிவில் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும். சிலர் வெளிமாநிலம் வெளிநாடு என்றும் மேற்கல்விக்காக செல்வீர்கள்

உடல்நிலை: உடல்நிலையில் தொடர்ந்து சங்கடத்தை அனுபவித்து வந்தவர்களுக்கு இந்த வருடம் அவற்றில் இருந்து மாற்றம் கிடைக்கும் வருடமாக இருக்கும், நரம்புக் கோளாறு, ரத்தக் குழாய் அடைப்பு, சுவாச பிரச்சனை, தொற்றுநோய், பரம்பரை நோய் என சங்கடப்பட்டு வந்த நிலை மாறும், சித்தா ஆயூர்வேதா மருத்துவம் சிலருக்கு கை கொடுக்கும், ஆரோக்கியம் மேம்படும்.

குடும்பம்: குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவிற்குவரும், கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உருவாகும். பிள்ளைகள் உங்கள் நிலையறிந்து நடந்து கொள்வர், படிப்பில் முன்னேற்றம் அடைவர், கடன் பட்டாகிலும் சொந்த வீடு வாகனம் வாங்குவீர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்வீர்கள், சிலருடைய வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மனதில் நிம்மதி உண்டாகும்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் நடக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us