sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 15, 2026 ,சித்திரை 2, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

/

கன்னி

/

கன்னி

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : கன்னி
13 ஏப் 2026

முந்தைய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

கன்னி

கன்னி: உத்திரம்: செயல்களில் கவனம்

ஆத்மக்காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ வருடத்தில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு பக்கம் பிரச்சனை போராட்டம் என்ற நிலை இருந்தாலும், மறுபக்கம் அதையெல்லாம் சமாளித்திடக்கூடிய நிலை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் தொழில்கள் முன்னேற்றமடையும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நட்புகளால் பிரச்னைகளை சந்திக்க நேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். உங்களுக்குரிய இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அதிக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்றாலும் நினைத்ததை சாதிக்கும் வலிமையும் உண்டாகும்.

சனி சஞ்சாரம்: உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பராபவ ஆண்டு முழுவதும் அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் மறைமுகத் தொல்லைகள் அதிகரிக்கும். உடல்நிலையில் அவ்வப்போது ஏதேனும் சங்கடம் வெளிப்படும். வியாபாரம் தொழிலில் நெருக்கடியும் போராட்டமான நிலையும் இருக்கும். உத்தியோகத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். வரவு இழுபறியாகும். குடும்பத்தினருடன் ஒரு இடைவெளி ஏற்படும். எதிரிகள் விரிக்கும் சூழ்ச்சி வலையில் சிக்க நேரும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கண்டக சனிக்காலம் என்பதால் கூண்டில் சிக்கிய புலியாக சங்கடப்படுவீர்கள். குடும்பத்தினரும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள். நன்றாகப் பழகி வந்தவர்களும் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். வேகமாகவும் திறமையாகவும் செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக்கூடிய உங்களால் முன்புபோல் இப்போது செயல்பட முடியாமல் போகும்.  இருந்தாலும், மே 26 முதல் சனிக்கு குருப்பார்வை கிடைப்பதாலும், ஜூலை 15 - நவ.30 காலத்தில் வக்கிரம், 2027 மார்ச் 25 முதல் அஸ்தமனம் என்ற நிலையினை அடைவதாலும் சனி பகவானால் உண்டாகும் பாதிப்புகள் குறையும்.

ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை அனைத்திலும் போராட்டம் நெருக்கடி என்றிருந்தாலும் அதன்பின் நிலைமாறும். நினைத்ததை சாதித்து முடிக்கும் வலிமை உண்டாகும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை ராகு ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதாலும், அதன்பிறகு கேது பதினொன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதாலும் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்ற நிலை உண்டாகும். செல்வாக்கு, அந்தஸ்து, பொன், பொருள், வீடு வாசல் என்று பராபவ ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும்.

குரு சஞ்சாரம்: உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் வரவு அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அதன்பின் வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் போராட்டமான நிலை இருந்தாலும் அதன்பின் நிலைமை சீராகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பம், தொழில், உத்தியோகம், நட்பில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும், வரவு அதிகரிக்கும் வசதி வாய்ப்புகள் உருவாகும்.

சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன் ஒவ்வொரு ராசியினருக்கும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த ராசியினருக்கு யோகப் பலன்களை வழங்கிடக்கூடியவர் என்பதால், உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ஐப்பசி, தை, வைகாசி, ஆனி ஆகிய நான்கு மாதங்களும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, கார்த்திகை, மாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்களும் சூரியனின் சஞ்சாரங்களால் எடுத்த வேலைகளில் வெற்றியுண்டாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும், வசதி வாய்ப்பு, செல்வாக்கு, அந்தஸ்து, ஆரோக்கியம், எதிர்பார்த்த உயர்வு உண்டாகும்.

பொதுப்பலன்: பராபவ வருடம் உங்களுடைய நீண்டநாள் கனவுகள் நனவாகும் வருடமாக இருக்கும். முயற்சிக்குரிய பலன்கள் கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பம், தொழில், வேலையில் நிம்மதியான நிலை உண்டாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம், பட்டம், பதவி என்று வாழ்க்கை வளமாகும்.

தொழில்: தொழிலில் அக்கறை அதிகரிக்கும். உங்கள் முயற்சியால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். விற்பனை கூடும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசுவழி காண்ட்ராக்ட் கிடைக்கும், ஷேர் மார்க்கெட் முன்னேற்றமடையும், ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். ட்ராவல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம் சார்ந்த தொழில்கள், வாகன விற்பனை, சின்னத்திரை, சினிமா, யூட்யூப், ஏ.ஐ, தொழில்கள் வளர்ச்சி அடையும்.

பணியாளர்கள்: வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வரும் சிலருக்கு பி.ஆர். கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் ஏற்படும்.

பெண்கள்: படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற வாழ்வின் தேவைகள் பூர்த்தியாகும். கணவருடன் இணக்கமான நிலை இருக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

கல்வி: வாழ்க்கையின் ஆதாரம் படிப்பு மட்டும்தான் என்பதை உணர்வீர்கள். படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும். தேர்வு முடிவுகள் மகிழ்ச்சிதரும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: உடல்நிலையில் திடீர் திடீரென பின்னடைவு ஏற்பட்டாலும் அவை மருத்துவத்தால் சீராகும். நீண்டநாட்களாக தொந்தரவுகள் கொடுத்துவந்த பரம்பரை நோய், தொற்று நோய்கள் சித்தா, ஆயுர்வேதா மருத்துவத்தால் குணமாகும். ஆரோக்கியம் மேம்படும்.

குடும்பம்: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்குவரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். தன் குடும்பம், தன் பிள்ளை என்ற எண்ணம் உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் என்று வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழும் நிலை உண்டாகும்.

பரிகாரம்: அமிர்த கடேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.

அஸ்தம்: எச்சரிக்கை தேவை

மனக்காரகன் சந்திரன், வித்யாகாரகன் புதன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் பொறுப்புடனும் நிதானமாகவும் யோசித்தும் செயல்பட வேண்டிய வருடமாகும். சத்ரு ஜெய ஸ்தானம் பலமடைந்திருப்பதால் உங்களிடம் அளவிற்குமீறிய நம்பிக்கையும் துணிச்சலும் இருக்கும் என்றாலும், சனி பகவான் ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதும், வருடத்தின் தொடக்கத்தில் பத்தாமிடத்தில் குரு சஞ்சரிப்பதும் உங்களுக்குள் அழுத்தத்தை ஏற்படுத்தும், திட்டமிட்டபடி எந்த ஒன்றையும் செய்து முடிக்க முடியாமல் போகும், நண்பர்களிடமும் வருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் வேகத்தையும் வீரத்தையும் கட்டுப்படுத்தி விவேகத்துடன் செயல்படுவது நன்மையாகும்.

சனி சஞ்சாரம்: சப்தம ஸ்தானமான ஏழாம் இடத்தில் வருடம் முழுவதும் சனி பகவான் கண்டக சனியாக சஞ்சரிப்பதால், உடல்நிலையும் மனநிலையும் ஒருநேரம் இருப்பதுபோல் மறுநேரம் இல்லாமல் போகும். உங்களுக்கு ஆதரவாக இருந்த நண்பர்களுடனும் பெரியவர்களுடனும் கருத்து வேறுபாடு ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமற்ற நிலை உருவாகும். மனம் வெறுமையாகும் என்பது பொதுப்பலன் என்றாலும், எல்லாம் சில காலம்தான் என்பதுபோல் இப்பலன்களும் குறுகிய காலத்திற்குத்தான். காரணம் மே 26 முதல் சனிக்கு குருப்பார்வை கிடைப்பதும், ஜூலை 15 - நவ.30 காலத்தில் வக்கிரம், 2027 மார்ச் 25 முதல் அஸ்தமனம் என்ற நிலையினை அடைவதும் கண்டக சனியால் ஏற்படும் பாதிப்புகள் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் போய்விடும்.

ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், நவ.13 வரை ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த வேலைகள் முடியும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். உடல்நிலை சீராகும், எதிர்ப்பு பகை என்பதெல்லாம் விலகும், இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். நவ. 13 முதல் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழும் நிலை உருவாகும்.

குரு சஞ்சாரம்: வருடத்தின் தொடக்கத்தில் குரு பத்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் பார்த்துவரும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும், புதிய தொழில் தொடங்குபவர்கள் சந்தை நிலவரம் அறிந்து செயல்பட வேண்டும். மே 26 முதல் லாப ஸ்தானத்தில் குரு உச்சமாக சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச ஆரம்பிக்கும். வருமானம் அதிகரிக்கும். சப்தம சனியின் பாதிப்பு விலகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும், பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும், சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினர் கழுத்தில் மணமாலை ஏறும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன் கார்த்திகை, மாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்களும் சாதகமாக சஞ்சரிப்பதால்,  எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசுவழி வேலைகள் சாதகமாகும், வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும், வசதி வாய்ப்பு அதிகரிக்கும், செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும், ஆரோக்கியம் மேம்படும், உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டாகும்.

பொதுப்பலன்: பராபவ வருடத்தில் உழைப்பும் முயற்சியும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை ஏற்படும். வருமானமும் சேமிப்பும் உயரும், புதிய சொத்து சேரும், வாய்ப்புகள் தேடிவரும். வசதியாக வாழும் நிலை உருவாகும்.

தொழில்: தொழிலில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள், சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள், சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள், அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும், பணியாளர்கள் ஒத்துழைப்பு உண்டாகும், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், மினரல் வாட்டர் தயாரிப்பு, விற்பனை, ட்ரான்ஸ்போர்ட், எக்ஸ்போர்ட், ஜவுளி, விவசாயம் சார்ந்த தொழில்கள், பதிப்பகம், செய்தித்தாள், காலண்டர், நோட்டுப்புத்தகம் தயாரிப்பு, தனியார் பள்ளிகள், வலைதளம், ஏ.ஐ., சின்னத்திரை, சினிமா, குளிர்பானம் தொழில்கள் முன்னேற்றம் அடையும்.

பணியாளர்கள்: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும், சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குச் செல்வீர்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வழக்குகளைக் காரணம் காட்டி தடைபட்டு வந்த பதவி உயர்வும், பண பயன்களும் கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

பெண்கள்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பொறுப்பு அதிகரிக்கும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். உடல்நிலையில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் வெளிப்படும், பிரசவம் சர்ஜரி வழியே நிகழும், பொன் பொருள் சேரும், உறவினர்கள் ஆதரவு கிடைக்கும்.

கல்வி: இயல்பாகவே படிப்பின்மீது ஆர்வம் கொண்ட உங்களுக்கு பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு என்று செல்வீர்கள்.

உடல்நிலை: கண்டக சனியின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், மூச்சுத்திணறல், இருதய நோய்கள் என்று தோன்றுவதற்கு வாய்பிருந்தாலும், ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவாலும், ருண ரோக ஸ்தானத்தைப் பார்க்கும் குருவாலும் அவை குணமாகும். உடல்நிலைப் பாதிப்பிற்காக தொடர் சிகிச்சை எடுத்து வந்தவர்களும் ஆரோக்கியத்துடன் உற்சாகமாக நடைபோடுவீர்கள்.

குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். பொன் பொருள், வீடு வாகனம் என்று வாழ்க்கை வளமாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.

பரிகாரம்: வீரராகவப் பெருமாளை வழிபட வேண்டுதல் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.

சித்திரை: உயர்வு காத்திருக்கு

தைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களான கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு, புதன் ராசிநாதனாகவும், 3,4ம் பாதங்களான துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ வருடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சியாலும் கடும் உழைப்பாலும் முன்னேற்றம் காணும் வருடமாக இருக்கும். வருடத்தின் தொடக்கத்தில் சில சங்கடங்களை சந்தித்தாலும் அதன்பிறகு நிலை மாறும், நினைத்தது நடந்தேறும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாக்ய குரு, லாப கேது, சத்ரு ஜெய ஸ்தான சனி என்று அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் முன்னேற்றத்தையும் வழங்குவார்கள், செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும்.

சனி சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கண்டக சனியால் சங்கடங்கள் ஏற்படும், உடல்நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் குழப்பம், தொழிலில் நெருக்கடி, நண்பர்களுக்குள் வருத்தம், கணவன் மனைவிக்குள் பிரச்னை என்று உருவாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய சனியால் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும், எதிர்ப்பு விலகும், நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும்.

ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு, ஆற்றலை அதிகரிப்பார், செல்வாக்கை உயர்த்துவார்,  எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். நவ. 13 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பண வரவை அதிகரிப்பார், வியாபாரம் தொழிலில் லாபத்தை ஏற்படுத்துவார், செல்வாக்கை உயர்த்துவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை லாப கேது வசதி வாய்ப்புகளை அளிப்பார், செல்வம் செல்வாக்கை உயர்த்துவார். நவ. 13 முதல் கேது ஜீவன ஸ்தானத்திலும், ராகு சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும், செய்துவரும் தொழிலிலும் பார்த்துவரும் வேலையிலும் கூடுதல் அக்கறை தேவைப்படும்.

குரு சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் குருவின் பார்வைகளும், மே 26 முதல் லாப குருவும் அவருடைய பார்வைகளும் முன்னேற்றத்தை வழங்கும், முயற்சிகளை வெற்றியாக்கும், நினைத்ததை சாதிக்க வைக்கும், பொன்பொருள் சேர்க்கையை உண்டாக்கும், புகழை ஏற்படுத்தும், கண்டக சனியின் பாதிப்பிலிருந்து விடுவிக்கும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை பாக்ய குருவும், அதன்பின் கடக குருவின் பார்வைகளாலும் பொருளாதார நிலை உயரும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும், சிலருக்கு புதிய தொழில் அமையும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். புதிய சொத்து சேரும்.

சூரிய சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆத்ம காரகனான சூரியன், கார்த்திகை, மாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்களும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்கழி, பங்குனி, ஆடி, ஆவணி ஆகிய நான்கு மாதங்களும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், தடைபட்ட வேலைகள் நடந்தேறும், செல்வம் செல்வாக்கு உயரும், வியாபாரம், தொழில் லாபம்தரும், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும், அரசுவழி வேலைகள் சாதகமாகும், அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி கிடைக்கும்.

பொதுப்பலன்: பராபவ வருடம் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்கும் வருடமாகும். இதுவரை போராட்டமாகவே இருந்த உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்,  உழைப்பிற்கேற்ற ஆதாயமும் முயற்சிக்கேற்ற உயர்வும் ஏற்படும், பணம், புகழ், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழும் நிலை உருவாகும்.

தொழில்: செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும், போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும், பணியாளர் ஆதரவு கிடைக்கும், வாடிக்கையாளர் அதிகரிப்பர். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல் தயாரிப்பு மற்றும் விற்பனை, மெடிக்கல், உணவகம், விவசாயம் சார்ந்த தொழில்கள், ரசாயன பொருட்கள், குடிநீர் சார்ந்த தொழில்கள் மற்றும் விற்பனை, பப்ளிகேஷன், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஆடை ஆபரணம் காலண்டர், நோட்டுப் புத்தகம் தயாரிப்பு மற்றும் விற்பனை, தனியார் பள்ளிகள், ஏ.ஐ., யூட்யூப், சின்னத்திரை, சினிமா மற்றும் அதைச்சார்ந்த தொழில்கள் லாபம்தரும்.

பணியாளர்கள்: உழைப்பிற்கேற்ற ஆதாயமில்லை, திறமைக்கேற்ற மரியாதை இல்லை என்று வருத்தப்பட்டு வந்தவர்கள்மீது நிர்வாகத்தின் பார்வை படும், எதிர்பார்த்த பொறுப்பும் சலுகைகளும் கிடைக்கும், வேலையில் இருந்த பயம் போகும், அரசு பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவும் எதிர்பார்த்த மாற்றமும் தேடிவரும்.

பெண்கள்: குடும்பத்தில் நிம்மதி இல்லை, வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும், குடும்பத்தினர் ஆதரவு உண்டாகும், வேலைப் பார்த்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும், திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும், வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும், பொன் பொருள் சேரும், உடல்நிலை சீராகும்.

கல்வி: எந்த ஒன்றிலும் முழுமையான கவனத்தை செலுத்தக்கூடிய உங்களுக்கு குரு பார்வைகள் சாதகமாக இருப்பதால் பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், உயர் கல்வி கனவு நனவாகும்.

உடல்நிலை: கடுமையான உழைப்பின் காரணமாகவும், ஓய்வில்லா நிலையினாலும், சிலருக்கு பரம்பரை வழியாகவும் ஏற்பட்ட நோய்களால் அவதிக்கு ஆளாகி வந்த நிலையில் மாற்றம் ஏற்படும், மருந்து மாத்திரை மருத்துவமனை என்ற நிலை மாறும், உடல்நிலையில  ஏற்பட்ட பாதிப்புகள் சிகிச்சையால் குணமாகும், ஆரோக்கியத்துடன் நடை போடக்கூடிய நிலை உண்டாகும்.

குடும்பம்: உங்கள் நீண்ட நாள் கனவுகள் நனவாகும், பிறரைப்போல் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் உங்களை விட்டு விலகும், சொந்த இடம், வீடு, வாகனம் என்ற முயற்சி நிறைவேறும், கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சச்சரவுகள் முடிவிற்குவரும், ஒருவரை ஒருவர் ஆலோசித்து செயல்படுவீர்கள், சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும், பிள்ளைகளுடைய கல்வி, திருமணம் என்ற முயற்சியை மேற்கொள்வீர்கள், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும், சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள், பெரியோர் ஆதரவு உங்களை வழிநடத்தும்.

பரிகாரம்: மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரரை வழிபட வேண்டுதல் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us