sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

/

கடகம்

/

கடகம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : கடகம்
09 ஏப் 2016

முந்தய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

கடகம்நண்பர்களிடம் அன்பும், உறவினர்களிடம் பாசமும் கொண்ட கடக ராசி அன்பர்களே! (65/100)

தற்போது குரு பகவான் வக்கிரம் அடைந்து 2ம் இடமான சிம்மத்தில் உள்ளார். அவரால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உங்களது ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். குரு ஆக.2 வரை வரை அந்த ராசியில் இருப்பார். அதன் பிறகு வக்கிர நிவர்த்தி அடைந்து கன்னி ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் முயற்சிகளில் தடை ஏற்படலாம்.  எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். அதேநேரம் குருவின் அனைத்து பார்வைகளும் எந்த இடையூறையும் உடைத்து எறியும். ராகு உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்து குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளையும், துõரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். கேது 8ம் இடத்தில் இருப்பது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.

அங்கு அவரால் சில உடல் உபாதைகள் வரலாம். சனி பகவான் தற்போது 5ம் இடத்தில் இருப்பது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. 5ல் சனி இருக்கும் போது குடும்பத்தில் சில பிரச்னைகளைத் தருவார். ஆனால் அவரது 7ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும்.பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். வசதிகள் பெருகி குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும்.  அனுகூலம் நீடிக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் இருக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். ஆக. 2க்கு பிறகு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். அதற்கு முன்னதாக திருமணப் பணிகளை முடிப்பது நல்லது. அதன்பிறகு குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் தொடரும். புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். இருப்பதை பயன்படுத்தி முன்னேற வழிகாணுங்கள். தகாதவர்களின்
சேர்க்கைக்கு இடமுண்டு. அதை அறவே தவிர்த்து விடுங்கள். போட்டியாளர்கள் தொல்லை தந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.

பணியாளர்களுக்கு சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு மனதில் பூங்காற்றாய் வீசும். தனியார் துறையில் வேலை பார்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆக.2க்கு பிறகு பணியாளர்கள் சுமாரான  நிலையில்தான் இருப்பர். அதிகமாக உழைக்க வேண்டி வரும். மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். அதேநேரம் வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஆக.2க்கு பிறகு இவர்களுக்கு வருமானம் குறைய வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்காது. தொண்டர்கள் பணம் கேட்டு நச்சரிப்பதால் செலவு பல மடங்கு உயரும்.

மாணவர்களுக்கு  போட்டிகளில் வெற்றி, பரிசு கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களிடம் நற்பெயர் ஏற்படும். ஆக.2க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். முயற்சி எடுத்தால் தான் விரும்பிய கல்லுõரியில் விரும்பிய பாடம் கிடைக்கும். அதேநேரம், குருவின் பார்வையால் சிறந்த மதிப்பெண்ணும், மதிப்பும் கிடைக்கப் பெறுவர்.

விவசாயிகள் போதிய வருமானம் காணலாம். அதிக செலவு பிடிக்கும் பயிரைத் தவிர்க்கவும்.
மானாவாரி பயிர்களில் விளைச்சல் அதிகரிக்கும்.

பெண்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுயதொழில் செய்து வரும் பெண்களின் நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச்செலவு குறையும்.

2017 ஜனவரி16-ஏப்ரல்13 குரு பகவான் 3ம் இடத்தில் இருந்து 4ம் இடத்திற்கு செல்கிறார். இது சாதகமான இடம் இல்லை. மற்ற கிரக நிலையும் சாதகமாக இல்லை. பொதுவாக எதையும் சற்று முயற்சி எடுத்தே செய்ய வேண்டியதிருக்கும். ஆனால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். அதே நேரம் செலவும் வரும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு தொடரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். புதிய வீடு வாகனம் வாங்க தாமதம் ஏற்படும். உறவினர்கள் வகையில் அனுகூலம் இருக்காது.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் தொடர்ந்து சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். புதிய தொழிலை தொடங்க இது உகந்த காலம் அல்ல. சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகும். வங்கிகளில் விண்ணப்பித்த கடன் கிடைக்க தாமதம் ஆகலாம்.

பணியாளர்களுக்கு கடந்த வருடம் போல் அனுகூலமாக இருக்காது. சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. உங்களுக்கு வர வேண்டிய பொறுப்பு தட்டி பறிக்கப்படலாம். மேல்அதிகாரிகளிடம் அனுசரித்து போவதன் மூலம் இதை தடுத்து நிறுத்தலாம். உங்களை நாடி வரும் மக்களுக்கு உதவி செய்வதால் இறையருள் கிடைத்து முன்னேற்றம் ஏற்படும்.

கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சுமாரான நிலையில் இருப்பர். பதவிப்பொறுப்பு கிடைக்க தாமதமாகும்.

மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும்.

விவசாயிகள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டும். உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும். நவீன உழவுக்கருவிகள் வாங்க எடுத்த முயற்சி தாமதத்தின் பேரில் நிறைவேறும்.  வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும். ஆடம்பரத்தை தவிர்க்கவும். உடல்நலம் முன்னேற்றம்
அடையும்.

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கலாம். நவக்கிரகங்களில் ராகுவுக்கும் கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம். மேலும் துர்க்கை வழிபாடு நன்மையை தரும். விநாயகர் வழிபாடு முன்னேற்றத்தை தரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us