உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படத்தில் நடிக்க 3 வருட ராணுவப் பயிற்சி எடுத்த நானா படேகர் ; பின்னாளில் கார்கில் போரிலும் பங்கேற்றார்

படத்தில் நடிக்க 3 வருட ராணுவப் பயிற்சி எடுத்த நானா படேகர் ; பின்னாளில் கார்கில் போரிலும் பங்கேற்றார்


பாலிவுட்டின் பிரபல குணச்சித்திர நடிகரான அவர், தனது 75வது வயதில் இன்று காலமானார். அவரது திரையுலகப் பயணத்தில் எண்ணற்ற படங்களிலும் விதவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அதேசமயம் இயக்குனராகவும் மாறி, 1991ல் வெளியான 'பிரஹார்: தி பைனல் அட்டாக்' என்கிற ஒரே ஒரு படத்தை இயக்கினார். மேலும் அந்தப் படத்தில் அவர் மேஜர் பிரதாப் சவுகான் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்தார்.

நடிப்பு இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தனக்காக வேறு டூப் யாரையும் பயன்படுத்தி மேலோட்டமான சண்டைக்காட்சிகளை அமைக்கக் கூடாது என்பதற்காகவும் அவர் உண்மையிலேயே இந்திய ராணுவத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு, மராத்தான் லைட் இன்பெண்ட்ரி பிரிவில் இணைந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடுமையான கமாண்டோ பயிற்சி பெற்றார். அதன் பிறகுதான் அந்தப் படத்தில் அவர் நடித்தார்.

இப்படி ராணுவ வீரர்களைப் போலவே கடுமையான பயிற்சிகளில் தீவிரமாகப் பங்கேற்றதால், ராணுவத்தினர் மத்தியில் மிகுந்த மரியாதையைப் பெற்ற அவருக்கு ஆரம்பத்தில் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு, பின்னர் லெப்டினென்ட் கர்னல் ஆக பதவி உயர்வு கிடைத்தது. இதன் பயனாக 1999ல் கார்கில் போரில் நேரடியாக ராணுவத்துடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு நானா படேகரைத் தேடி வந்தது. அப்போது போர் முனையில் இருந்து விரைவுப்படை குழுவின் ஒரு பகுதியாக அவர் தனது ராணுவ சேவையை வழங்கினார் என்பது ரசிகர்களில் பலருக்கு இப்போது புதிய செய்தியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !