உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்டோபர் 18ல் நடிகர் அர்ஜூனின் இளைய மகள் திருமணம்

அக்டோபர் 18ல் நடிகர் அர்ஜூனின் இளைய மகள் திருமணம்


நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா 'பட்டத்து யானை', 'சொல்லிவிடவா' உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியைக் காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அர்ஜூனின் இளைய மகள் அஞ்சனா, தனது நீண்டகாலக் காதலரான இசாய் என்பவரை வரும் அக்டோபர் 18ம் தேதி திருமணம் செய்ய இருக்கின்றார். கிட்டத்தட்ட 13 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த வருடம் இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற கோமா ஏரிக்கரையில் நடைபெற்றது.

இந்த நிலையில், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ளும் எளிய மற்றும் தனிப்பட்ட நிகழ்வாக இந்தத் திருமணம் நடைபெற உள்ளது. அஞ்சனாவைப் பொறுத்தவரை, தனது சகோதரி ஐஸ்வர்யாவைப் போல சினிமாவில் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. அவர் வெளிநாடுகளில் பேஷன் டிசைனிங் படித்துவிட்டு, தற்போது பேஷன் மற்றும் தொழில் முனைவோர் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, தாவரங்களிலிருந்து பெறப்படும் இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு, இயற்கை சூழலுக்கு உகந்த ஹேண்ட் பேக்குகளைத் தயாரிக்கும் சொந்த நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !