இறப்பதற்கு முன்பு அனுப்பிய மெசேஜ் : நானா படேகரின் கடைசி நிமிடங்கள்
பனாஜி : நடிகர் நானா படேகர்,75, இன்று அதிகாலை காலமானார். கோவாவில் உள்ள வீட்டில் இருந்த போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மணிபால் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக சிபிஆர் சிகிச்சை கொடுத்தும், பலனளிக்கவில்லை. காலை 5 : 20 மணிக்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
நானா படேகரின் மறைவுக்கு பிரதமர் மோடி போன்ற அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பல தேசிய விருதுகளை வென்ற படேகரின் இறுதிச்சடங்கு, புனேவில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று மாலை நடக்கிறது.
நானா படேகர் இறப்பதற்கு முன்பான கடைசி நிமிடங்களை, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சால்கர் கூறியது தற்போது வைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது; நானா படேகர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவருடைய நண்பருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். இரவு நேரம் என்பதால், அந்த மெசேஜை அவரது நண்பர் பார்க்கவில்லை. இதனால், படேகர் உடனடியாக தொலைபேசியில் அழைத்து விஷயத்தை சொல்லியுள்ளார். அதன்பிறகு, அதிகாலை 4 மணிக்கு படேகரின் வீட்டுக்கு நண்பர் சென்றுள்ளார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, படேகர் வியர்த்து விறுவிறுப்புடன் மெல்ல மெல்ல மயக்க நிலைக்கு சென்றுள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸையும், மருத்துவக் குழுவினரையும் அழைத்து வருவதற்காக, வீட்டு பணியாளர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவக் குழுவினர் நேரில் சென்று, அவருக்கு முதலுதவி அளித்தனர். ஆனால், படேகர் எந்தவித அசைவும் இன்றி, உணர்ச்சியில்லாமல் இருந்துள்ளார். அதன்பிறகு, சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது. 4.20 மணிக்கு மணிபால் மருத்துவமனைக்கு படேகர் கொண்டு செல்லப்பட்டார். அங்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரை காப்பாற்ற முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.