30 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட அரவிந்த்சாமி படத்தை மீண்டும் தயாரிக்கும் 'புலிமுருகன்' தயாரிப்பாளர்
மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஜோஷி இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரேவதி நடிப்பில் 1995ல் 'அண்ணா' என்கிற படம் ஆரம்பிக்கப்பட்டது. படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றது. இந்தப் படத்திற்காக “யவன கதையில் நின்னு வன்னு..” என்கிற ஒரு மெலடி பாடலை கே,ஜே.யேசுதாஸூம் சித்ராவும் இணைந்து பாட, இசையமைப்பாளர் அவுசப்பச்சன் இசையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமும் ஆனது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் சில நாட்களிலேயே நின்று போனது.
ஆனால், சமீபத்தில் வெளியான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தில் இந்தப் பாடலைப் பயன்படுத்தியிருந்தார்கள். இதன் மூலம் இந்தப் பாடல் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில், இதன் புதிய திருப்பமாக இந்தப் படத்தின் கதையை 'புலிமுருகன்' பட தயாரிப்பாளரான தோமிச்சன் முலக்குபாடம் தற்போது அதிகாரப்பூர்வமாக வாங்கியுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட இந்தப் படத்தை, இளம் நடிகர்களின் பங்களிப்புடன் தற்கால ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றிப் தயாரிக்க இருப்பதாகத் தயாரிப்பாளர் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.