sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

13

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1026

கல்வி உதவித்தொகை எனக்கூறி பண மோசடி: எஸ்.பி.,யிடம் புகார்

திருவள்ளூர்

1 hour(s) ago

மேஷம்அசுவினி: எது நடந்தாலும் அது நன்மைக்கே என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். வருமானம் அதிகரிக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் உதவியால் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைய முடியும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், மனம் சலனப்படும். எந்தவொரு வேலையிலும் நிலையான ஈடுபாடு இல்லாமல் போகும் என்பதால், கவனமாக செயல்படுவது அவசியம். பிள்ளைகளின் போக்கு இந்த நேரத்தில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். அவர்கள் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வதும் பாதுகாப்பதும் மிகமிக அவசியம். பூர்வீக சொத்துகளில் சில பிரச்னை ஏற்படும். அதைப் பேசி தீர்த்துக்கொள்ள முடியும்.  ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாயால் கோபம் அதிகரிக்கும்.  கவனமும் நிதானமும் இருப்பதால் நன்மை தரும். மே 26 வரை சப்தம ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். நண்பர்கள் உங்கள் மனம் அறிந்து நடந்து கொள்வார். விவசாயிகள் இந்த நேரத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மே 30, 31.அதிர்ஷ்ட நாள்: மே 16, 18, 25, 27. ஜூன் 7, 9.பரிகாரம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.பரணி: நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். ராசிநாதன் செவ்வாய் ராசிக்குள் ஆட்சியாக சஞ்சரிக்கும் நிலையில், அதிர்ஷ்டககாரகன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். உங்கள் திறமை வெளிப்படும். வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும். உங்களுக்கு இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். பொன் பொருள் சேரும். பண வரவு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கு மே 26 முதல் குரு பார்வை உண்டாவதால் ஏழரைச்சனியின் சங்கடம் விலகும். விரயங்கள் கட்டுப்படும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். சிலருக்கு எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும். மே 27 வரை புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த பணம் வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். லாப ராகுவால் தடையின்றி வருமானம் வரும். கடன் தொல்லை விலகும். விவசாயிகள் இந்த மாதத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு உயர் கல்வி கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: மே 31. ஜூன் 1.அதிர்ஷ்ட நாள்: மே 15, 18, 24, 27. ஜூன் 6, 9.பரிகாரம்: அருணாச்சலேஸ்வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 1ம் பாதம்: எங்கும் எதிலும் முதலிடத்தில் இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஆத்ம காரகன் சூரியன் குடும்ப ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் மனம் சஞ்சலப்படும். வார்த்தைகளில் நெருப்பு பறக்கும். யோசிக்காமல் பேசி சில இடங்களில் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மே 26 வரை குருவின் பார்வை 7,9,11 ம் இடங்களுக்கும், அதன்பிறகு 8,10,12 ம் இடங்களுக்கும் கிடைப்பதால் திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். வாழ்க்கைத்துணையைப் பிரிந்தவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் மறுமணம் நடக்கும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். கனவு நனவாகும். மறைந்த செல்வாக்கு வெளிப்படும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். வீண் செலவு கட்டுப்படும். வாழ்வில் நிம்மதியான நிலை உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் கனவு நனவாகும். விவசாயிகள் நிதானமாக செயல்படுவது நல்லது. பெண்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும்.சந்திராஷ்டமம்: ஜூன் 1.அதிர்ஷ்ட நாள்: மே 18, 19, 27, 28. ஜூன் 9, 10.பரிகாரம்அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்கவுரவமாகவும் செல்வாக்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் சுக ஸ்தானாதிபதி சூரியன் மாதம் முழுவதும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் உற்சாகமாக செயல்படுவீர். உங்களிடம் இருந்த மந்த நிலை விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமையின் ஆதரவால் முன்னேற்றப் பாதையில் நடைபோடுவீர். அரசு வழி முயற்சி சாதகமாகும். சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனமாக இருப்பது நல்லது.  வேலை பளு மற்றும் அலைச்சலின் காரணமாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை அவசியம். மே 26 வரை குரு பார்வையோடு ஜீவன ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டில் பணியாற்றுபவர்களுக்கு நிம்மதி உண்டாகும். ராசிநாதன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பொருள் வரவு அதிகரிக்கும். கையில் பணம் புரளும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உருவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் அமையும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். விவசாயிகள் இந்த மாதத்தில் நிதானமாக செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: ஜூன் 1, 2. அதிர்ஷ்ட நாள்: மே 15, 19, 24, 28. ஜூன் 6, 10.பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.ரோகிணி: ஆடம்பரமாக வாழ வேண்டும், பிறர் மனதில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். இதுவரை நீங்கள் அடைந்து வந்த சங்கடம் இனி இருந்த இடம் தெரியாமல் போகும். மே 26 வரை வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அதிகரிப்பார். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்களை நீக்குவார். இழுபறியாக இருந்த வேலை முடியும். வழக்கு சாதகமாக்குவார். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போர் நிலையில் உயர்வை உண்டாக்குவார். மறைமுக எதிர்ப்புகளை இல்லாமல் செய்வார். செய்து வரும் தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். பார்த்து வரும் வேலையில் உயர்வு உண்டாகும். மே 26 முதல் உச்சமாகும் குரு 7,9,11 ம் இடங்களைப் பார்ப்பதால் திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு மணமாலை தோளில் ஏறும்.  தம்பதிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். பிரிந்து வாழ்ந்தவர்களும் சேர்ந்து வாழக்கூடிய நிலை உண்டாகும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சிலருக்கு சொந்த இடம் வீடு அமையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் அடையும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உடல் நிலையில் கவனமாக இருப்பது நல்லது. விவசாயிகள் அவசரப்போக்கை கை விடுவது அவசியம். மாணவர்கள் விருப்பமான பாடப்பிரிவில் விரும்பிய கல்லுாரியில் சேர்வர்.சந்திராஷ்டமம்: ஜூன் 2, 3.அதிர்ஷ்ட நாள்: மே 15, 20, 24, 29. ஜூன் 6, 11.பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். ரத்தக்காரகன் செவ்வாய் மாதம் முழுவதும் விரய ஸ்தானமான 12 ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். சிலருக்கு உடல் நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும். சிலர் தங்களுக்கு சொந்தமான இடத்தை விற்று புதிய முயற்சிகளை மேற்கொள்வீர். ஒவ்வொரு வேலையும் திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போகும். உங்கள் தர்ம கர்மாதிபதி சனி பகவான் லாப ஸ்தானத்தில்  சஞ்சரிப்பதால் மலையளவு வரும் துன்பம் கூட கடுகளவாக மாறும். அனைத்தையும் எதிர் கொள்ளக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். தேவைக்கேற்ற வருமானம் வரும். உங்கள் லாபாதிபதி குரு, தனது சஞ்சாரங்களாலும், பார்வைகளாலும் மாதம் முழுவதும் யோகப் பலன்களை அள்ளி வழங்குவார். குடும்பம் தொழில் உத்தியோகத்தில் நிம்மதி இருக்கும். எந்தவிதமான பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொள்ளக்கூடிய நிலை உருவாகும். மறைந்து  இருக்கும் திறமை வெளிப்படும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வழக்கு சாதகமாகும். தடைபட்ட பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். வருமானம் உயரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு நிலை மாறும். உங்கள் தனக்காரகன் புதனின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் மனம் தெளிவாகும். பயணத்தின் வழியே எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் தேடிவரும். வங்கியில் கேட்ட லோன் கிடைக்கும். பங்குச் சந்தையில் ஏற்பட்ட இழப்புகளை சரிகட்டுவீர். சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் ஆடை ஆபரணம் சேரும். பொன் பொருள் வாங்க வேண்டும் என்ற முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய இடம் வீடு வாகனம் அமையும் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். திருமண வயதினருக்கு வரன் அமையும். சிலருக்கு மணமாலை ஏறும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும் விவசாயிகள் எல்லாவற்றிலும் கவனமாக இருப்பது அவசியம். வயதானவர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: ஜூன் 3, 4.அதிர்ஷ்ட நாள்: மே 15, 18, 24, 27. ஜூன் 6, 9.பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்துணிச்சலாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம்.  செவ்வாய் பகவான் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். செய்து வரும் தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கடந்த மாதம் வரை இருந்த போராட்ட நிலை மாறும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருத்துவ செலவு குறையும். பெரியோரின் ஆதரவு ஏற்படும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். மே 26 வரை ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மனம் தெளிவு பெறும். மாணவர்கள் மேற்கல்விக்காக கடுமையாக போராட வேண்டியதாக இருக்கும். வயதானவர்கள் ஆரோக்கியமாக நடமாடக்கூடிய நிலை உருவாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 4.அதிர்ஷ்ட நாள்: மே 18, 23, 27. ஜூன் 5, 9, 14.பரிகாரம்: மாசாணி அம்மனை வழிபட சங்கடம் விலகும்.திருவாதிரைநினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு, யோகக்காரகனான ராகு மே 26 வரை குரு பார்வையுடன் சஞ்சரிப்பதால் எடுத்த வேலை வெற்றியாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வெளிநாட்டில் இருக்கும் சிலருக்கு பி.ஆர் கிடைக்கும். சிலருக்கு வேலையில் இருந்த பயம் போகும். புதிய இடம் வீடு வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். சகோதரர்கள் இடையே சிறு சிறு கசப்பு உண்டாகும். முடிந்தவரை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியமாக செயல்படுவீர். சனி பகவானுக்கு மே 26 முதல் குரு பார்வை கிடைப்பதால் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயத்தில் லாபம் அதிகரிக்கும். சில மாணவர்களுக்கு வெளியூரில் தங்கிப் படிக்கும் அளவிற்கு கல்லுாரியில் இடம் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு நிம்மதியான நிலை உருவாகும். பெண்கள் நம்பிக்கை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.சந்திராஷ்டமம்: ஜூன் 4, 5.அதிர்ஷ்ட நாள்: மே 22, 23, 31. ஜூன் 13, 14.பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: தெளிந்த ஞானமும், பிறருக்கு வழிகாட்டக்கூடிய திறமையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். உங்கள் ராசிக்கு சப்தமாதிபதியும் ஜீவனாதிபதியுமான குரு மே 26 வரை ராசிக்குள் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். அதற்கேற்ற வகையில் வருமானம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு திடீர் இடமாற்றம் பதவி உயர்வு ஏற்பட்டு குடும்பம் ஓரிடம் தான் ஓரிடம் என்று வாழக்கூடிய நிலை உருவாகும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு சுவீட் எடு கொண்டாடு எனும் அளவிற்கு நல்ல செய்தி வரும். சிலருக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு மணமேடை ஏறக்கூடிய அளவிற்கு நிலை உருவாகும். சொந்த இடம், வீடு என்று வாங்கவும், சிலருக்கு சொந்த வீட்டில் குடியேறக்கூடிய நிலையும் ஏற்படும். மே 26 முதல் குடும்ப ஸ்தானத்தில் உச்சமாகும் குரு குடும்பத்தில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் உண்டாக்குவார். பண வரவை அதிகரிப்பார். கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய அளவிற்கு செல்வாக்கை உயர்த்துவார். வெளி வட்டாரத்தில் மதிப்பை அதிகரிப்பார். நோய், நொடி, வம்பு, வழக்கு, பிரச்னை என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் கனவுகள் நனவாகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் பார்த்து வரும் வேலையில் பிரச்னை, தகுதிக் குறைவானவர்களால் அவமானம் என்றுள்ள நிலையெல்லாம் குரு பார்வையால் மாறும். உங்களை அவமானப் படுத்தியவர்களே உங்களைப் பாராட்டும் நிலை உருவாகும். செய்து வரும் தொழில் விருத்தியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும். உங்கள் லாபாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வருமானத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். எடுத்த வேலை வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு உயரும். பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். விவசாயிகளுக்கு நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு விருப்பப்பட்ட கல்லுாரியில் இடம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஜூன் 5, 6.அதிர்ஷ்ட நாள்: மே 21, 23, 30. ஜூன் 3, 12, 14.பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.

கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிடும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். மே 26 வரை விரய ஸ்தானத்தில் குரு சஞ்சரித்தாலும் அவருடைய பார்வை 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால் மனதில் தெளிவு இருக்கும். உடலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நோய் நொடி என்றிருந்த நிலை மாறும். எதிர்ப்பு வம்பு வழக்கு என்பது எல்லாம் இல்லாமல் போகும். மறைந்து இருந்த செல்வாக்கு வெளிப்படும்.  ராகுவால் ஏற்படும் நெருக்கடி நீங்கும். திடீர் வாய்ப்பு தேடிவரும். பொன் பொருள் சேரும். மே 26 முதல் ஜென்ம ராசிக்குள் உச்சமாக சஞ்சரிக்கும் குரு 5,7,9 ம் இடங்களைப் பார்ப்பதால் வாழ்வில் புதிய பாதைத் தெரியும். மன பயம் குழப்பம் எல்லாம் விலகும். ஒரு பக்கம் அலைச்சல் அதிகரிக்கும். நேற்றைய பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படும். குழந்தை பாக்யத்திற்காக தவமிருந்தவர் வேண்டுதல் நிறைவேறும். சிலருக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வருவதுடன் திருமண நாளையும் குறிப்பீர். சிலருக்கு சொந்த வீடு அமையும். சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்திடக்கூடிய அளவிற்கு செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் நிலையில் ஏற்பட்ட பிரச்னை, உடல்நிலையில் தோன்றிய பாதிப்பு எல்லாம் விலக ஆரம்பிக்கும். ஆரோக்கியமாக நடைபோடுவீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செல்வாக்கான நிலை இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் குறைவில்லாமல் வந்து கொண்டிருக்கும். பொன் பொருள் சேரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை இருக்கும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் எண்ணம் பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 6.அதிர்ஷ்ட நாள்: மே 20, 21, 29, 30. ஜூன் 2, 3, 11, 12.பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட நினைத்த வேலை நடக்கும்.பூசம்நிதானமாக செயல்பட்டாலும் நினைத்ததை முடிப்பதில் உறுதியாக இருந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். சனி பகவான் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு உயரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்களும் உங்களிடம் சமாதானம் பேசக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். வியாபாரம் தொழில் உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். செய்து வரும் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வரவேண்டிய பணம் வரும். கையிருப்பு அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். சொந்த வீட்டில் பால் காய்ச்சிடக் கூடிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். மே 27 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் மனத்தெளிவு இருக்கும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த லோன் கைக்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். பெண்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். மூத்த குடிமக்களின் ஆரோக்கியம் மேம்படும்.சந்திராஷ்டமம்: ஜூன் 7.அதிர்ஷ்ட நாள்: மே 17, 20, 26, 29. ஜூன் 2, 8, 11.பரிகாரம்: அக்னீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். செல்வாக்கு உயரும்.ஆயில்யம்எடுத்த வேலைகளில் உறுதியாக இருந்து வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். வித்யா காரகன் புதன் மே 27 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் கையில் பணம் புரளும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர் ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கிடைக்கும். தடைபட்ட வேலை நடக்கும். மாதம் முழுவதும் உங்கள் தன குடும்பாதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மனதில் நிம்மதியான நிலை இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். சனிபகவான் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உடல்நிலை சீராகும். எடுத்த வேலையை முடித்திடக்கூடிய அளவிற்கு நிலை மாறும். குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. அவசரப்பட்டு யாருக்கும் எந்தவித வாக்குறுதியும் இந்த நேரத்தில் வழங்கிட வேண்டாம். யாரையும் எடுத்தெறிந்து பேசவும் வேண்டாம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. குரு பகவானின் பார்வை மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் தடைபட்ட வேலை நடக்கும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து ஏற்படும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். விவசாயிகள் கால நிலை அறிந்து செயல்படுவது அவசியம். மாணவர்கள் எண்ணம் ஈடேறும்.சந்திராஷ்டமம்: ஜூன் 8.அதிர்ஷ்ட நாள்: மே 20, 23, 29. ஜூன் 2, 5, 11, 14.பரிகாரம் பகவதி அம்மனை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.

சிம்மம்: மகம்எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் வென்று காட்டக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது உங்களுக்கு நிறையவே படிப்பினைகளை ஏற்படுத்துவார். யாரை பெரிதாக நம்பி இருந்தீர்களோ அவர்களே உங்களுக்கு எதிராக மாறுவர். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். உடல் நிலையிலும் ஏதேனும் சிறு சிறு சங்கடம் அவ்வப்போது ஏற்படும். உங்கள் ராசிநாதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலை வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடி வரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். இந்த நேரத்தில், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி உங்களுக்கு சில எச்சரிக்கைகளை வழங்குவார். சிலருக்கு எதிர்பாராத நெருக்கடி பிரச்னை, சங்கடம் என ஏற்படும். அவற்றை எல்லாம் சமாளித்திடக்கூடிய நிலையும் இருக்கும். விவசாயிகள் இந்த மாதத்தில் நிதானமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 9.அதிர்ஷ்ட நாள்: மே 16, 19, 25, 28. ஜூன் 1, 7, 10.பரிகாரம்: அரச மரத்தடி விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.பூரம்: ஆடம்பரத்தையும் பகட்டையும் விரும்பும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். மூடி வைத்திருந்த தொழில்களை மீண்டும் தொடங்கி லாபம் காண்பீர். கையில் பணம் புரளும். மே 26 வரை குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலை எல்லாம் யோகமாகும். வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். நண்பர்களால் லாபம் உண்டாகும். தம்பதிக்குள் இணக்கமான நிலை இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மே 26 முதல் விரய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் செலவுகளில் கவனம் தேவை. முடிந்த வரை கடன் வாங்காமல் இருப்பது நல்லது. உங்கள் பாக்யாதிபதி ஆட்சியாக சஞ்சரிப்பதால் பெரியோரின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கும் உயரும். தந்தைவழி உறவுகள் தேடிவந்து உதவி செய்வர். சிலருக்கு புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர். பெண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி பிரச்னை சங்கடம் எல்லாம் விலகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். மூத்த குடிமக்கள் உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது. சந்திராஷ்டமம்: ஜூன் 10.அதிர்ஷ்ட நாள்: மே 15, 19, 24, 28. ஜூன் 1, 6, பரிகாரம்: மகேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரம் 1 ம் பாதம்: எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் முதன்மையாக இருக்க நினைக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். உங்கள் ராசியாதிபதி சூரியன் கேந்திர பலத்துடன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடி விலகும். எடுத்த வேலை லாபம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவால் நம்பிக்கை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைப்பதுடன் புதிய பொறுப்பும் சிலருக்கு பதவியும் கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவருக்கு வேலைக் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் லாபாதிபதி புதன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மாதத்தின் முற்பகுதியில் சப்தம ஸ்தான ராகுவிற்கும், பிற்பகுதியில் அஷ்டம ஸ்தான சனிக்கும் குரு பார்வைக் கிடைப்பதால் சங்கடம் எல்லாம் விலகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்துவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் அமைந்து மணநாள் முடிவாகும். பொன் பொருள் சேரும். சந்தோஷமான நிலை இருக்கும். புதிய வாகனம் ஆடம்பர பொருட்கள் என வாங்குவீர். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவடையும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானமும் கவனமும் அவசியம். விவசாயிகள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 11.அதிர்ஷ்ட நாள்: மே 19, 28. ஜூன் 1, 10.பரிகாரம்தர்பாரண்யேஸ்வரரை வழிபட துன்பம் விலகும். நன்மை நடக்கும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்நிதானமாக செயல்பட்டாலும் நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் விரயாதிபதி சூரியன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மன பயம் ஏற்படும். வேலைகளில் குழப்பம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு அதிகாரியால் நெருக்கடி தோன்றும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். மே 26 வரை குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் ஏற்படாமல் போகும். அதே நேரத்தில் குருவின் பார்வை 2,4,6 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பார்த்த பணம் வரும். மகிழ்ச்சி நிலைக்கும். எதிர்ப்பு பகை போட்டி பிரச்சனை என்பதெல்லாம் இல்லாமல் போகும். செல்வாக்கு அதிகரிக்கும். பெண்கள் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைப் பார்க்கும் இடத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது அவசியம். பெரியோரின் ஆலோசனை இந்த நேரத்தில் கை கொடுக்கும். ஜூன் 10 வரை சுக்கிரன் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் செலவு அதிகரிக்கும். ஆடம்பரமாக செலவு செய்து சங்கடப்பட வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படும் என்பதால், வரவு செலவில் நிதானம் தேவை. விவசாயிகள் யோசித்து செயல்படுவது நல்லது.  உழைப்பாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில் அனுசரித்துப்போவது அவசியம். மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: மே 15, ஜூன் 11.அதிர்ஷ்ட நாள்: மே 19, 23, 28. ஜூன் 1, 5, 10, 14.பரிகாரம்: சனீச்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை உண்டாகும்.அஸ்தம்: என்ன தான் திறமை இருந்தாலும் அடிக்கடி தேவையற்ற குழப்பத்திற்கு ஆளாகி விடும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் எடுக்கும் வேலைகளில் லாபம் காணும் மாதம். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு முயற்சிகளை வெற்றியாக்குவார். ஆரோக்கியத்தை சீராக்குவார். எதிர்ப்பு வம்பு வழக்கு போட்டி பிரச்னை என்பதை எல்லாம் இல்லாமல் செய்வார். மே 26 முதல் குரு லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால், எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். குழப்பம் விலகி தெளிவாக செயல்படுவீர். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கண்டக சனி பகவானுக்கு குரு பார்வை கிடைப்பதால் நட்பு வட்டத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தம்பதிகளுக்கிடையே அந்நியோன்யம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட பிரச்னை முடியும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். மே 27 முதல் ராசி நாதன் புதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பெண்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.சந்திராஷ்டமம்: மே 15, 16. ஜூன் 12.அதிர்ஷ்ட நாள்: மே 20, 23, 29. ஜூன் 2, 5, 11, 14.பரிகாரம்: ஆதி திருவரங்கனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.சித்திரை 1, 2 ம் பாதம்: தைரியமாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். அஷ்டமாதிபதி செவ்வாய் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வாய்ப்பு தேடி வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி நிறைவேறும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். மே 26 முதல் லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குருவால், கண்டக சனியினால் ஏற்படும் சங்கடம் நெருங்காமல் போகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும் கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடியும். 6 ம் இட ராகுவும், மே 27 முதல் 10ல் இடத்தில் சஞ்சரிக்கும் புதனும், லாப குருவும் உங்கள் வாழ்க்கையை வளமாகும். நீங்களே அதிசயப்படும் வகையில் உங்கள் நிலை மாறும். பொருளாதார நெருக்கடி நீங்கும். செய்து வரும் தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அனுகூலமான நிலை இருக்கும். அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளும் விவசாயிகளும் சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். புதிய முதலீடுகளில் கவனம் தேவை.சந்திராஷ்டமம்: மே 16, ஜூன் 12, 13.அதிர்ஷ்ட நாள்: மே 18, 23, 27. ஜூன் 5, 9, 14.பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட சங்கடம் விலகும். நன்மை ஏற்படும்.

துலாம்: சித்திரை 3, 4 ம் பாதம்உழைப்பால் உண்டாகும் வெற்றியே நிரந்தரமானது என்பதை அறிந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். தைரியகாரகன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் செயல்களில் வேகம் இருக்கும். மற்றவர்களால் முடிக்க முடியாத வேலைகளையும் முடித்துக் காட்டுவீர். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சகோதரர்களுடைய ஆதரவு கிடைக்கும். குடும்பம், தொழில், வாழ்க்கையில் இருந்த பிரச்னை முடியும். சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால் முதலீடுகளில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத சங்கடம் ஏற்படும். தலைமைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். உடல் நிலையிலும் அவ்வப்போது பிரச்னை தலை எடுக்கும். எல்லாவற்றிலும் கவனமாக இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் சிறு  தவறுக்கு கூட இடம் கொடுக்க வேண்டாம். இந்த நேரத்தில், குரு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எல்லாவற்றையும் சமாளித்திடக்கூடிய நிலை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். திருமணம் கூடும். நட்புகளால் லாபம் ஏற்படும். செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு கல்விக்கனவு நனவாகும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். தம்பதிக்கிடையே இணக்கம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: மே 17, ஜூன் 13.அதிர்ஷ்ட நாள்: மே 15, 18, 24, 27. ஜூன் 6, 9.பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட சங்கடம் நீங்கும்.சுவாதி: புகழோடும் பொருளோடும் வாழ்வதே வாழ்க்கை என்ற முடிவோடு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், மார்ச் 26 வரை குரு பார்வை இருப்பதால் மனக்குழப்பம் விலகும். எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சியெல்லாம் வெற்றியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தை பாக்யத்திற்காக தவம் இருந்தவர்களுக்கு வரம் கிடைத்தது போல் நல்ல தகவல் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் வீடுதேடி வரக்கூடிய நிலை உருவாகும். ஜூன் 10 வரை அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு வசதிகள் வசதியும் வாய்ப்பும் உண்டாகும். சமூகத்தில் தனி மரியாதை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு ஏற்படும். தனியார் நிறுவனங்களில் வேலைப்பார்ப்பவர்களுக்கு வேலையை விட்டு விட்டு புதிய வேலையில் சேர்வீர். வெளிநாட்டு விவகாரங்களில் ஏற்பட்ட தடை விலகும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். தொழிலாளர் ஆதரவு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் தொழில் லாபம் தரும். தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். தம்பதிக்குள் இருந்த இடைவெளி விலகும். லாப கேதுவால் சேமிப்பு உயரும். மாணவர்களின் கல்வி கனவு நனவாகும். கவனமாக செயல்படும் விவசாயிகளுக்கு நெருக்கடி நீங்கும். வயதானவர்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உருவாகும்.சந்திராஷ்டமம்: மே 17, 18. ஜூன் 13, 14.அதிர்ஷ்ட நாள்: மே 15, 22, 24, 31. ஜூன் 4, 6, 13.பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்: அறிவாற்றலால் அனைத்திலும் வெற்றிபெற்று வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். மே 26 வரை பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைக்கேற்ப செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நேற்று வரை அலட்சியமாகப் பார்த்தவர்களும் மரியாதையோடு பார்த்திடக்கூடிய நிலை உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். பொன் பொருள் சேரும். அடமானத்தில் இருந்த நகைகளை மீட்பீர்கள். கையில் பணப்பழக்கம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். தலைமையின் ஆதரவு ஏற்படும். சத்ரு ஜெய ஸ்தானத்தை சஞ்சரிக்கும் சனிபகவான் முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பார். தைரியம் தன்னம்பிக்கை வேகம் அதிகரிக்கும். உடலில் இருந்த பாதிப்பு விலகும். வியாபாரம் தொழிலில் போட்டியாளரின் தொல்லை நீங்கும். வழக்கு சாதகமாகும். மறைந்த புதன் நிறைந்த செல்வங்களைக் கொடுப்பார். உபரி வருமானம் ஏற்படும். வராமல் இருந்த பணம் வரும். பங்குச்சந்தையில் ஆதாயம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை உண்டாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.சந்திராஷ்டமம்: மே 18. ஜூன் 14.அதிர்ஷ்ட நாள்: மே 15, 21, 24, 30. ஜூன் 3, 6, 12.பரிகாரம்செந்தில் வேலனை வழிபட சங்கடம் விலகும். வாழ்க்கை வளமாகும்.

விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்எல்லோருக்கும் முன்னோடியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். தேவகுரு மே 26 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வை விரயம், தன,குடும்பம், சுக ஸ்தானங்களைப் பார்ப்பதால் வீண் செலவு கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பொருளாதார நிலை உயரும். ஆரோக்கியம் மேம்படும். மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசியையும் பார்ப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடி விலகும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். நன்மை அதிகரிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பொருளாதாரத்தில் நிறைவு உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரம், தொழில் லாபம் தரும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கு குரு பார்வை உண்டாவதால் பிள்ளை பற்றிய கவலை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். மனக் குழப்பம் இருந்த இடம் தெரியாமல் போகும். எந்தவொரு முடிவிற்கும் வர முடியாமல் தவித்து வந்த நீங்கள் இதுதான் வாழ்க்கை இதுதான் பாதை என்று தெளிவாக செயல்படுவீர். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும் தம்பதிக்குள் இணக்கமான நிலை இருக்கும். கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். பொருளாதார நிலை உயரும். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: மே 19.அதிர்ஷ்ட நாள்: மே 18, 21, 27, 30. ஜூன் 3, 9, 12.பரிகாரம்: நவக்கிரகத்தில் உள்ள குருவிற்கு வியாழக்கிழமை நெய்தீபம் ஏற்ற வாழ்வில் வளம் கூடும்.அனுஷம்: எந்த ஒன்றிலும் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம், செயல்களில் தடுமாற்றம், பூர்வீக சொத்தில் பிரச்னை, பிள்ளைகளுக்காக சங்கடம் என்ற நிலை ஏற்படும். மே 26 முதல் உச்சமாக சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியையும், 3, ம் இடத்தையும், 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும்  பார்ப்பதால், உங்களுக்கிருந்த சங்கடம் எல்லாம் விலகும். தடைக்கற்களாக இருந்தவை எல்லாம் படிக்கற்களாக மாறும். வியாபாரம்,  தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பல நாட்களாக பல்வேறு முயற்சி எடுத்தும் நடைபெறாமல் இருந்த வேலை முடியும். கடன்களால் கலங்கிய நிலைமாறும். எதிர்பார்த்த பணம் வரும். கையிருப்பு உயரும். உடலில் இருந்த பாதிப்பு விலகும். உறவினர்களிடம் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விலகி இருந்த சகோதரர்கள் உங்களை தேடி வருவார்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மாதம் முழுவதும் செவ்வாய் ஆட்சியாக சஞ்சரிப்பதால் நினைத்ததை சாதித்து முடிப்பீர். எதற்காகவும் பின்வாங்க மாட்டீர்கள். அரசியல்வாதிகள் துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். விவசாயத்தில் லாபம் கூடும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும். பெண்களுக்கு உடல், மனரீதியாக ஏற்பட்ட சங்கடம் விலகும்.சந்திராஷ்டமம்: மே 19, 20.அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 26, 27. ஜூன் 8, 9.பரிகாரம்: சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட சங்கடங்கள் விலகும்.கேட்டை: திட்டமிட்டு செயல்பட்டு அதன் வழியாக நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் திட்டம் வெற்றியாகும். நேற்றைய முயற்சி சாதகமாகும் வரவு அதிகரிக்கும். மாதம் முழுவதும் சுக்கிரன் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் ஆடை ஆபரணம் சேரும். உங்களிடம் இருந்த மந்த நிலை மாறும். கம்பீரமாக நடைபோடுவீர். மே 27 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் பொருளாதார நிலையை உயர்த்துவார். முயற்சி செய்தும் வராமல் இருந்த பணம் வரும். தொழிலில் ஏற்பட்ட போராட்ட நிலை மாறும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.ஜூன் 10 முதல் சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு நிலை மாறும். சிலருக்கு சொந்த இடம் வீடு வாகனம் என்று அமையும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வசதியான இடத்திற்கு குடியேறுவீர். வேலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக சிலர் வசிக்கும் ஊரை விட்டு வெளியூருக்கு செல்வீர். சிலர் வசதிக்காக இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வீர். மே 26 முதல் குரு பகவான், உங்களுக்கு பாக்ய குருவாக சஞ்சரிப்பதால் சங்கடம் விலகும். வாழ்க்கையில் புதிய பாதைத் தெரியும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும்.சந்திராஷ்டமம்: மே 20.அதிர்ஷ்ட நாள்: மே 18, 23, 27. ஜூன் 5, 9, 14.பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

தனுசு: மூலம்நியாயம் நேர்மையை மூச்சாக கொண்டு தர்ம சிந்தனையோடு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். கேது பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தெய்வ அருள் கிட்டும். பெரியோரின் ஆதரவு ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். மே 26 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால், சனி பகவானின் 10 ம் பார்வையால் ஏற்படும் சங்கடம் விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர் பார்ப்பு பூர்த்தியாகும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கி எதிர்பார்த்த வருமானம் வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தேர்தலில் உழைத்த உழைப்பிற்கு தலைமையின் பரிசு கிடைக்கும். மே 26 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அவருடைய பார்வைகளால் உங்கள் நிலை உயரும். விரய செலவு கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பு விலகும். உணவகம், விவசாயம், மருத்துவம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றம் அடையும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களின் கவலைகள் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகி ஆரோக்கியமாக நடைபோடுவீர்.சந்திராஷ்டமம்: மே 21.அதிர்ஷ்ட நாள்: மே 16, 25, 30. ஜூன் 3, 7, 12.பரிகாரம்: மணக்குள விநாயகரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.பூராடம்: அதிர்ஷ்ட தேவதையின் அருள் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். ஜூன் 10 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் ஆடம்பர செலவு அதிகரிக்கும். தனக்குப் பிடித்தமானவருக்காக செலவு செய்வீர்கள். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு அந்தஸ்து உயரும். தேர்தல் களத்தில் வேலைப்பார்த்தவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சூரியன் வைகாசி மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் உங்களுக்குள் இருந்த பயம் போகும். புதிய வலிமை உண்டாகும். ஆரோக்கியமாக செயல்படுவீர். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உத்தியோகத்தில் தோன்றிய பிரச்னை  முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பதவியிலும் உயர்வு ஏற்படும். அரசு வழி முயற்சி சாதகமாகும். வம்பு வழக்கு என சிரமப்பட்டவர்களுக்கு விடுதலைக் கிடைக்கும். செல்வாக்கு உயரும். சகாய ஸ்தானத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சி எல்லாம் பெரியதாகவே இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வெளிநாட்டு வர்த்தகம் லாபம் தரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மே 27 வரை வித்யாகாரகன் புதன் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.சந்திராஷ்டமம்: மே 22.அதிர்ஷ்ட நாள்: மே 15, 21, 24, 30. ஜூன் 3, 6, 12.பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட நினைத்த வேலை நடக்கும்.உத்திராடம் 1 ம் பாதம்: வாழ்க்கையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் உழைப்பிற்கும் முயற்சிக்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும். அரசு வழியில் எடுக்கின்ற வேலை வெற்றியாகும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் தேடி வரும். தனியார் துறையில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு இருந்த சங்கடம் விலகும். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சிலருக்கு வேறு நிறுவனத்தில் சம்பள உயர்வுடன் தகுதிக்குரிய வேலையோடு அழைப்பு வரும். வியாபாரம் தொழிலில் இருந்த மந்த நிலை மாறி லாபம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு வெளிநாட்டு ஆர்டர் கிடைக்கும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தி ஆதாயம் காண்பீர்கள். பங்குதாரர்கள் மனம் கோணாதபடி நடந்து கொள்வர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு அல்லது பதவி கிடைக்கும். உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டவர் இந்த நேரத்தில் உங்களை விட்டு விலகி இருப்பர். நினைத்ததை சாதித்திடக் கூடிய அளவிற்கு செல்வாக்கு உயரும். கௌரவம் அந்தஸ்து என்பதெல்லாம் தேடி வரும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்கிடக்கூடிய நிலை உண்டாகும். தம்பதிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். பொருளாதார நிலை உயரும். ஆலோசகர்களாக வாழ்ந்து வருபவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பர். பணியாளர்களுடைய ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் சீராகும். விவசாயிகளுக்கு நிம்மதியான நிலை உருவாகும்.சந்திராஷ்டமம்: மே 23.அதிர்ஷ்ட நாள்: மே 19, 21, 28, 30. ஜூன் 1, 3, 10, 12.பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். தடைகள் விலகும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்முன்னேற்றம் ஒன்றையே லட்சியமாக கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய மாதம். கடந்த கால அனுபவங்களைக் கொண்டு எடுத்த வேலைகளில் வெற்றி அடைவீர். உங்கள் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். பிறரை சிந்திக்க வைக்கும் அளவில் உங்கள் செயல்பாடு இருக்கும். புகழ் அந்தஸ்து கௌரவம் உயரும். அரசியல்வாதிகள் சிலருக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அனைத்திலும் வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் உழைப்பு அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடியும். வியாபாரம் தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். அரசு ஊழியர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் யோசித்து செயல்படுவது நல்லது. பெண்களுக்கு நேற்றைய கனவு நனவாகும். ஆடை ஆபரணம் சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். மாணவர்களுக்கு படிப்பின்மீது அக்கறை கூடும். விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற லாபம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: மே 23.அதிர்ஷ்ட நாள்: மே 17, 19, 26, 28. ஜூன் 1, 8, 10.பரிகாரம்: வடாரண்யேசுவரரை வழிபட சங்கடம் விலகி நன்மை நடக்கும்.திருவோணம்: ஒரு முடிவினை எடுத்து அதை நோக்கி மட்டும் நடைபோடக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம்.ராசிநாதன் சனிபகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து நெருக்கடிக்கு ஆளாகி வந்த உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். வருமானம் உயரும். கடன் தொல்லை விலகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நெருக்கடி முடியும். செய்து வரும் தொழில் லாபம் தரும். மனக்குழப்பம் விலகும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்று கவலை மாறும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். தொழிலை விரிவு செய்வதற்காக எடுக்கும் முயற்சி வெற்றி தரும். உங்கள் சுக ஸ்தானதிபதி செவ்வாய், சுக ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உழைப்பாளர் நிலை உயரும். உழைப்பை முதலீடாக வைத்து நடைபெறும் வேலை லாபம் தரும். மே 27 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பங்குச் சந்தையில் எதிர்பார்த்த லாபம் வரும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த லோன் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். மாதத்தின் முற்பகுதியில் குரு பார்வை கிடைப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர். சிலர் அடமானம் வைத்திருந்த சொத்துகளை மீட்டெடுப்பீர். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் நிலையில் ஏதேனும் சங்கடங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பார். உடல் நிலையிலும் அவ்வப்போது ஏதேனும் பிரச்னை தலைக்காட்டும். கவனமாக இருப்பது நல்லது. தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதினருக்கு மணநாள் முடிவாகும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: மே 24.அதிர்ஷ்ட நாள்: மே 17, 20, 26, 29. ஜூன் 2, 8, 11.பரிகாரம் உச்சிப்பிள்ளையாரை வழிபட அஷ்டம கேதுவின் பாதிப்பு விலகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்: எடுக்கும் வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். உங்கள் சுக ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சியாக சஞ்சரிப்பதால் புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர். பாதியில் நின்ற கட்டுமான வேலைகளில் வளர்ச்சி ஏற்படும். கடினமாக உழைத்திடக்கூடிய உங்களுக்கு இந்த மாதத்தில் அதற்குரிய பலன் கிடைக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு ஏற்படும். இதுவரை சந்தித்து வந்த சங்கடம் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். மே 26 முதல் சப்தம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால், நீண்ட நாள் கனவு  நனவாகும். பாதியில் நின்ற வேலை முடியும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடி வரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் செல்வாக்கு உயரும்.  திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு திருமணம் கூடும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். பெரியோரின் ஆதரவும் ஆசியும் கிடைக்கும். தெய்வ பலம் கூடும். விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை கூடும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மே 25.அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 26, 27. ஜூன் 8, 9.பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.

கும்பம்: அவிட்டம் 3, 4 ம் பாதம்உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். செவ்வாய் பகவான் சகாய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலை யாவும் வெற்றியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு அது நிரந்தரமாகும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தேவையான பணம் வரும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமையை நிர்வாகம் புரிந்து கொண்டு எதிர்பார்த்த சலுகைகளை வழங்கும். அரசியலில்  இருப்பவர்களுக்கு பொறுப்பு பதவி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பெரிய அளவில் தொழில் செய்து வருபவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். மருத்துவச் செலவு கட்டுப்படும். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும் மாணவர்களுக்கு கடுமையான முயற்சிக்குப்பின் எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மே 25.அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 26, 27. ஜூன் 8, 9.பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்சதயம்: தங்களுடைய முன்னேற்றத்திலும் சுய வாழ்விலும் கண்ணும் கருத்துமாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். ராசிக்குள் சஞ்சரிக்கும் யோகக்காரகன் ராகுவிற்கு மே 26 வரை குரு பார்வை இருப்பதால் செல்வாக்கு உயரும். உங்கள் திறமை பளிச்சென்று வெளிப்படும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். லாபம் உண்டாகும். இதுவரை இருந்த சங்கடம் பிரச்னை போராட்டம் எல்லாம் விலகி நன்மை நடக்கும். நினைத்தபடி நினைத்த வேலை நடக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். மே 27 வரை வித்யாகாரகன் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். எந்த வேலையை எப்படி முடிப்பது? நினைத்ததை எப்படி சாதிப்பது என்ற திட்டத்துடன் செயல்பட்டு லாபம் காண்பீர். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலக ஆரம்பிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வழக்கு சாதகமாகும். சுக ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். ஓய்வு உறக்கம் என்பது இந்த நேரத்தில் இல்லாமல் போகும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்னை விலகும். விவசாயத்தில் லாபம் கூடும்.சந்திராஷ்டமம்: மே 26.அதிர்ஷ்ட நாள்: மே 17, 22, 31. ஜூன் 4, 8, 13.பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட சங்கடம் விலகி நன்மை நடக்கும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: நன்மை தீமைகளை அறிந்து எல்லோருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். குரு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வசதி வாய்ப்பு கூடும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும் ஜூன் 10 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழில் விருத்தி அடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆடை ஆபரணச்சேர்க்கை உண்டாகும். மாதத்தின் முற்பகுதியில் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகுவிற்கும், பிற்பகுதியில் தன குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கும் குரு பார்வை உண்டாவதால் ஏழரைச்சனியின் பாதிப்பு குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைப்பதுடன் எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயம் செழிக்கும். மாணவர்களுக்கு முயற்சி வெற்றியாகும். பெண்களுக்கு நிம்மதியாக இருப்பர். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். ஆடை ஆபரணம் சேரும்.சந்திராஷ்டமம்: மே 27.அதிர்ஷ்ட நாள்: மே 17, 21, 26, 30. ஜூன் 3, 8, 12.பரிகாரம்: சுவேதாரண்யேசுவரரை வழிபட நன்மை உண்டாகும். செல்வாக்கு உயரும்.

மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம்எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைக்கும் எண்ணம் பூர்த்தியாகும். இழுபறி வேலை முடியும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மற்றவர்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு நிலை மாறும். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சியாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்னை முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வரவு அதிகரிக்கும். உங்கள் சொல்வாக்கிற்கு மரியாதை ஏற்படும். கடனாக கொடுத்த பணம் வாசல் தேடி வரும். பெண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். நிம்மதியான நிலை உண்டாகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் இருப்போரின் ஆதரவு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் வரும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட இடைவெளி விலகும். சுய தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்னை முடியும். சிலர் செய்து வரும் தொழிலை விரிவு செய்வீர். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: மே 27.அதிர்ஷ்ட நாள்: மே 21, 30. ஜூன் 3, 12.பரிகாரம்: நெல்லையப்பரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.உத்திரட்டாதி: புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உடலில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடியும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். செல்வாக்கு உயரும். நோய் நொடி என்பவருக்கு மருத்துவச்செலவு குறையும். ஆத்மகாரகன் சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தைரியம் தன்னம்பிக்கை வேகம் கூடும். அரசியல்வாதி செல்வாக்கு உயரும். தலைமையின் நம்பிக்கைக்குரியவராக இருப்பீர். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும். ஜென்ம சனியால் சங்கடப்படுபவருக்கு சுய ஜாதகம் பலமாக இருப்பின் சங்கடம் விலகும். மே 26 முதல் ராசிநாதன் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் நெருக்கடி நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சி நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வருவதுடன் சிலருக்கு திருமணம் முடியும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும். விவசாயத்தில் லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னை நோய் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.சந்திராஷ்டமம்: மே 28.அதிர்ஷ்ட நாள்: மே 17, 21, 26, 30. ஜூன் 3, 8, 12.பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட தடை விலகும். எடுக்கும் வேலை முடியும்.ரேவதி: திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். இம்மாதம் முழுவதும் ஆத்ம காரகன் சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் திறமை வெளிப்படும். செல்வாக்கு உயரும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் எதிர்ப்பு இல்லாத நிலை ஏற்படும். உடல்நிலை சீராகும். வழக்கு வெற்றியாகும். மே 27 முதல்  புதன் கேந்திர பலம் பெறுவதால் பலவீனமாக இருந்தவர்களும் பலமிக்கவர்களாக மாறுவீர். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர். எடுத்த வேலையை முடித்துக் காட்டுவீர். எதிர்பார்த்த பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம் வீடு வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அடமானத்தில் இருந்த பத்திரம், பொருட்கள் வீட்டிற்கு வரும். மே 26 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஞானக்காரகன் குருவால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.  குழந்தைக்காக தவமிருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். மனக் குழப்பம் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உங்கள் திறமை வெளிப்படும். கையில் பணம் புரளும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்களை நீங்களே மாற்றிக்கொண்டு செயல்படுவீர். சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் இருக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும்.தம்பதிக்குள் இடையே ஏற்பட்ட பிரச்னை முடியும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்.சந்திராஷ்டமம்: மே 29, 30.அதிர்ஷ்ட நாள்: மே 21, 23. ஜூன் 3, 5, 12, 14.பரிகாரம்: வேதபுரீஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us