பூசணிக்காய் பர்பி ரெசிபி இதோ

தேவையானப் பொருட்கள்: பூசணிக்காய் - 1 கிலோ, நெய் - 150 கிராம், சர்க்கரை - ஒரு கப், இனிப்பு இல்லாத கோவா - 200 கிராம்.

பால் - அரை லிட்டர், ஏலக்காய் துாள் - 1 டீஸ்பூன், பாதாம், முந்திரி - கால் கப், புட் கலர் - 1 சிட்டிகை.

பூசணிக்காயை தோல் நீக்கி, விதைகளை அகற்றி, கெட்டியான வெளிப்பகுதி காயை மெல்லியதாக துருவி கொள்ளவும். பின், கூடுதல் நீரை கையால் பிழிந்து எடுக்கவும்.

அடுப்பில் அடி கனமான பாத்திரம் அல்லது கடாயை வைத்து, சிறிது நெய் ஊற்றி, சூடானவுடன் துருவிய பூசணிக்காயை சேர்த்து, 5-7 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்.

பூசணிக்காய் மிருதுவான பின், பால் சேர்த்து, நன்றாக சுண்டி, பூசணிக்காய் வேகும் வரை, கை விடாமல் கிளறவும்.

பாலும், காயும் சேர்ந்து கெட்டியான பின், சர்க்கரையை சேர்க்கவும். ஒரிரு நிமிடங்களுக்கு பின், கோவாவை சேர்த்து, நன்றாக கிளறவும்.

கலவை பாத்திரத்தை விட்டு பிரிந்து வரும் போது, ஏலக்காய் பொடி, மீதமுள்ள நெய், நெய்யில் வறுத்து பொடித்த பாதாம், முந்திரி பருப்பு மற்றும் புட் கலர் சேர்த்து கிளறவும்.

ஒரு தட்டில் நெய் தடவி, பர்பியை கொட்டி பரப்பவும். அதன் மீது உலர்ந்த பழங்களை துாவி அலங்கரித்தும் 2 - 3 மணி நேரம், அப்படியே வைத்திருக்கவும்.

பின்னர், விருப்பமான வடிவத்தில் வெட்டினால், சுவையான பூசணிக்காய் பர்பி இப்போது ரெடி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.