PUBLISHED ON : மே 13, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
நீண்டகால சபாநாயகர்
சென்னை மாநில சட்டசபையில் 1952ல் முதல் சபாநாயகராக சிவசண்முகம் பதவி வகித்தார். அதை தொடர்ந்து 1968 வரை மொத்தம் 5 பேர் இப்பதவியை வகித்தனர். பின் 1969ல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்த பின், சட்டசபையின் முதல் சபாநாயகராக புலவர் கோவிந்தன் பதவி வகித்தார். தற்போது 15வது சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் நேற்று பதவியேற்றார். தமிழகத்தில் 1952ல் இருந்து இன்று வரை 20 பேர் சபாநாயகர் பதவி வகித்துள்ளனர். இதில் நீண்டகாலம் பதவி வகித்தவர் பி.தனபால். இவர் 2012 அக். 10 - 2021 மே 3 வரை பதவியில் இருந்தார்.
