உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் தயாராகும் 'ஜோம்பி' படங்கள்

தமிழில் தயாராகும் 'ஜோம்பி' படங்கள்


ஹாலிவுட்டில் 'ஜோம்பி' படங்கள் என்ற தனி ரகம் உண்டு. அதற்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது ஓடிடியின் வருகைக்கு பிறகு ஜோம்பி படங்கள், தொடர்களின் வருகையும் அறிவித்திருக்கிறது. கொடூர வைரசலால் தாக்கப்படும் மக்கள் மனித ரத்தம் குடிக்கும் ஜோம்பிளாகிவிடுவார்கள். ஜோம்பிகள் யார் ரத்தத்தை கடித்து குடிக்கிறார்களோ அவர்களும் ஜோம்பிகாளாகிவிடுவார்கள். இந்த சங்கிலி தொடரால் ஜோம்பிகள் பெருகும்போது அரசும், போலீசும் அவர்களை அழித்து மிச்சமுள்ள மக்களை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் பொதுவான சோம்பி கதை.

தமிழில் முதல் ஜோம்பி கதை ரவிமோகன் நடித்த 'மிருதன்' தான். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் அது கைவிடப்பட்டது. அதன் பிறகு 'பல்லு படாம பாத்துக்கணும்' என்ற பெயரில் சிறிய பட்ஜெட்டில் தயாரான ஒரு ஜோம்பி படம் வெளிவந்தது. இந்த படம் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் தற்போது இரண்டு ஜோம்பி படங்கள் தயாராகி வருகிறது. சந்தானம் தற்போது நடித்து வரும் 'லவ் பைட்' என்ற படம் ஜோம்பி ஜார்னரில்தான் தயாராகிறது. ஒரு கிராமத்தில் ஜோம்பிகள் உருவாகிறார்கள். அவர்களுக்கு பரிகார பூஜை செய்து புதைத்து விடுகிறார்கள் கிராம மக்கள். அந்த ஊருக்கு திருடச் செல்லும் சந்தானமும், ஆனந்தராஜூம் செய்யும் குழப்பத்தால் ஜோம்பிகள் மீண்டும் எழுந்து வருகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.

பிரபுதேவா வடிவேலு நடித்து வரும் 'பேங் பேங்' என்ற படமும் ஜோம்பி ஜானர்தான். ஒரு இடத்தில் பெருகி விட்ட ஜோம்பிகளை அழிக்க அதில் நிபுணர்களான பிரபுதேவதாவும், வடிவேலும் செல்கிறார்கள். அழிக்கும் நடவடிக்கையில் இருவருமே ஜோம்களிடம் கடிபட்டு ஜோம்பிகளாகி விடுகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

இந்த படங்களில் 'லவ் பைட்' படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'பேங் பேங்' படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இந்த படங்கள் தவிர சின்ன பட்ஜெட்டில் வேறு சில படங்களும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !