பாதுகாப்பை முன்னிட்டு பிறந்தநாளில் ரசிகர்களை சந்திப்பதை தவிர்த்த ஷாருக்கான்
சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டு சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.. இதனைத் தொடர்ந்து பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பலருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் ஷாருக்கான் இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.. வழக்கமாக தனது பிறந்த நாளன்று மும்பை மன்னாட்டில் உள்ள தனது இல்லத்தில் பால்கனிக்கு வந்து தன்னை சந்திக்க காத்திருக்கும் ரசிகர்களுக்கு கையசைத்து அவர்களது வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்வார்.
ஆனால் தற்போது பாதுகாப்பு கருதி இந்த முறை பால்கனி சந்திப்பை அவர் தவிர்த்து உள்ளார்.. அதற்கு பதிலாக தனது கையால் எழுதப்பட்ட கடிதம் மூலம் ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். தனது ரசிகர்கள் வீட்டிற்கு வந்து ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்கள் மூலம் இந்த கடிதத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்..