உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகனின் முதல் பிறந்தநாளை ஜாய் கிறிஸ்டில்டா உடன் கொண்டாடிய மாதம்பட்டி ரங்கராஜ்

மகனின் முதல் பிறந்தநாளை ஜாய் கிறிஸ்டில்டா உடன் கொண்டாடிய மாதம்பட்டி ரங்கராஜ்

பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு பக்கம் தனது பிரம்மாண்ட சமையற்கலை காரணமாக அறியப்பட்டவர். அதேசமயம் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது, அதன்பிறகு அவர் கர்ப்பமானதைத் தொடர்ந்து அந்த குழந்தை தன்னுடையது இல்லை என்று கூறி விலகியது உள்ளிட்ட காரணங்களால் பரபரப்பாக பேசப்பட்டார். இது குறித்து காவல்துறையிலும் ஜாய் கிறிஸில்டா புகார் அளித்தார். கோர்ட்டிலும் வழக்கு நடந்தது. பின்னர் அவருக்கு ராகா ஆண் குழந்தை பிறந்தது.

அதற்கு டி.என்.ஏ. சோதனை செய்யப்பட்டதில் மாதம்பட்டி ரங்கராஜ் தான் குழந்தையின் தந்தை என உறுதியானது. பின்னர் அவரும் அதை ஒப்புக்கொண்டு தனது குழந்தையின் எதிர்காலத்துக்கான அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் மகன் ராகா ரங்கராஜனின் முதல் பிறந்தநாளை ஜாய் கிறிஸ்டில்டாவுடன் இணைந்து கொண்டாடியுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.. இது குறித்த புகைப்படங்களை ஜாய் கிறிஸ்டில்டா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க, மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவியான ஸ்ருதி தனது பங்கிற்கு தங்களது குடும்ப புகைப்படம் ஒன்றையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் தனது மகன்களுடன் தானும் கலந்து கொண்ட புகைப்படத்தை தான் பதிவிட்டுள்ளார் ஸ்ருதி ரங்கராஜ்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !