பெண் குழந்தைக்கு தந்தை ஆனார் 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர்
ADDED : 2 hours ago
கடந்த வருடம் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கினார். மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்ற தன்னுடைய இந்த முதல் படத்திலேயே அபிஷன் ஜீவிந்த் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.. பிறகு 'வித் லவ் படத்தில் கதாநாயகனாக நடித்து அதிலும் வெற்றி பெற்றார்.
'டூரிஸ்ட் பேமிலி' படம் வெளியான கையோடு தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார் அபிஷன் ஜீவிந்த். இந்த நிலையில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு பெண் குழந்தையின் தந்தை ஆகிவிட்டேன் என இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக தெரிவித்துள்ளார் அபிஷன் ஜீவிந்த்.