தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் திருமணம் : திரைப்பிரபலங்கள் வாழ்த்து
ADDED : 8 hours ago
பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக்ரவிக்கும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேத்தி செந்தாமரைக்கும் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
நேற்றுமுன்தினம் மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபு, சரத்குமார், பிரபுதேவா, தனுஷ், சிவகார்த்திகேயன், அர்ஜூன், சசிகுமார், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, நெப்போலியன், ஹிப்ஹாப் ஆதி, நடிகைகள் மீனா, அபிராமி , குஷ்பு, அம்பிகா, உட்பட 100க்கும் அதிகமான திரைபிரபலங்கள் பங்கேற்றனர். யுவன்சங்கர்ராஜா, ஆண்ட்ரியா, மனோ பாடிய இசைக்கச்சேரி நடந்தது.
நேற்று காலை நடந்த திருமணத்தில் நடிகர்கள் சிவகுமார் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர். ஏராளமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கல்வியாளர்களும் வாழ்த்தினர்.