உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் வினீத் சீனிவாசனுக்கு முன்னாள் டிஜிபி சொன்ன அறிவுரை

நடிகர் வினீத் சீனிவாசனுக்கு முன்னாள் டிஜிபி சொன்ன அறிவுரை

மலையாளத்தில் இயக்குனர், நடிகர், பாடகர் என பன்முக வித்தகராக வலம் வருபவர் நடிகர் வினீத் சீனிவாசன். சமீபத்தில் இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் தனது மகள் தன் உரிமைகளை அறிந்து, எதற்கும் பயப்படாமல் நிலைப்பாடுகளில் நின்று, உறுதியாக வளர வேண்டும் என்றும், டில்லி போராட்டத்தில் கவனம் ஈர்த்த நேஹா போரா போல தன் மகள் மாற வேண்டும் என்று குறிப்பிட்டு சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.. இந்த நேஹா போரா ஜவாஹர்லால் நேரு யுனிவர்சிட்டியை சேர்ந்த மாணவி மற்றும் மாணவர் அமைப்பின் தேசிய தலைவரும் கூட.. அரசுக்கு எதிரான போராட்டங்களில் முதல் ஆளாக நிற்கும் நபர், அவரைப் போல தன் மகள் வளர வேண்டும் என வினீத் சீனிவாசன் கூறியது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதனை கவனித்த முன்னாள் டிஜிபி டி.பி. சென்குமார் என்பவர் வினீத் சீனிவாசனின் இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் நேஹா போராவை போன்ற ஒரு மகளை வளர்க்க ஆசைப்படுவதற்கு பதிலாக, வினீத்தும் மற்றவர்களும் பத்ர கீர்த்தியை போன்ற ஒரு மகளை வளர்க்க வேண்டும் என்றே ஆசைப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பாலக்காட்டில் சொரநாட்டில் ஒரு 17 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி பலியான ஒரு நபரின் மகள் தான் இந்த பத்ர கீர்த்தி. தனது தந்தையின் மரணத்திற்காக நீதி கேட்டு தனி ஆளாக காவல் நிலையம் முன்பு அவர் நடத்திய தைரியமான போராட்டமும், அரசின் கவனத்தை ஈர்த்த விதமும் கேரளாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெண்களின் உண்மையான சக்திக்கு அதுவே சிறந்த உதாரணம் என்றும், தந்தையின் இழப்புக்கு பின் துணிச்சலுடன் போராடும் பத்ர கீர்த்தியைத் தான் இன்றைய தலைமுறைக்கு முன்மாதிரியாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !