உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சலசலப்பை ஏற்படுத்திய சாரா அலிகானின் கேதார்நாத் வழிபாடு

சலசலப்பை ஏற்படுத்திய சாரா அலிகானின் கேதார்நாத் வழிபாடு

பாலிவுட் பிரபல நடிகையும் நடிகர் சைப் அலிகானின் மகளுமான சாரா அலிகான் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கேதார்நாத் கோயிலுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் அங்கு சென்று கைகூப்பி வழி நின்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகின.

இஸ்லாமிய பின்னணியை கொண்ட ஒருவர் பிற மத வழிபாட்டு தலத்திற்கு சென்று வழிபாடு நடத்துவது குறித்து இஸ்லாமிய மதகுரு ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஷரியத் சட்டத்தின்படி இது அனுமதிக்க முடியாதது மற்றும் தடை செய்யப்பட்டது என்று கூறியுள்ள அவர், மேலும் சாரா அலிகான் தான் செய்த இந்த செயலுக்காக ஒரு குற்றவாளியை போல மனம் வருந்தி அல்லாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் கோயில் கமிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரியான சோகன் சிங் ரங்கா கூறுகையில், ‛‛சாரா அலிகான் குழுவினர் கோயில் விதிகளின்படி இந்து அல்லாதவர்கள் வழிபாட்டில் ஈடுபடுவதற்கான பிரமாண பத்திரத்தை கோயில் நிர்வாகத்தில் முறையாக சமர்ப்பித்து இருந்தனர்'' என்று கூறியுள்ளார்.

சாரா அலிகான் தனது முதல் படமான கேதார்நாத் வெளியீட்டு காலத்திலிருந்து இதுபோன்ற பலமுறை இங்கே தொடர்ந்து வருகை தந்து வருகிறார் என்றாலும், அவ்வப்போது இது மத ரீதியான சர்ச்சையாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !