உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷாரூக்கானின் 'கிங்' : வெளிநாட்டு உரிமையில் புதிய சாதனை

ஷாரூக்கானின் 'கிங்' : வெளிநாட்டு உரிமையில் புதிய சாதனை

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான், சுஹானா கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் ஹிந்திப் படம் 'கிங்'. டிசம்பர் 24ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாக உள்ளது. சுமார் 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் வெளிநாட்டு உரிமை வியாபாரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இதுவரை எந்த ஒரு இந்தியப் படமும் விற்காத விலையில் 175 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தத் தொகையை லாபத்துடன் பெற மொத்தமாக சுமார் 425 கோடி வசூலித்தாக வேண்டுமாம்.

வெளிநாடுகளில் அந்த அளவிற்கு வசூலைப் பெற்ற இந்தியப் படங்களாக “பாகுபலி 2, பதான், ஜவான், துரந்தர் 2' ஆகியவை உள்ளன. அவற்றில் இரண்டு படங்கள் ஷாரூக்கான் நடித்த படங்கள் என்பதால் 'கிங்' படம் இந்த அளவிற்கு விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் விடுமுறையில் இந்தப் படம் வெளிவருவதுதான் அதற்கு முக்கியக் காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !