உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் தொடரில் நடிக்கிறார் பாவனா

தமிழ் தொடரில் நடிக்கிறார் பாவனா

மிஷ்கின் இயக்கிய 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழுக்கு வந்த மலையாள நடிகை பாவனா, அதன்பிறகு வெயில், தீபாவளி, கூடல் நகர், அஜித்துடன் அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் தமிழில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 'சோனி விழா' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும், 'நோட்புக் 90ஸ்: காதல் பிளாஷ்பேக்' என்ற தொடரில் நடிக்கிறார். இந்த தொடர் நவம்பர் மாதம் 23ம் தேதி முதல் இரவு 7,30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பின்னர் இந்த தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.

பள்ளி மாணவர்களுக்கு இடையே வரும் இனக் கவர்ச்சியை காதல் என்று புரிந்து கொள்ளப்பட்டு அதனால் ஏற்படும் பிரச்னைகளை பேசும் தொடராக இது உருவாகிறது. இதில் பிரச்னைகளை தீர்க்கும் ஆசிரியையாக பாவனா நடிக்கிறார். இதனை சதாசிவம் இயக்குகிறார். திரைப்பட இயக்குனர் மித்ரன் ஜவஹர் கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்றுகிறார்.

தொடர் குறித்து அவர் கூறும்போது “90களில் நட்பு, குடும்பம் மற்றும் உறவுகளுக்கு ஒரு தனி அழகு இருந்தது. அந்தக் காலத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டு வருவதுடன் அப்போது நம் வாழ்க்கையை அழகாக்கிய அழகிய தருணங்களையும் இந்தத் தொடர் நினைவுபடுத்தும் என்று நம்புகின்றேன். இந்தத் தொடரைப் பார்க்கும் ஒருவர் தனது பழைய நண்பரை நினைத்துப் பார்த்தாலோ தன்னுடைய பழைய நினைவுகளைப் புன்னகையுடன் நினைவுகூர்ந்தாலோ அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !