உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛எல்லம்மா' படத்தில் 100 நாட்டுபுற இசைக் கலைஞர்ளுடன் பாடல் பதிவு செய்த தேவிஸ்ரீ பிரசாத்

‛எல்லம்மா' படத்தில் 100 நாட்டுபுற இசைக் கலைஞர்ளுடன் பாடல் பதிவு செய்த தேவிஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக நடிக்கும் படம் ‛எல்லம்மா'. 'பலாகம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த வேணு எல்தண்டி இயக்குகிறார். தேவிஸ்ரீ பிரசாத்தை இசையும் அமைக்கிறார். எல்லம்மா என்பது ஒரு காவல் தெய்வத்தின் பெயர் ஆகும். இந்த படம் அதன் பின்னணியில் உருவாவதாக கூறப்படுகிறது.

இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100 பாரம்பரிய நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் இணைந்து, 'எல்லம்மா' படத்தின் டைட்டில் பாடலைப் தேவிஸ்ரீ பிரசாத் பதிவு செய்துள்ளார். விரைவில் இந்த பாடல் வெளியாக உள்ளது.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் 'எல்லம்மா' படம் 2027, மார்ச் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !