உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தீபாவளியை முன்னிட்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சசி படம்

தீபாவளியை முன்னிட்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சசி படம்

சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி நடித்துள்ள படம் ‛நூறு கோடி வானவில்'. கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், மூர்த்தி உட்பட பலர் நடித்துள்ள. இப்படத்தை மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கபா மற்றும் அருண் அருணாசலம் புரொடக் ஷன் சார்பில் அருண் அருணாசலம் தயாரித்துள்ளனர். படம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் சில பிரச்னையால் படம் வெளியாகவில்லை. தற்போது படம் வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. இப்படம் நவ., 6ல், ஜீ 5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையில் இப்படத்தைக் காணலாம்.

படம் பற்றி சசி கூறும்போது, இந்தப் படம் காதல் பற்றியும், மனிதர்கள் வளர வளர உறவுகள் எவ்வாறு மாறுகின்றன, அவர்களின் எதிர்பார்ப்புகள் எவ்வாறு மாறுகின்றன, வாழ்க்கை அவர்களுக்கு எத்தகைய கடினமான முடிவுகளை முன் வைக்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிறது. காதல் எப்போதும் நேரான பாதையில் செல்லும் பயணமாக இருப்பதில்லை. நாம் எடுக்கும் முடிவுகள், அக்கறை கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ரசிகர்கள் இந்தக் கதாபாத்திரங்களுடன் தங்களை இணைத்துப் பார்த்து, தங்கள் வாழ்க்கையின் சில அம்சங்களை இந்தப் படத்தில் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !