ராம்சரண் - சுகுமார் படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த சிரஞ்சீவி!
ராம்சரண் மற்றும் சுகுமார் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமான 'ஆர்.சி -17', ஹைதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் இன்று பாரம்பரியமான பூஜை சடங்குடன் முறைப்படி தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார்.
படத்தின் முதல் முகூர்த்த காட்சிக்கு சிரஞ்சீவி கிளாப் அடித்துத் தொடங்கி வைத்துள்ளார். இந்த பிரமாண்ட தொடக்க விழாவில் ராம்சரண், சுகுமார், சிரஞ்சீவி, தயாரிப்பாளர்கள் மைத்ரி நவீன் மற்றும் ரவிசங்கர், டி-சீரிஸ் தலைவர் பூஷன் குமார், தில் ராஜு மற்றும் வடஇந்திய விநியோகஸ்தர் அனில் ததானி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு மீண்டும் சுகுமாருடன் இணைகிறார். புஷ்பா படத்தின் இரண்டு பாகங்களிலும் அவர் பணியாற்றாத நிலையில், தற்போது இந்த புதிய திட்டத்திற்கு அவரே ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ரத்னவேலுவும் இன்றைய தொடக்க விழாவில் கலந்து கொண்டார். இப்படத்தின் ப்ரீ-லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தங்க நிறங்களின் பரந்த பிரஷ் தூரிகை அடிகளால் வரையப்பட்ட ராம்சரணின் ஸ்டைலான உருவப்படம், ஒரு மயில் தோகையை நினைவூட்டுகிறது.