உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜிவி பிரகாஷ் - கவுதம் மேனன் நடிக்கும் '13'; டிசம்பரில் வெளியிட திட்டம்

ஜிவி பிரகாஷ் - கவுதம் மேனன் நடிக்கும் '13'; டிசம்பரில் வெளியிட திட்டம்


இயக்குநர் கே. விவேக் இயக்கத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ள படம் '13'. இதில் ஆதித்யா கதிர், பவ்ய திரிகா, ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மெட்ராஸ் ஸ்டூடியோஸ், அன்ஷூ பிரபாகர் பிலிம்ஸ் இணைந்து வெளியிடுகிறார்கள்.

யூடியூபராக நடித்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமார், தனது நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து விசித்திரமான, இயற்கைக்கு அப்பாற்பட்ட சூழலில் சிக்கிக்கொள்கிறார். அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே கதை. கவுதம் மேனன் போலீசாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லராக படம் உருவாகிறது.

2012ம் ஆண்டே படத்தின் டீசர் வெளியான நிலையில், சில பிரச்னைகளால் படம் தாமதமானது. தற்போது அனைத்து சிக்கல்களும் முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. டிசம்பரில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

மதிமாறன் இயக்கிய 'செல்பி' படத்தில் ஜிவி பிரகாஷ் - கவுதம் மேனன் இருவரும் இதற்கு முன் இணைந்து நடித்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியல் வரவேற்பை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !