உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐந்து மொழிகளில் பொங்கலுக்கு வெளியாகிறது ஆர்யாவின் 'வேட்டுவம்'

ஐந்து மொழிகளில் பொங்கலுக்கு வெளியாகிறது ஆர்யாவின் 'வேட்டுவம்'

பா. இரஞ்சித் இயக்கி, தயாரித்துள்ள படம் 'வேட்டுவம்'. ஆர்யா, தினேஷ், ஷபீர், ஷோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் 'வேர்ல்டு ஆப் வேட்டுவம்' என்ற வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அப்போகலிப்டிக் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், வெவ்வேறு குழுக்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டிகள், மோதல்கள், எதிர்பாராத திருப்பங்கள் எனப் பல்வேறு அம்சங்களைக் கொண்ட கதைக்களத்தில் பயணிக்கிறது. பாரம்பரியத் தற்காப்புக் கலைகளான அடிமுறை மற்றும் மல்லகம்பம் உள்ளிட்ட கலைகளை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் சண்டைக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காகப் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் முறையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'தர்மன்', 'சேயோன்' உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவற்றின் வெளியீட்டுத் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், பொங்கல் 2027 வெளியீட்டை முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள 'வேட்டுவம்', பொங்கல் திரையரங்க வெளியீட்டுப் போட்டியில் களமிறங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !