உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'வாரணாசி' ரிலீஸ்: உறுதி செய்த விஜயேந்திர பிரசாத்

'வாரணாசி' ரிலீஸ்: உறுதி செய்த விஜயேந்திர பிரசாத்


ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்குப் படம் 'வாரணாசி'.

இப்படம் 2027 ஏப்ரல் 7ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என சமீபத்தில் சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்தன.

இப்படத்திற்கு கதை எழுதியிருக்கும் ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத், நேற்று திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் 'வாரணாசி' படத்தின் அப்டேட் ஒன்று தாருங்கள் என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு விஜயேந்திர பிரசாத், “ஏப்ரல் 7, 2027ல் இப்படம் தவறாமல் வெளிவரும். அது கன்பர்ம்,” என்றார். அவரது பதில் மூலம் தள்ளிப் போகலாம் என்ற தகவல் வதந்தி என்றாகிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !