உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியாவில் 500 கோடி வசூல் கடந்த 'ஜெயிலர் 2'?

இந்தியாவில் 500 கோடி வசூல் கடந்த 'ஜெயிலர் 2'?


ரஜினிகாந்த், சுராஜ் வெஞ்சாரமூடு, எஸ்ஜே சூர்யா, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் அக்டோபர் 15ல் வெளியான படம் 'ஜெயிலர் 2'.

இப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் உலக அளவில் மொத்தமாக 760 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் இப்படம் 500 கோடி வசூலைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த '2.0' படம் இந்தியாவில் 500 கோடி வசூலைப் பெற்றிருந்தது. தனது சாதனையை எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புரிந்திருக்கிறார் ரஜினிகாந்த்.

தமிழகத்தில் 195 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 93 கோடி, கர்நாடகாவில் 87 கோடி, கேரளாவில் 75 கோடி, வட இந்தியாவில் 50 கோடி என இந்திய வசூல் இருக்கிறது எனத் தகவல்.

இப்படம் முதல் வாரத்தில் 549 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இரண்டாவது வாரத்திய வசூல் அறிவிக்கப்படுமா என ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !