உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இன்றைய ரிலீஸ் 9 படங்கள்: 180ஐக் கடந்த 2026

இன்றைய ரிலீஸ் 9 படங்கள்: 180ஐக் கடந்த 2026


2026ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று அக்டோபர் 30ம் தேதி மொத்தமாக 9 படங்கள் வெளியாகி உள்ளன. 'காதல் போதை, பனி விழும் இரவு, நள்ளிரவு ராஜா அழைப்பு, ராஜா வருகிறேன் உனக்காக, சிங்காரம், எனிமி ஆப்த த ஸ்மக்லர், செய் செய்யாதே, இ 1, புலவர்' என 9 படங்கள் இன்று வெளியாகி உள்ளன.

இத்தனை படங்கள் வெளியானதன் மூலம் 2026ம் ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 187. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அக்டோபர் மாதம் முடிய 226 படங்கள் வெளியாகி இருந்தது. கடந்த ஆண்டை விட சுமார் 40 படங்கள் குறைவாகவே வெளியாகி உள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான 'ஜெயிலர் 2' இன்னும் நிறைய தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் வரை இது அப்படியே தொடர வாய்ப்புள்ளது.

இன்று வெளியாகி உள்ள 9 படங்களுக்கும் குறைவான அளவில்தான் தியேட்டர்கள் கிடைத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !