தென்னிந்திய சினிமாவை சாடும் ராதிகா ஆப்தே
நீண்ட காலமாக தென்னிந்திய திரைத்துறையைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் வெளியிட்டு வருகிறார் ராதிகா ஆப்தே. ரஜினியுடன் கபாலி மற்றும் ரத்த சரித்திரம், லெஜண்ட், லயன், உள்ளிட்ட பல தென்னிந்தியப் படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் நடிகைகளை சரியாக நடத்துவதில்லை என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
தற்போது, கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்துள்ள அக்கா என்ற வெப் தொடரின் விளம்பரப் பணிகளின்போது, தென்னிந்திய திரைத்துறையைப் பற்றி மேலும் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார் ராதிகா ஆப்தே. அவர் கூறுகையில், தான் போதிய சிவப்பு நிறமாக இல்லாததால் தென்னிந்தியப் படங்களில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு சிவப்பு நிறமுடைய வட இந்திய நடிகைகளையே விரும்புவதாகவும், இதனால் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.